Tamil Nadu News Live Updates: வங்கி தனியார்மயமாக்கலை கண்டித்து இன்றும், நாளையும் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் நிலவரம்
சென்னையில் 42-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது.
Tamil Nadu News Today LIVE ஒமிக்ரான் அப்டேட்
தமிழ்நாட்டில் நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு மரபியல் மாற்ற தொற்று இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு
தமிழகத்தில் ஊடுருவிய ஓமிக்ரோன்: கடுமையான கோவிட்-19 தொற்றுக்கு யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?
பாட் கம்மின்ஸ் விலகல்
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் 2ஆவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:36 (IST) 16 Dec 2021சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; உண்மையை ஒப்புக்கொண்ட போலீஸ்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
- 22:34 (IST) 16 Dec 2021ஜம்மு - காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக ராமன் பல்லா நியமனம் - காங்கிரஸ் தலைமை
ஜம்மு - காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக ராமன் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
- 22:29 (IST) 16 Dec 2021தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் பயணித்த 5 பேருக்கு S ஜீன் - சுகாதாரத்துறை செயலர் தகவல்
தமிழ்நாட்டில் நேற்று ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் பயணித்த ராமபுரத்தைச் சேர்ந்த பயணியுடன் தொடர்பில் இருந்த 5 பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- 21:34 (IST) 16 Dec 2021தெலங்கானாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - மாநில சுகாதாரத்துறை
தெலங்கானாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால்,தெலங்கானாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
- 20:54 (IST) 16 Dec 2021பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் ஒத்திவைப்பு
வெஸ்ட் இண்டிஸ் அணிகளின் முகாமில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- 20:52 (IST) 16 Dec 2021கேரளா அரசியலில் இருந்து விலகுவதாக மெட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவிப்பு
கடந்த கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்த மெட்ரோமேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
- 20:47 (IST) 16 Dec 2021கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கர்நாடகாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
- 20:40 (IST) 16 Dec 2021தமிழக அரசு வழங்கும் சிறப்பு பொங்கல் தொகுப்பில் நெய் சேர்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக பொங்கலுக்கு தேவையான 21 பொருட்களை வழங்குவதாக அறிவித்தது. இந்த நிலையில், தமிழக அரசு வழங்கும் சிறப்பு பொங்கல் தொகுப்பில் நெய் சேர்க்கப்பட்டுள்ளது.
- 20:36 (IST) 16 Dec 2021வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணியில் மேலும் 5 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வெஸ்ட் இண்டிஸ் அணியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த அணியில் மொத்தம் 9 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 20:11 (IST) 16 Dec 2021அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதி
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- 18:40 (IST) 16 Dec 2021அரசு மருத்துவமனை கட்டில் காவேரி கரையில் கண்டுபிடிப்பு
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருந்து திருடு போன நோயாளிகள் பயன்படுத்தும் இரும்பு கட்டிலை ரோந்துக்கு சென்ற போலீசார் காவிரி கரையோரம் கண்டுபிடித்தனர்
- 18:38 (IST) 16 Dec 2021ஜனவரி 21-முதல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு
வரும் ஜனவரி 21-முதல் பொறியியல் மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. மேலும் அரியர் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 18:11 (IST) 16 Dec 2021பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த முடிவு
2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மொடி கூறியது போல பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேறுகால இறப்பு போன்றவற்றை தவிர்க்க பெண்களின் உடல் நலனில் அக்கரைகொண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 18:06 (IST) 16 Dec 2021பத்திரப்பதிவு துறையில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு
கடந்த ஆட்சிக்காலத்தில் பத்திரப்பதிவு துறையில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்களுடன் இந்த சிறப்பு புலனாய்வு குழு செயல்படும்என்றும கூறப்பட்டுள்ளது.
- 17:26 (IST) 16 Dec 2021மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உதவி
மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை அங்கு அனுப்பப்பட உள்ளன. தரைவழியாக இதனை கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 17:16 (IST) 16 Dec 2021மின்விநியோ சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
மத்திய அரசின் மின்விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் 7 பைசா சேவை கட்டணத்தை ஒரு பைசாவாக குறைக்கவேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- 17:11 (IST) 16 Dec 2021டெம்ப்ளோ மேயர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சோச்சிபில்லியின் சிலை
கடந்த 2019ம் ஆண்டு குவெரெரோ நகரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 36 செ.மீ உயரமுடைய பழங்குடியின கடவுளான சோச்சிபில்லியின் சிலை டெம்ப்ளோ மேயர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
- 17:10 (IST) 16 Dec 20215 ரன்களில் சதத்தை தவறவிட்ட வார்னர்
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார் முதல் டெஸ்டிலும் 6 ரன்களில் சதத்தை தவறவிட்ட நிலையில் தற்போது 5 ரன்களில் சதத்தை தவறவிட்டது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- 16:45 (IST) 16 Dec 2021புதுக்கோட்டை: தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் என மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் மதுபான ஆலையின் தற்காலிக ஒட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
- 16:16 (IST) 16 Dec 2021அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது - அண்ணாமலை
அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
- 16:15 (IST) 16 Dec 2021பெண்களின் திருமண வயது 21 - புரட்சிகர முடிவு என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
பெண்களின் திருமண வயது 21ஆக உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்க புரட்சிகர முடிவு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
- 16:01 (IST) 16 Dec 2021மத்திய அரசு உண்மைகளைக் கண்டு பயப்படுகிறது - ராகுல்
நாட்டுக்காக 32 தோட்டாக்களை சுமந்தவர் இந்திரா காந்தி. 1971ஆம் ஆண்டு போர் நினைவு நிகழ்ச்சியில் இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மத்திய அரசு உண்மைகளைக் கண்டு பயப்படுகிறது என உத்தரகாண்ட், டேராடூனில் ராகுல் காந்தி பேசியுள்ளார்
- 15:45 (IST) 16 Dec 2021செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
- 15:29 (IST) 16 Dec 2021இந்தியாவில் 131 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன: யுஐடிஏஐ சிஇஓ தகவல்!
இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கு முன்பு நாங்கள் ஆதாரை அறிமுகப்படுத்தினோம். இதுவரை மொத்தம் 131 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையான பயனாளிகளுக்கு நேரடி பலன் பரிமாற்றங்கள் (டிபிடி) மூலம் ரூ. 2.25 லட்சம் கோடிகளை அரசாங்கம் சேமித்துள்ளது.
மத்திய அரசின் 300 திட்டங்களும், மாநில அரசின் 400 திட்டங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. 99.7% வயது வந்தோர் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளைச் சேர்ப்பதே எங்கள் முயற்சி. எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் உலகத் தரம் வாய்ந்தவை: சௌரப் கர்க், சிஇஓ , யுஐடிஏஐ
- 15:07 (IST) 16 Dec 2021தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை!
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒப்பந்தத்தின்படி மத்திய அரசிடம் இருந்து 237.63 லட்சம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வர வேண்டும். எனவே தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.50 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். மேலும் மின் விநியோகத்திற்கான சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
- 14:47 (IST) 16 Dec 2021உ.பி-யில், 36,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் 594 கி.மீ., நீளமுள்ள கங்கா விரைவுச்சாலை!
உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூரில், 594 கி.மீ., நீளமுள்ள கங்கா விரைவுச்சாலைக்கு, பிரதமர் மோடி, டிச., 18ல் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விரைவுச்சாலை, 36,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். IAF விமானங்கள் அவசரமாக புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் 3.5 கிமீ நீளமுள்ள விமான ஓடுதளம் விரைவுச் சாலையில் கட்டப்படும்: பிரதமர் அலுவலகம்
- 14:42 (IST) 16 Dec 2021கோவை அருகே மாயமான 15 வயது சிறுமி முட்புதரில் சடலமாக மீட்பு!
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே டிசம்பர் 13 அன்று, மாயமான 15 வயது சிறுமி முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 14:39 (IST) 16 Dec 2021தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை!
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒப்பந்தத்தின்படி மத்திய அரசிடம் இருந்து 237.63 லட்சம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வர வேண்டும். எனவே தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.50 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். மேலும் மின் விநியோகத்திற்கான சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
- 14:34 (IST) 16 Dec 2021வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவிலிருந்து தமிழக அரசு பின்வாங்கியது!
வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை 5 கி.மீ.லிருந்து 3 கி.மீ ஆக குறைக்க கடந்த அதிமுக அரசு தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்தாண்டு தேசிய வன உயிர் வாரியத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. ஆனால் தற்போது, வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவை திரும்ப பெறுவதாக வனத்துறையின் முதன்மை செயலாளருக்கு தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
- 14:17 (IST) 16 Dec 2021யூடியூபர் மாரிதாஸூக்கு டிசம். 30 வரை, நீதிமன்ற காவல்: நெல்லை நீதிமன்றம்!
கடந்த 2020ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் மாரிதாஸூக்கு வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை, நீதிமன்ற காவல் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தேனி நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
- 14:15 (IST) 16 Dec 2021வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவிலிருந்து தமிழக அரசு பின்வாங்கியது!
வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை 5 கி.மீ.லிருந்து 3 கி.மீ ஆக குறைக்க கடந்த அதிமுக அரசு தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்தாண்டு தேசிய வன உயிர் வாரியத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. ஆனால் தற்போது, வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவை திரும்ப பெறுவதாக தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
- 14:13 (IST) 16 Dec 2021முந்திரி லாரியை கடத்திய வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடி துறைமுகத்துக்கு முந்திரி ஏற்றிச்சென்ற லாரியை கடத்தியதாக , அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெபசிங் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
- 14:01 (IST) 16 Dec 2021வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவிலிருந்து தமிழக அரசு பின்வாங்கியது!
வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை 5 கி.மீ.லிருந்து 3 கி.மீ ஆக குறைக்க கடந்த அதிமுக அரசு தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்தாண்டு தேசிய வன உயிர் வாரியத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. ஆனால் தற்போது, வேடந்தாங்கல் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவை திரும்ப பெறுவதாக வனத்துறையின் முதன்மை செயலாளருக்கு தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
- 14:01 (IST) 16 Dec 2021ஓமிக்ரோன் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேருக்கும் கொரோனா!
தமிழகத்தில் ஓமிக்ரோன் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த ஆறு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
- 14:00 (IST) 16 Dec 2021எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கு: கைதி மணிகண்டனுக்கு ஜாமின் மறுப்பு!
புதுக்கோட்டை, நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்க மாவட்ட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
- 14:00 (IST) 16 Dec 2021யூடியூபர் மாரிதாஸூக்கு டிசம். 30 வரை, நீதிமன்ற காவல்: நெல்லை நீதிமன்றம்!
கடந்த 2020ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் மாரிதாஸூக்கு வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை, நீதிமன்ற காவல் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தேனி நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
- 13:46 (IST) 16 Dec 2021நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரபல நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லேசான அறிகுறிகளை உள்ளதால் விக்ரம் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
- 13:08 (IST) 16 Dec 2021மகாராஷ்ட்ராவில் ரேக்ளா பந்தயம் - உச்ச நீதிமன்றம் அனுமதி
மகாராஷ்ட்ராவில் ரேக்ளா பந்தயம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விதிமுறைகளின் அடிப்படையில் ரேக்ளா பந்தயத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தல்.
- 13:06 (IST) 16 Dec 2021வேளாண் உச்சி மாநாடு - பிரதமர் உரை
அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் கருத்தரங்கு பயன் அளிக்கும் என்று கூறிய மோடி, இயற்கை வேளாண்மை மூலம் நாட்டில் உள்ள 80% சிறுகுறு விவசாயிகள் நலன் அடைவார்கள் என்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் காணொலி மூலம் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் கூறியுள்ளார்.
- 12:43 (IST) 16 Dec 2021தினசரி வகுப்புகளை நடத்துவதில் மாற்றமா?
6 முதல் 12ம் வகுப்புகளுக்கு தினமும் வகுப்புகள் நடத்துவது குறித்து டிசம்பர் 25ம் தேதிக்கு மேல் ஆலோசனை செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி தினமும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை தொடர்பான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:33 (IST) 16 Dec 2021வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
- 12:20 (IST) 16 Dec 202110.5% இடஒதுக்கீடு விவகாரம்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 10.5% உள் ஒதுக்கீட்டை வன்னியர் பிரிவினருக்கு வழங்கியதை ரத்து செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த உத்தரவு தொடர்பாக மேல் முறையீடு செய்த நிலையில் உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
- 12:15 (IST) 16 Dec 2021கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்தார் முதல்வர்
கத்திப்பாரா பாலத்தின் கீழ் ரூ.14.50 கோடி செலவில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. 3 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி பாதை மற்றும் தமிழ் எழுத்துடன் கூடிய அலங்கார விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கத்தை தற்போது திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
- 11:47 (IST) 16 Dec 2021பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள உத்தரவு
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 78,610 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸை உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- 11:47 (IST) 16 Dec 2021ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கோவிட் பாசிடிவ்
ஒமிக்ரான் தொற்று உறுதியான நைஜீரியருடன் தொடரில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல். காங்கோவில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஆரணியைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒமிக்ரான் தொற்று அறிகுறிகள் இருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
- 11:04 (IST) 16 Dec 2021டெல்லி தேசிய போர் நினைவுசின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை.1971 பேரில் பாகிஸ்தானை வென்றதன் பொன்விழா ஆண்டையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
- 10:20 (IST) 16 Dec 2021தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 அதிகரித்து 36,360க்கு விற்பனையாகிறது. அதே போல், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து 4,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 09:54 (IST) 16 Dec 2021கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 7,948ஆக உள்ளது. 343 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 09:28 (IST) 16 Dec 2021முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் நரவானே
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 09:23 (IST) 16 Dec 2021மாரிதாஸ் மீண்டும் கைது...நெல்லை காவல் நிலைய வழக்கில் நடவடிக்கை!
காதர் மீரான் என்பவர் அளித்த புகாரின்பேரில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இன்று அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
- 09:19 (IST) 16 Dec 2021போர் நினைவுச்சின்னத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னையில் தீவுத்திடல் அருகே போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- 08:48 (IST) 16 Dec 2021வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடிவு
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 08:10 (IST) 16 Dec 2021எம்எல்ஏ மேம்பாட்டு நிதிக்காக 352 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021- 22ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 50% விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.