Tamil Nadu News Updates: மருத்துவப் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. இன்று முதல் பிப்.1-ம் தேதி நள்ளிரவு 11.59மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பிப். 2-ம் தேதி காலை 8 மணிமுதல் 5-ம் தேதி மாலை 5 மணிவரை கல்லூரிகளில் இடங்களைதேர்வு செய்யலாம்.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 87ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
99 பேர் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு – மாநில தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 2 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 99 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பார்கள் திறக்கு வைக்கும் நேரம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் பப்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும், ஐந்து நட்சத்தில் ஹோட்டகளில் 24 மணி நேரமும் பார்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டகளிலும் காலை 11 மணி நேரம் முதல் இரவு 12 மணி வரை திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை விபத்து – உயிரிழப்பு 2 ஆக உயர்வு
விருதுநகர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலை உரிமையாளர் செல்வகுமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளுக்கும், சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கடலூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று மேலும் 38 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 37,544 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு 2.03 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை, ஈரோட்டில் உள்ள தமது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். டென்னிஸ் ஓபன் வரலாற்றில் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
பாஜக மூத்த தலைவர் அமித்ஷா: நாங்கள் வாக்குறுதி அளித்ததைச் செய்தோம்; மாநில பட்ஜெட்டை ரூ. 432 கோடியில் (2013-14)ல் இருந்து ரூ. 2,567 கோடியாக (2021ம் ஆண்டு உயர்த்தினோம். கோவாவில் வளர்ச்சியை பாஜக கொண்டுவந்தது; காந்தி குடும்பத்திற்கு கோவை ஒரு பொழுதுபோக்கு இடம்தான் என்று கடுமையாக விமர்சித்தார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாததால் அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாததால் அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
டெல்லியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி நடைபெற்று வரும் சர்வமத பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்தார் என அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்குமா என சந்தேகம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தை தமிழக அரசு மோசமாக கையாளுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
30வது தேசிய மகளிர் ஆணைய தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார். இதில் 'அவள் மாற்றத்தை ஏற்படுத்துபவள்' என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
திருப்பூரை சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சின்னவீரம்பட்டி அரசு பள்ளியை சீரமைக்க, தான் இளநீர் விற்று சேமித்த ரூ.1 லட்சத்தை நன்கொடையாக தாயம்மாள் வழங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்
பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது, இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தமிழக மக்கள் மனதில் மதவாத வெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டி, அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள். திமுகவில் பல்வேறு அணிகளில் திறம்பட செயல்படும் மகளிருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளியுங்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாடே போற்றிடும் வகையில் வெல்வோம். நல்லாட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை என 85வது மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாமக தனித்து போட்டியிடுவதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சென்னையில் போட்டியிடும் பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியீட்டார். இந்த தேர்தலில் பாமக மிக பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுமுகம், இளைஞர்கள், வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னையில் தேர்தல் வீதிகளை மீறி ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ2.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இதுவரை 2.24 லட்சம் ரொக்கம், ரூ11.50 லட்சம் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கட்சி தலைவர் கமல் ஹாசன் வெளியீட்டார்
தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்
மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி ரூ. 1,157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கு முதல் தவணை நிதியாக ரூ665 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 893 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில், 3 லட்சத்து 52 ஆயிரத்து 784 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 14.50 சதவீதமாக உள்ளது.
காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதுவரை 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் இன்று காலை 11.30 மணியளவில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.