Advertisment

துரைமுருகன் பங்களாவில் புகுந்த கொள்ளையர்கள் : விரக்தியில் சுவற்றில் எழுதிய கடிதம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் புகுந்த கொள்ளையர்கள் எதுவும் கிடைக்காத விரக்தியில் சுவற்றில் எழுதி வைத்து சென்றுள்ளனர்.

author-image
WebDesk
Apr 14, 2021 22:55 IST
Regular Chinese Navy presence in Indian ocean region over past decade Navy Chief Tamil News

Regular Chinese Navy presence in Indian ocean region

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் பொருட்கள் எதுவும் கிடைக்காத விரக்தியில், வீட்டின் சுவற்றில் ‘‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’’ என்று எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

Advertisment

திமுகவில் பொதுக்செயலாளராக இருப்பவர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த இவருக்கு திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், சொந்தமான ஒரு பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் மட்டும் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுக்கும் நிலையில், பங்களாவின் பராமரிப்பு பணிக்காக இரண்டுபே இங்கு தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் பங்களாவுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் பங்களாவிற்கு எந்த பொருளும் சிக்காததால், விரக்தியடைந்த கொள்ளையர்கள்,  வீட்டில் இருந்த சில பொருட்களை உடைத்துவிட்டு அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பங்களாவில் பணம் மற்றும் நகைகள் இருக்கும் என்ற பெருத்த ஆசையுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் கடுப்பாகிப்போன அவர்கள், அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து சுவரில், ‘‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’’ என்றும், அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’’ என எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment