/indian-express-tamil/media/media_files/BQicMTGOF63vxHDkU7LT.jpg)
Tamil News Updates
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 648 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 77.37% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 84.06% நீர் இருப்பு உள்ளது. புழல் - 70.24%, பூண்டி - 77.13%, சோழவரம் - 69.38%, கண்ணன்கோட்டை - 94.4%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 28, 2024 23:16 IST
ஜார்க்கண்ட் ரயில் விபத்து : 12 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு. தீ விபத்து காரணமாக மற்றொரு ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது எதிரே வந்த ரயில் மோதி கோர விபத்து
-
Feb 28, 2024 23:14 IST
தமிழகத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 28, 2024 21:46 IST
தி.மு.க குறித்து கருத்து : பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எச்சரிக்கை
தி.மு.க என்ற இமயமலை நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது" "திமுகவை இனிப் பார்க்க முடியாது, திமுகவையே இல்லாமல் ஆக்கிவிடுவேன் என பிரதமர் மோடி சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணையப் போகிறார் என எச்சரிக்கிறேன்” பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Feb 28, 2024 21:43 IST
ஜார்க்கண்ட் ரயில் விபத்து : பலியான 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு
"ஜார்க்கண்ட் ரயில் விபத்தில் பலியானவர்களில் இதுவரை 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே, ரயில் நிறுத்தப்பட்டபோது சில பயணிகள் கீழே இறங்கினர், அப்போது மற்றொரு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. RPF மற்றும் மாவட்ட காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், விபத்துக்கான முழு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" -மாவட்ட அதிகாரி அனந்த் குமார் விளக்கம்
-
Feb 28, 2024 20:29 IST
ரயில்வேயில் வேலை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு : முன்னாள் முதல்வருக்கு ஜாமின்
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது 2 மகள்களுக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமின் டெல்லி நீதிமன்றம் உத்தரவு
-
Feb 28, 2024 20:27 IST
சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதி
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்!
-
Feb 28, 2024 20:19 IST
ஜெ. சொத்துகளை மீட்க நடவடிக்கை தேவை" : கர்நாடகாவை சேர்ந்தவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த சமுக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
-
Feb 28, 2024 19:31 IST
மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்; பண்ருட்டி ராமச்சந்திரன்
“பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும்” என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Feb 28, 2024 18:59 IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்; தமிழக அரசு புதிய தகவல்
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஜனவரியில் 5 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
Feb 28, 2024 18:08 IST
அ.தி.மு.க கூட்டணியில் புரட்சிப் பாரதம்; ஒரு தொகுதி ஒதுக்க கோரிக்கை
“நாடாளுமன்ற மக்களவை தேர்தலை அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து சந்திக்கிறோம். ஒரு தொகுதி ஒதுக்க கேட்டுள்ளோம்” என புரட்சிப் பாரதம் ஜெகன் மூர்த்தி கூறினார்.
-
Feb 28, 2024 18:05 IST
வருவாய் ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
வருவாய் ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டரில்வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்'
@EPSTamilNadu அவர்கள் வலியுறுத்தியும்,
இந்த விடியா திமுக அரசு ஆணவப்போக்குடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு இயந்திரத்தை முடக்கத்தில் விட்டு, பொதுமக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' @EPSTamilNadu அவர்கள் வலியுறுத்தியும்,
— AIADMK (@AIADMKOfficial) February 28, 2024
இந்த விடியா திமுக அரசு ஆணவப்போக்குடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு இயந்திரத்தை முடக்கத்தில் விட்டு, பொதுமக்களை பெரும்… pic.twitter.com/oCaKoWHt7V -
Feb 28, 2024 16:39 IST
ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் - தமிழ்நாடு அரசு
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமங்கள் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் பதிவுச் சான்று விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
Feb 28, 2024 16:28 IST
ஓட்டுநர் உரிமம் இனி பதிவுத் தபாலில் அனுப்பப்படும் - அரசு
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இனி பதிவுத் தபாலில் அனுப்பப்படும், ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவை தபால் மூலம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 28, 2024 16:12 IST
அ.தி.மு.க கூட்டணியில் ம.ஜ.க-வுக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி - தமிமுன் அன்சாரி
மயிலாடுதுறையில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி: “வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக செய்திகளை பார்த்தேன்; அதன்படி மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி தான்; பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற கட்சியுடன் நாங்கள் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம்; த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கு எதிரான முடிவை எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
-
Feb 28, 2024 16:09 IST
அ.தி.மு.க கூட்டணியில் 1 தொகுதியில் போட்டியிட புரட்சி பாரதம் கட்சி முடிவு - பூவை ஜெகன் மூர்த்தி
புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி: “அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 1 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
-
Feb 28, 2024 16:06 IST
சங்கு எடுக்க மீன்வளத்துறை அனுமதி தரக் கூடாது - ஐகோர்ட்
“மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் சங்கு எடுக்க மீன்வளத்த்றை அனுமதி தரக்கூடாது. மன்னார் வளைகுடா பகுதி கடல் வாழ் உயிர்க்கோள காப்பகம், தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கான எல்லை வரையறை செய்யாததால் மீனவர்கள் சங்கு எடுக்க அனுமதி தரக்கூடாது” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Feb 28, 2024 15:40 IST
வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐடி போலீசார் 410 நாட்களாக விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 28, 2024 15:13 IST
கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே மோடி அரசு நிறைவேற்றவில்லை - செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “சமூகநீதிக்கு வழிகாட்டக்கூடிய தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் பொய் செல்லுபடியாகாது. மீனவர்கள் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையை எல்லையில் நிறுத்துவோம், படகுகள் பறிமுதல் செய்யப்படாது. மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என கூறி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே மோடி அரசு நிறைவேற்றவில்லை” என்று காட்டமாகச் சாடியுள்ளார்.
-
Feb 28, 2024 14:29 IST
தி.மு.க காணாமல் போகும் என சொன்னவர்கள் தான் காணாமல் போயுள்ளார்கள் - கனிமொழி
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யவில்லை. மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தே வெளிநடப்பு செய்தோம்.
தி.மு.க காணாமல் போகும் என சொன்ன நிறைய பேரை பார்த்துள்ளேன். அவர்கள்தான் காணாமல் போயுள்ளார்கள். தி.மு.க தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது என தி.மு.க எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
-
Feb 28, 2024 14:13 IST
3 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவுகள் எட்டப்படும் - ஆனந்த் சினீவாசன்
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. மூன்று நாட்களில் தொகுதி பங்கீடு முடிவுகள் எட்டப்படும் என காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சினீவாசன் தெரிவித்தார்.
-
Feb 28, 2024 13:41 IST
மார்ச் 2, 3, 4-ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள்; தி.மு.க தலைமை அறிவிப்பு
மார்ச் 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும், முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது
-
Feb 28, 2024 13:25 IST
அ.தி.மு.க.,வில் இணைந்த த.மா.கா தொண்டர்கள்
த.மா.கா.,வை சேர்ந்த 20 தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்
-
Feb 28, 2024 13:08 IST
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Feb 28, 2024 12:50 IST
கடல் அலையில் சிக்கி சிறுமிகள் மரணம்; ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அக்ஸ்தீஸ்வரம் அருகே 13 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த 25 ஆம் தேதி கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சிறுமிகள் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்
-
Feb 28, 2024 12:35 IST
மக்களவை தேர்தல் பணிகள்; ஸ்டாலின் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றது
-
Feb 28, 2024 12:10 IST
அவதூறு பேச்சு – அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு தடை
கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசியதாக சேலம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வெங்கடாச்சலம் மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில், அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏ.வி.ராஜூவுக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி வெங்கடாச்சலம் தொடர்ந்த வழக்கில், ஏ.வி.ராஜூ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Feb 28, 2024 12:06 IST
இமாச்சலில் 15 பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்; சபாநாயகர் உத்தரவு
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் புதன்கிழமை காலை அவையில் இருந்து சபாநாயகரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.