Advertisment

Tamil News Updates: ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

Tamil News Live Updates: 06/02/2024 இன்று நடைபெறும் முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM Stalin share post on Spain investors conference Tamil News

Tamil News Updates

Dmk | Aiadmk | tamilnadu news | Pm Modi | Mk Stalin: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

Advertisment

சென்னையில் தொடர்ந்து 626 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டின் எல்லை பாதுகாப்பில் சமரசம் கிடையாது – அமித் ஷா

டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நமது வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கை தெளிவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம். அதே சமயம் நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 06, 2024 23:00 IST
    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு

    உத்திரபிரதேசத்தில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே விடுத்த அழைப்பை ஏற்றக்கொண்ட சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் ராகுல்காந்தியின் பயணத்தில் பங்கேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Feb 06, 2024 22:54 IST
    காரில் கடத்திவரப்பட்ட 510 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

    புதுக்கோட்டை விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 510 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மாலி சம்பா லால் மற்றும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரோனக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Feb 06, 2024 20:54 IST
    அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் சின்னம் ஒதுக்கீடு; சுப்ரியா சுலே பேட்டி

     

    “சிவசேனா கட்சி விவகாரத்தில் என்ன நடந்ததோ அதுவே தேசியவாத காங்கிரஸ் விவகாரத்திலும் நடந்துள்ளது. கட்சியின் பெயரை மட்டும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு பின்னணியில் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி இருக்கிறது” என எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.



  • Feb 06, 2024 20:53 IST
    ஜிடி எக்ஸ்பிரஸ் புறப்படும் இடம் மாற்றம்

    சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லி வரை இயக்கப்படும் ஜிடி எக்ஸ்பிரஸ் நாளை (பிப்.7) முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.



  • Feb 06, 2024 20:11 IST
    தேசியவாத காங்கிரஸ் சின்னம் அஜித் பவாருக்கு ஒதுக்கீடு

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அஜித் பவார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம்  வழங்கியுள்ளது.
    பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
    கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்தார். அப்போது இவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



  • Feb 06, 2024 19:42 IST
    பாரதிய ஜனதா கட்சியால் நோட்டாவை தாண்ட முடியுமா? ஜெயக்குமார் கேள்வி

    பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியாக உள்ளது. அக்கட்சியால் நோட்டாவை தாண்ட முடியுமா? என அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.



  • Feb 06, 2024 19:22 IST
    முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை; மு.க. ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா நன்றி

     

    “நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி
    அதிமுக ஆட்சியில் பல முறை போராட்டங்கள் நடத்தியும் எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்கவில்லை. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியமாகியுள்ளது” என ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.



  • Feb 06, 2024 18:40 IST
    இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை  - ஈரான் அரசு அறிவிப்பு

    இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என அநாட்டு அரசு அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா இல்லாமல் அதிகபட்சம் 15 நாட்கள் வரை தங்கியிருந்து ஈரானை சுற்றிப் பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.



  • Feb 06, 2024 18:28 IST
    பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட் உத்தரவு

    பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் சென்னை - திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 06, 2024 18:27 IST
    தி.மு.க, பா.ஜ.க-வைத் தவிர எதிரிகள் யாரும் இல்லை - டி. ஜெயக்குமார்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்: “தி.மு.க, பா.ஜ.க-வைத் தவிர எதிரிகள் யாரும் இல்லை; குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது தி.மு.க-விற்கு கைவந்த கலை” என்று கூறினார்.



  • Feb 06, 2024 18:24 IST
    பல்கலை. ஆசிரியர்கள் புத்தகங்கள் வெளியிடக் கூடாது - சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 

    சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் புத்தகங்களை வெளியிடக் கூடாது; இதுவரை அனுமதி பெற்று, அனுமதி பெறாமல் வெளியிட்ட புத்தகங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க ஆணையிட்டு பெரியார் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



  • Feb 06, 2024 18:08 IST
    மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி முத்ரா திட்டம் - பிரதமர் மோடி

    பிரதமர் மோடி, “மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி முத்ரா திட்டம்” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 06, 2024 18:08 IST
    தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம் வருமா என காத்திருக்கிறது - கே. பாலகிருஷ்ணன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: “தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம் வருமா என அ.தி.மு.க காத்திருக்கிறது; தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட எதிலும் பிரச்னை இல்லை; பட்டியலினத்தோருக்கு நடக்கும் மோசமான நிகழ்வுகளுக்கு ஏன் அண்ணாமலை குரல் கொடுப்பதில்லை” என்று கேள்வி எழுப்பினார்.



  • Feb 06, 2024 17:15 IST
    தலைமை செயலக விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு

    புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு விசாரணை தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த அரசின் மேல்முறையீடு மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 



  • Feb 06, 2024 16:46 IST
    மத்தியப் பிரதேசம் பட்டாசு ஆலை விபத்து: நிவாரணம் அறிவித்த மோடி 

     மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா பகுதியில் பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

    மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 



  • Feb 06, 2024 16:14 IST
    'டி.ஆர்.பாலு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' - அண்ணாமலை பேச்சு 

    "சாதாரண குடும்பத்தில் இருந்து மத்திய அமைச்சரான எல்.முருகனை விமர்சிப்பதா?. அரசியலில் யார் அன்ஃபிட் என டி.ஆர்.பாலுவால் கூற முடியுமா?. டி.ஆர்.பாலு தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 



  • Feb 06, 2024 16:14 IST
    "டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்" - இணையமைச்சர் எல்.முருகன்

    "வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார். டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்ததால் அவையில் குறுக்கிட்டேன். 

    ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

     



  • Feb 06, 2024 16:11 IST
    பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் வருமானவரி, காவல், வருவாய், புலனாய்வு, சுங்கத்துறை உளளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 



  • Feb 06, 2024 15:28 IST
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டிக்கு ஐகோர்ட் உத்தரவு 

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

     



  • Feb 06, 2024 15:27 IST
    ஆட்டோ சங்கரின் சகோதரருக்கு ஒருமாத விடுப்பு 

    கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒருமாத விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டபோது, மோகனும் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரியும், இடைக்காலமாக அவருக்கு 3 மாத விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்

    ஒரு மாதம் விடுப்பு வழங்க அரசுத்தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ஒரு மாதம் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதித்துள்ளது. 

     



  • Feb 06, 2024 15:26 IST
    பேருந்தில் ஓட்டை - உயிர் தப்பிய பயணி

    சென்னை, அமைந்தகரை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெண் பயணி உயிர் தப்பினார். 



  • Feb 06, 2024 15:25 IST
    அம்மோனியா கசிவு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

    அம்மோனியம் கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 



  • Feb 06, 2024 15:04 IST
    “உட்கட்சி தேர்தல் - உத்தரவு பிறப்பிக்க முடியாது

    “உட்கட்சி தேர்தல் - உத்தரவு பிறப்பிக்க முடியாது“ அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டம்



  • Feb 06, 2024 15:02 IST
    Live-in Relationship தொடங்கிய ஒரு மாதத்திற்குள் அதனை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்

    Live-in Relationship தொடங்கிய ஒரு மாதத்திற்குள் அதனை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் - உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்



  • Feb 06, 2024 14:31 IST
    சித்தராமையா மனு தள்ளுபடி - ரூ.10000 அபராதம்

    சித்தராமையா மனு தள்ளுபடி - ரூ.10000 அபராதம் தங்கள் மீதான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி தலா ரூ.10,000 அபராதம் விதித்தும், மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா ஆஜராகவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Feb 06, 2024 14:19 IST
    வேங்கைவயலில் பட்டியலின ஆணையம் விசாரணை

    வேங்கைவயலில் பட்டியலின ஆணையம் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை நடத்திய தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன்.



  • Feb 06, 2024 14:06 IST
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் காயம்



  • Feb 06, 2024 13:57 IST
    தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் மரணம்

    தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் (63) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2014ம் ஆண்டு எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்ட பரசுராமன், அண்மையில் திமுகவில் இணைந்தார்



  • Feb 06, 2024 13:57 IST
    அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்.டி.பி.ஐ முடிவு

    அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்.டி.பி.ஐ முடிவு. ஈரோடு, பொள்ளாச்சி, மத்திய சென்னை, ராமநாதபுரம், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய  6 தொகுதிகளில் 2-ஐ ஒதுக்க கோரிக்கை. அடுத்த வாரம் இரு கட்சிகளுக்கு இடையே  நடைபெற உள்ள பேச்சுவார்த்தை பின் தொகுதிகள் குறித்து முடிவு.  



  • Feb 06, 2024 13:42 IST
    மக்களவையில் கடும் அமளி- டி.ஆர்.பாலு

    மக்களவையில் கடும் அமளி" - டி.ஆர்.பாலு "வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண நிதி குறித்து மக்களவையில் நான் பேசிய போது, மத்திய அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார்" "எல்.முருகன் குறுக்கிட்ட போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்குமாறு நான் கூறினேன்" "நான் கேள்வி கேட்க கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தொடர்ந்து குறுக்கிட்டார்கள்" டி.ஆர்.பாலு எம்பி விளக்கம்



  • Feb 06, 2024 13:21 IST
    வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி

    "வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி" "இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம்" வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவிப்பு.



  • Feb 06, 2024 12:47 IST
    சென்னையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

    இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுடன் ஆலோசனை 



  • Feb 06, 2024 12:46 IST
    உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் தாக்கல்

    உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் தாக்கல்

    நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

    உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மசோதாவை தாக்கல் செய்தார் 



  • Feb 06, 2024 12:41 IST
    கேரள முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    "மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசு"

    "கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்"

    கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்



  • Feb 06, 2024 12:18 IST
    அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு. 2வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை, தள்ளுபடி செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு



  • Feb 06, 2024 12:08 IST
    மக்களவையில் திமுக - பாஜக கடும் வாக்குவாதம்"

    மக்களவையில் திமுக - பாஜக எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம்.

    வெள்ள நிவாரணம் குறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசிய போது மத்திய அமைச்சர் குறுக்கிட்டதால் வாக்குவாதம்.

    மத்திய அமைச்சரை விமர்சித்து டி.ஆர்.பாலு பேசியதால் பாஜக எம்.பி.க்கள் ஆவேசம். டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக எம்பிக்கள் முழக்கம்



  • Feb 06, 2024 11:47 IST
    இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு: மோடி பிரார்த்தனை

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ், விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு



  • Feb 06, 2024 11:45 IST
    ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

    கடந்த 22ம் தேதி, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மீனவர்கள் 6 பேரையும், இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விடுதலை செய்து உத்தரவு 



  • Feb 06, 2024 11:44 IST
    பாஜக - பாமக இடையே இழுபறி

    மக்களவைத் தேர்தல் பா.ஜ.க - பா.ம.க கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி எனத் தகவல். 12 தொகுதி + 1 ராஜ்யசபா இடத்தை பாமக கேட்பதாகவும், பாஜக 7 இடங்களை தர முன்வருவதாகவும் தகவல். பாஜக ஒதுக்கும்  தொகுதிகளை பாமக ஏற்க முன்வராததால் ஜி.கே வாசன் நடத்திய  பேச்சுவார்த்தையில் இழுபறி



  • Feb 06, 2024 10:58 IST
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணி முன்னேற்றம்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 55% புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பெற்ற வெற்றி காரணமாக புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது



  • Feb 06, 2024 10:33 IST
    கெஜ்ரிவாலின் தனி செயலாளர் வீட்டில் இ.டி ரெய்டு

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி., என்.டி குப்தா, டெல்லி ஜல் போர்டு முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.



  • Feb 06, 2024 10:17 IST
    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் சந்திப்பு

    திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார்.



  • Feb 06, 2024 10:03 IST
    இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு

    ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு ஞானபாரதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 17 வயது பெண்ணை, காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக பழகி வந்த நிலையில், திருமணம் செய்யாமல் மோசடி செய்ததாக இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார்



  • Feb 06, 2024 09:45 IST
    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை

    ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46640க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ5830க்கு விற்பனையாகிறது



  • Feb 06, 2024 09:20 IST
    உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

    உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இன்று அம்மசோதா மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது



  • Feb 06, 2024 08:48 IST
    ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை

    ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Feb 06, 2024 08:29 IST
    மின்சார ரயில் தாமதத்தால் பயணிகள் அவதி

    செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தாமதத்திற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என பயணிகள் கூறுகின்றனர்



  • Feb 06, 2024 08:11 IST
    ஸ்பெயின் பயணம் நிறைவு; சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்

    ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.



  • Feb 06, 2024 08:01 IST
    சென்னை குடிநீர் ஏரிகளின் சராசரி நீர் இருப்பு நிலவரம்

    சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு 83.16% ஆக உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.,யில் தற்போது 9.777 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் - 83.92%

    புழல் - 78.94%

    பூண்டி - 88.24%

    சோழவரம் - 71.32%

    கண்ணன்கோட்டை - 98.2%



  • Feb 06, 2024 07:46 IST
    பிரிட்டன் மன்னர் சார்லஸூக்கு புற்றுநோய்; பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

    பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையைத் தொடங்கியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.



Mk Stalin Dmk Pm Modi Aiadmk tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment