பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரியில் நேற்று இரவு பலத்த காற்று ,இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் வனத்துறையினர் தீயணைப்பு துறை சமூக ஆர்வலர் ஆகியோர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டலம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுச்சேரி பகுதியில் 4 நாட்களுக்கு லேசான முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் புதுச்சேரியில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. இதில் நேற்று 99.32 டிகிரி வெயில் பதிவு ஆகி இருந்தது
இதற்கிடையே மாலையில் வானில் கரு மேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றியது. இரவு 9 மணிக்கு மேல் திடீரென இடி மின்னலுடன் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன .இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.
இதுபோல் கனமழை காரணமாக புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டது. இதனால் பெரும்பால இடங்களில் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இரவு மழை நின்றவுடன் ஒவ்வொரு பகுதியாக மின்விநியோகம் செய்யப்பட்டது. புதுவை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது
மழையால் புதுச்சேரி மையப்பகுதியான மிஷன் வீதி, தூய்மா வீதி, காந்தி வீதி ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்தன. மேலும் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை நேற்று இரவு முதல் இன்று விடியற்காலை வரை வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் தன் ஆர்வலர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“