Tamil News Today Updates: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வீடு தேடி தரும் திட்டம் இன்று தொடக்கம். 3501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார். மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், கேரளா, கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்டும், தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது வானிலை மையம். கடும் அமளிக்கு இடையே மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் செயல் வெட்கக் கேடானது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு அடையும் என பிரதமர் மோடியும், இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என காங்கிரஸும் தெரிவித்துள்ளனர். 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று தேர்வுகள் தொடக்கம். இதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 22, அரசு மருத்துவமனைகளில் 38 என மொத்தம் 60 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Tamil news toady live farm bill tamil nadu weather coronavirus
திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக போர்கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க குமிதினி, ரித்தி சிங் ஆகிய 2 பெண் அதிகாரிகள் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “தட்கல் விவசாய மின்இணைப்பு பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2020க்குள் 50,000 தட்கல் மின் இணைப்பு வழங்கப்படும். கிசான் முறைகேட்டில் இதுவரை 62% வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,334 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 60 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில், சென்னை வேளச்சேரி ஏரியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியை சுற்றுச்சூழல் பாரம்பரிய பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் புதிய ரயில் பாதை பணிகள் குறித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்படமாட்டாது. தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட செல்வனின் சகோதரர்கள் இருவருக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக பதியப்பட்ட பொய் வழக்கில் முன்ஜாமீன்.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக 20 சிறப்பு வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் உத்தரவின் படி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு அமெரிக்க நிறுவனத்தின் ரெம்டெஸ்விர் மருந்தை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து 1 லட்சத்து 60 ஆயிரம் மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்து நல்ல குணம் அளித்த நிலையில் மீண்டும் அமெரிக்காவின் கிளியட் சயின்ஸ் நிறுவனத்திடம் 2 லட்சத்து 25 ஆயிரம் மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரெம்டெஸ்விர் மருந்து இன்று தமிழகம் வந்தடைந்தது.
இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரோமிய கழிவுகள் விளைநிலங்கள் பாதித்து மக்களின் உயிரைப் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்றும் கொடிய நோப் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
வேளாண் மசோதா விவகாரத்தில், முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் வாழ்வாதாரம் காப்பதே வேளாண் மசோதாவின் நோக்கம் என்றார்.
தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல். மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு . குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி .
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை இதுவரையில் கைது செய்யவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சரண் அடைந்துள்ள திருமண வேலிடம் விசாரித்த பின்னரே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இப்போது நாட்டின் கிராமங்களில் நல்ல தரமான, அதிவேக இணையம் இருப்பது அவசியம் என்று மோடி தெரிவித்தார். அரசின் முயற்சியால் ஏற்கனவே ஆப்டிகல் ஃபைபர் நாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பஞ்சாயத்துக்களை எட்டியுள்ளது என்றார். கடந்த 6 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுவான சேவை மையங்களும் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த இணைப்பை விரிவுபடுத்தும் குறிக்கோளுடன் நாடு முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளது எனவும், இது அவர்களுக்கு கிடைத்த சுதந்திரம் என்றும் தெரிவித்தார்.
தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அ.தி.மு.கவில் இருந்து நீக்கம் . அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க தலைமை நடவடிக்கை . இந்நிலையில், தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம். கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு .
தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட். நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் இந்த அதிரடி உத்தரவை பிற்பித்துள்ளார். செல்வன் கொலை வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன்
தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து அவருடன் ஆலோசனை நடத்தினர் . பொது முடக்கம் காரணமாக பல்வேறு துறைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கவும் , பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 27ம் தேதி முதல் பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்டார்மடம் கொலை வழக்கு விவகாரத்தில் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் அறிவிப்பு.
வேளாண் சட்டம் நிறைவேற்றத்திற்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறாததால் நீடித்த அமளி.
கொரோனா ஊரடங்கின் காரணமாக மார்ச் 17ம் தேதி மூடப்பட்ட தாஜ்மகால் இன்று மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
திமுக தோழமை கட்சிகள் கூட்டம் இன்று முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
8 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் காலை முதலே அமளி ஏற்பட்டது. இந்நிலையில் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவின் மும்பை அருகே அமைந்திருக்கும் பிவண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இன்று சரிந்து விழந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என்று கூறிய நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ராம்நாத் கோவிந்த்.
அதிமுக மற்றும் பாஜக இடையே எந்தவிதமான மனகசப்பும் இல்லை என்றும், பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ரூ. 192 குறைந்து. சவரன் ரூ. 39,472க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4934 ஆகும்.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் மர்ம நபர்களால் உடைக்கப்படும் காட்சியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். தண்டுபத்து பகுதியில் இருக்கும் அவரது வீட்டின் முன்பு நிற்கவைக்கப்பட்டிருக்கும் கார் உடைக்கப்படும் காட்சி.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ. 76. 85க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலங்களவையில் அவை விதிமுறைகள் புத்தகத்தை கிழித்து எறிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தெரிக் ஓ ப்ரையன், இளமாறன் கரீம், சஞ்சய் சிங், டோலா சென், ரிபுன் போரா உள்ளிட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை. இன்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பங்கேற்பு. இதுவரை கொரோனா தொற்று காரணமாக காணொளி காட்சி மூலமே ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று நேரில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
மும்பையில் இன்று அதிகாலை மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.