பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழா
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் கருணாநிதி நினைவு நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்.
கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 18, 2024 21:44 ISTதலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Aug 18, 2024 21:25 ISTகிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 7 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், என்.சி.சி. முகாமிற்கு சென்ற பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.சி.சி பயிற்சியாளரும் முன்னாள் நா.த.க நிர்வாகியுமான சிவராமனைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
Aug 18, 2024 20:08 ISTவரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை புரிந்தவர் கலைஞர் - ராஜ்நாத் சிங்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு: “வரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை புரிந்தவர் கலைஞர். நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமூகநீதியின் அடையாளமாகத் திகழ்கிறார். தேச நலனுக்காக பல கட்சிகளை ஒருங்கிணைத்தவர். கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் தீவிரமானவை. துணிச்சல் மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கலைஞர்” என்று புகழாரம் சூட்டினார்.
-
Aug 18, 2024 20:05 ISTராஜ்நாத் சிங் நாணயம் வெளியிட பொருத்தமானவர்; மோடிக்கு ஸ்டாலின் நன்றி
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிட பொருத்தமானவர். கலைஞருக்கு ரூ.100 நினைவு நாணயம் வெளியிட ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி. நினைவு நாணயத்திற்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி” என்று கூறினார்.
-
Aug 18, 2024 19:37 IST‘தமிழ் வெல்லும்’ - கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த சூழலில் இன்று (ஆக 18) கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெள்யிட்டார். விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள், பா.ஜ,க எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-
Aug 18, 2024 19:18 ISTகலைவாணர் அரங்கத்திற்கு புறப்பட்ட ஸ்டாலின், ராஜ்நாத் சிங்
கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைவாணர் அரங்கத்திற்கு புறப்பட்டனர். இன்னும் சற்று நேரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது.
-
Aug 18, 2024 19:13 ISTகலைஞர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார் ராஜ்நாத் சிங்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தை மத்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
Aug 18, 2024 18:15 ISTகலைஞர் நினைவிடத்தில் மரியாதை மத்திய அமைச்சர்கள் மரியாதை
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக எம்.பி., கனிமொழி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
-
Aug 18, 2024 17:20 ISTகொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை
ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தற்போது இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
-
Aug 18, 2024 17:18 ISTஊழியர் வீட்டு விழாவில் கலந்துகொண்ட சிங்கப்பூர் முதலாளி
சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் வளையம்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் இல்ல விழாவில் முதலாளி கென்ஜோங் கலந்து கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வருகை தந்த கென்ஜோங்-கை செண்டை மேளம் முழங்க வரவேற்று, வெள்ளை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் 1 கி.மீ தூரம் அழைத்துச் சென்று ஊர்மக்கள் அமர்க்களப்படுத்தினர்.
-
Aug 18, 2024 16:28 ISTகலைஞர் நாணய விழாவிற்கு ராகுலை அழைக்காதது ஏன்? இ.பி.எஸ். கேள்வி
"ஆளுநரின் விருந்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர் இருவரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் திமுக - பாஜக உறவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கலைஞர் நாணய விழாவிற்கு ராகுலை அழைக்காதது ஏன்? நாங்கள் பாஜக அணியில் இருந்தபோது கூட, பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Aug 18, 2024 16:26 ISTரூ.5 கோடி கேட்டு யுவன் வீட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ்
தன் மீது அவதூறு பரப்பியதாக வீட்டு உரிமையாளருக்கு, வழக்கறிஞர் தரப்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்சினையை உரிமையியல் ரீதியாகவும், குற்ற ரீதியாகவும் சட்டப்படி சந்திக்க உள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்
-
Aug 18, 2024 16:00 ISTநடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி
மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் உடல்நலக் குறைவால், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
-
Aug 18, 2024 15:43 ISTசென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது
சென்னையில் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை சீரானது
-
Aug 18, 2024 15:13 ISTதிருச்செந்தூர் கடலுக்கடியில் தென்பட்ட பிரம்மாண்ட சுவர்
திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் அருகே கடல்நீர் 4 அடி குறைந்ததால், பழமையான மிக நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டிணம் அருகே உள்ள கொற்கையில் மிகப் பிரம்மாண்டமான துறைமுகம் இருந்ததால், அதற்கும் இந்த சுவருக்கும் தொடர்பு இருக்கும் என தெரிவித்த ஆய்வாளர்கள், அதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்
-
Aug 18, 2024 14:55 ISTமத்திய அரசு ஒதுக்கிய நிதியை ஸ்டாலின் குறிப்பிடாதது ஏன்? - அண்ணாமலை கேள்வி
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கான தங்கும் விடுதி கட்டுவதில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடாதது ஏன்? என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
-
Aug 18, 2024 14:38 ISTசென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை சீரானது!
தாம்பரம் முனையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவை சீரானது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
-
Aug 18, 2024 14:11 ISTதொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, விரைவில் சேவை தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும்.
-
Aug 18, 2024 13:50 ISTசென்னை வந்தடைந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை இன்று மாலை வெளியிடுகிறார்
-
Aug 18, 2024 13:20 IST12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 18, 2024 12:59 ISTசென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மின்சார ரயில் ரத்து காரணமாக, கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கம் ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்து செல்லும் மாநகர பேருந்துகள் ஏராளமானோர் கார்களிலும் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல்
-
Aug 18, 2024 12:38 ISTகூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் : சீமான்
கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். செப்டம்பர் மாதம் தம்பி விஜய் கட்சி பணியை தொடங்குகிறார். அண்ணன் தயாரா என்ற கேள்விக்கு தம்பி தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேனே என பதில்- சீமான்
-
Aug 18, 2024 11:53 ISTவீலிங் செய்த இளைஞருக்கு பொதுமக்களின் நூதன தண்டனை
சாலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர் ஆத்திரத்தில், இளைஞரின் பைக்கை பாலத்தில் இருந்து கீழே தூக்கி போட்ட பொதுமக்கள் 30 அடி உயரத்தில் இருந்து பைக்கை கீழே போட்டதில், முற்றிலும் நொறுங்கிய பைக் பெங்களூரு - துமகூரு நெடுஞ்சாலையில் வீலிங் செய்த இளைஞருக்கு, பொதுமக்களின் நூதன தண்டனை
-
Aug 18, 2024 11:51 ISTபப்பில் நடனமாடி கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில், பப்பில் நடனமாடி கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு சென்னையில் ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த, காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல் நேற்றிரவு தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு சென்றுள்ளார் பப்பில் ஆடிக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்த முகமது சுகைல் உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்
-
Aug 18, 2024 11:19 ISTநாழு முவதும் ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் திருமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு அடிக்கடி இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை.
-
Aug 18, 2024 10:46 ISTமருத்துவர்கள் போராட்டம்- கால்பந்து போட்டி ரத்து
கொல்கத்தாவில் துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவிருந்த போட்டி ரத்து. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டங்களால் அறிவிப்பு
-
Aug 18, 2024 10:31 ISTதேவநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை
தேவநாதன் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
-
Aug 18, 2024 09:37 ISTமோடிக்கு ஸ்டாலின் நன்றி
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
-
Aug 18, 2024 08:45 ISTகருணாநிதிக்கு மோடி புகழாரம்
தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர் கருணாநிதி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா மகிழ்ச்சியளிக்கிறது -பிரதமர் மோடி
-
Aug 18, 2024 08:34 ISTரூ.400 கோடி மோசடி: சென்னை பொறியாளர் கைது
சீன ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலி மோசடி தொடர்பாக சென்னை பொறியாளர் உட்பட 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது
ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம். ரூ.75 கோடி அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடத்தியுள்ளதாக சென்னை பொறியாளர் மீது குற்றச்சாட்டு
-
Aug 18, 2024 08:10 ISTராஜ்நாத் சிங் சென்னை வருகை
கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மாலை 6:50 மணிக்கு வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது
-
Aug 18, 2024 08:09 IST3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.