Advertisment

குடுமியுடன் கோவில் குருக்களாக திருவள்ளுவர் : சி.பி.எஸ்.இ பாட புத்தகத்தில் எழுந்த சர்ச்சை

CBSE 8th Book Thiruvalluvar : சி.பி.எஸ்.இ பாட புத்தகத்தில் திருவள்ளுவர் குறித்து சர்ச்சை புகைப்படம் வெளியாகியதை தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

author-image
WebDesk
New Update
குடுமியுடன் கோவில் குருக்களாக திருவள்ளுவர் : சி.பி.எஸ்.இ பாட புத்தகத்தில் எழுந்த சர்ச்சை

Thiruvalluvar Image Controversy In CBSE : தமிழரின் பெருமையை உலகிற்கு உணர்த்திய முக்கிய நூல்களில் ஒன்று திருக்குறள். திருவள்ளூர் என் மகாபுலவர் எழுந்திய இந்த நூல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மனிதனின் வாழ்வியை இரண்டு அடியில் சொல்லிய திருவள்ளுவர் தமிழகத்தில் நீங்கமுடியாத அடையாளமாக திகழ்கிறார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவருக்கு சிலைகள் அமைக்ப்ப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள சிலையும், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டமும் திருவள்ளுவரின் பெருமையை பரைசாற்றும் விதமாக உள்ளது. தொடர்ந்து அவரின் பெருமையை போற்றும் வகையில், 1960-ல் இந்தியா அரசு திருவள்ளுவர் பெயரில் தபால் தலை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் திருவள்ளுவர் கடவுளாக போற்றப்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவரை வட இந்தியர்கள் சொந்தம் கொண்டாடி வருவது தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர் ட்விட்டர் பக்கத்தில், வள்ளூவர் காவி உடை அணிந்திருப்பது போலவும், அவர் ஒரு இந்து துறவி என்பது போல சித்தரித்து புகைப்பட்ங்கள் வெளியிட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை தொடங்கிய அடுத்த நாளே தஞ்சாவூரில், திருவள்ளூவர் சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி முழுவதும் சேதப்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தன.

இந்த சர்ச்சை சிறிது நாட்களில் அடங்கிப்போன நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மீண்டும் சர்ச்சை வெடித்தது. இந்த முறை பாஜகவை சேர்ந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது அதிகரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளூவர் காவி உடை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதற்கும் கடும் கண்டணங்கள் எழுந்த நிலையில், உடனடியாக அவர் அந்த புகைப்படத்தை மாற்றி பதிவிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக கண்டனக்குரல் வலுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் திருவள்ளுவார் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் அல்லாமல், மாணவர்களின் பாட புத்தகத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. சி.பி.எஸ்.இ 8-ம் வகுப்பு பாட புத்தக்த்தில் இடம்பெற்றுள்ள திருவள்ளூவர் புகைப்படம்,  தலையில் முடி இல்லாமல் வழுக்கை தலையுடன் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்ற தோற்றத்தில் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment