By: WebDesk
Updated: January 22, 2021, 04:03:09 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை முன்னெடுக்க முடிவு செய்த தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த தீர்மானத்தின மீது தமிழக கவர்னர் முடிவெடுக்க தாமதமான நிலையில், தன்னை சிறையில் இருந்து விடுவிக்க கோரி, பேரறிவாளன் சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதில், அப்போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட வக்கீல் நடராஜன், 7 தமிழர்கள் விடுதலையில் ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் இதில் கவர்னர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆஜரான மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என என தெரிவித்துள்ளார். மேலும் இந்த 7 பேரை விடுவிப்பதில் ஆளுநர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார் என்றும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.
இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், 7 தமிழர்களும் விடுதலையாவது குறித்து 3 நாட்களில் தெரியவரும் என்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்களின் விடுதலை குறித்து விவகாரத்தில், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamil news sevan tamilans release issue governer secide