இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 638 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர் இருப்பு 2424 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 758 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 479 மில்லியன் கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 20, 2024 05:04 ISTதேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள் - தங்கம் தென்னரசு நம்பிக்கை
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பயன் தரும் என வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள் என நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
Feb 19, 2024 22:33 ISTபெங்களூருவில் இருந்து தமிழகம் வருகிறது ஜெயலலிதா நகைகள்
ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் பெங்களூருவில் இருந்து தமிழகம் கொண்டு வரப்படுகிறது. மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2024 21:43 ISTகடமை உணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்... இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம் - ஸ்டாலின்
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாக தி.மு.க பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்.. இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்!
— M.K.Stalin (@mkstalin) February 19, 2024
வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும்… pic.twitter.com/0twFKsyWMP -
Feb 19, 2024 21:19 ISTமீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாணக் கோரி... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் எல்.முருகன் மனு
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி மீனவர் சங்கத் தலைவர்களுடன் டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் மனு அளித்துள்ளார். மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண ஜெய்சங்கர் உறுதி அளித்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Feb 19, 2024 21:16 ISTதமிழ்நாடு மிளமுடியாத கடன் வலையை நோக்கி பயணிப்பதை உறுதி செய்துள்ளது பட்ஜெட் - அன்புமணி
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “தமிழ்நாடு மிளமுடியாத கடன் வலையை நோக்கி பயணிப்பதை பட்ஜெட் உறுதி செய்திருக்கிறது. ஓவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன்; ஓராண்டு வட்டி மட்டும் 63,722 கோட்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 19, 2024 20:21 ISTஓட்டுநர் உடலுக்கு இரு மதப்படி சடங்கு - ஐகோர்ட் தீர்ப்பு
காரைக்குடியைச் சேர்ந்த தமது கணவர் பாலசுப்ரமணியன் என்கிற அன்வர் உசேன், மதம் மாறி சையத் அலி பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும் திடீரென இறந்த அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய உடலை ஒப்படைக்கக் கோரியும் முதல் மனைவி சாந்தி தொடர்ந்த வழக்கில், இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லிம் மதப்படி அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2024 20:18 ISTதீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் - நிபந்தனைகளுடன் ஐகோர்ட் அனுமதி
சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2024 19:24 ISTசண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சண்டிகர் மேயர் தேர்தலின் பின்னணியில் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி 30-ம் தேதி தேர்தல் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்ய முடிவு செய்தது. தேர்தல் நடத்தும் அலுவலரால் சிலவற்றில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறிகளைப் புறக்கணிப்பதன் மூலம் முடிவுகளைக் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. வாக்குகளை புதிதாக எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2024 19:14 ISTபட்ஜெட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டம் - திருமாவளவன் பாராட்டு
வட சென்னை வளர்ச்சித் திட்டம் என பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது வரவேற்புக்குரியது என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Feb 19, 2024 19:00 ISTபாகிஸ்தானின் பொருளாதாரத்தை மிஞ்சிய டாடா குழும சந்தை மதிப்பு!
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட டாடா குழும சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதிய அமைப்பு தெரிவித்துள்ளது.
-
Feb 19, 2024 18:34 ISTகரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க நாம் தமிழர் கோரிக்கை
"தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தபின் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
-
Feb 19, 2024 18:15 ISTமக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டி; தொல். திருமாவளவன்
"மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என டெல்லியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டியளித்தார். -
Feb 19, 2024 17:41 ISTவெற்றி துரைசாமி மரணம்: ஓ. பன்னீர் செல்வம் நேரில் ஆறுதல்
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல் கூறினார்.
-
Feb 19, 2024 17:31 ISTசென்னையில் குதிரையேற்ற போட்டி
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் குதிரை ஏற்ற போட்டி நடைபெற உள்ளது
நாளை முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 46 குதிரைகள் மற்றும் 70 வீரர்களும் பங்கேற்க உள்ளனர். -
Feb 19, 2024 16:42 ISTசண்டிகர் மேயர் தேர்தல் - உச்சநீதிமன்றம் அதிரடி
ஆம் ஆத்மி கவுன்சிலர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் தொடர்பாக வாக்குச்சீட்டுகளை நாளை பிற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை சமர்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலம் புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2024 16:39 ISTசரத் பவார் மனுவுக்கு பதிலளிக்க அஜித் பவாருக்கு உத்தரவு
அஜித் பவார் தலைமையிலான அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்த விவகாரம் தொடர்பாக சரத் பவாரின் மேல்முறையீட்டு மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க அஜித் பவாருக்கு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
-
Feb 19, 2024 16:04 ISTகட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை
ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், சுமார் 50 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடத்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. தற்போது இந்த விசாரணைக்கு தடை விதித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
Feb 19, 2024 16:02 ISTகர்நாடகாவுக்கு சென்ற கரும்பு விவசாயி சின்னம் : தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கடிதம்
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
-
Feb 19, 2024 15:59 IST2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு : தமிழக வெற்றிக் கழகம்
2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்கு. தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட வேண்டும். 2 கோடி புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
-
Feb 19, 2024 15:10 ISTதென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படுகிறது : தயாநிதி மாறன் எம்.பி
"தமிழ்நாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படுகிறது" என ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் தயாநிதி மாறன் எம்.பி. கூறியுள்ளார்.
-
Feb 19, 2024 15:00 ISTபாத யாத்திரையின் நிறைவு விழாவில் மோடி பங்கேற்கிறார் - அண்ணாமலை
பல்லடத்தில் 27 ஆம் தேதி நடைபெறும் பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Feb 19, 2024 14:40 ISTநடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை; சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
-
Feb 19, 2024 14:05 ISTஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
-
Feb 19, 2024 13:34 IST'D50’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியீடு
தனுஷ் இயக்கி நடிக்கும், 'D50’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது
-
Feb 19, 2024 13:03 ISTபார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் ஐகோர்ட் அனுமதி
சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். அரசு அளித்த ரூ42 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது
-
Feb 19, 2024 12:33 ISTஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
-
Feb 19, 2024 12:11 ISTமக்களவை தேர்தல்; அ.தி.மு.க சார்பில் நாளை விருப்ப மனு
மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க உறுப்பினர்கள் நாளை முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம், என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.