Advertisment

Tamil News: எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியானது!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News 25 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elon musk

Elon musk speeches

Tamil Nadu News Updates: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றி. பெரும்பான்மையான வாக்குகளை பெற்று 2 ஆவது முறையாக வெற்றி வாகை சூடினார்.

Advertisment

இன்று செய்முறை தேர்வுகள் தொடக்கம்

10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடக்கம். தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்

பெட்ரோல்,டீசல் நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 19வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனையாகிறது.

தொடரும் மின்வெட்டு! தி.மு.க தான் காரணமா?

குரூப் 4 தேர்வு: இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என TNPSC தகவல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 23:40 (IST) 25 Apr 2022
  நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்? சென்னை மேயர் பிரியா கேள்வி

  சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற திக மாநில உரிமை மீட்பு பொதுகூட்டத்தில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தியாவில் பணியாற்றும் 8 மருத்துவர்களில் ஒருவர் தமிழர். இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவர்களில் 12.5% பேர் தமிழர்கள். அதனால், நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்?” என்று கேள்வி எழுப்பினார். • 21:37 (IST) 25 Apr 2022
  நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் இல்லை - மு.க.ஸ்டாலின்

  நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் இல்லை. ஆளுநரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தபால்துறை ஊழியரின் பணியைக் கூட செய்ய மறுப்பது ஆளுநருக்கு அழகல்ல என்று சாடியுள்ளார். • 21:11 (IST) 25 Apr 2022
  தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

  தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதில், விழுப்புரம், சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். • 20:36 (IST) 25 Apr 2022
  திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன் - மு.க. ஸ்டாலின்

  முதல்வர் மு.க. ஸ்டாலின், “இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி; கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது. தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது”என்று தெரிவித்துள்ளார். • 20:35 (IST) 25 Apr 2022
  திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன் - மு.க. ஸ்டாலின்

  முதல்வர் மு.க. ஸ்டாலின், “இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி; கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது. தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது”என்று தெரிவித்துள்ளார். • 19:57 (IST) 25 Apr 2022
  நீலகிரியில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15 முதல் அமல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

  நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • 18:52 (IST) 25 Apr 2022
  சம்பள பாக்கி தொடர்பாக சிவகார்த்திகேயன் வழக்கு; சமரச தீர்வாளரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு

  சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில், பிரச்சினைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 3 படங்களை வெளியிட தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. • 18:50 (IST) 25 Apr 2022
  16 யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்

  இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பிய புகாரில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் 16 யூடியூப் சேனல்களை முடக்கியது. அதில் 10 இந்திய யூடியூப் சேனல்கள் மற்றும் 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களும் அடங்கும். • 17:40 (IST) 25 Apr 2022
  குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது

  குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் குறித்த அவதூறு வழக்கில் ஜாமினில் வெளிவந்த நிலையில், அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் அசாமில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். • 17:02 (IST) 25 Apr 2022
  சோனியா இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

  டெல்லியில் சோனியா இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஏ.கே.ஆண்டனி, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்று வருகின்றனர் • 16:17 (IST) 25 Apr 2022
  சாலைக்கு நடிகர் விவேக் பெயரை சூட்ட வேண்டும் - மனைவி அருட்செல்வி வேண்டுகோள்

  நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார் • 15:56 (IST) 25 Apr 2022
  கடற்கரைக்கு நீலக்கொடி சான்று பெறுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

  கடற்கரைக்கு நீலக்கொடி சான்று பெறுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார் • 15:37 (IST) 25 Apr 2022
  விசிகவினருடன் மோதல் தொடர்பான வழக்கு; பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு முன்ஜாமின்

  அம்பேத்கர் பிறந்தநாளன்று விசிகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது • 15:13 (IST) 25 Apr 2022
  வெங்கையா நாயுடு உடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

  குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் • 14:43 (IST) 25 Apr 2022
  விமானத்தில் புகைப்பிடித்ததாக ஒருவர் கைது

  குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர்(54) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் • 14:24 (IST) 25 Apr 2022
  வேலூர்: பள்ளியில் மேசையை உடைத்த 10 மாணவர்கள் இடைநீக்கம்

  வேலூர்,தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவத்தில், 10 மாணவர்களை மே 4ம் தேதி வரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார் • 13:53 (IST) 25 Apr 2022
  தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • 13:34 (IST) 25 Apr 2022
  சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

  இதுவரை ஐஐடியில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 40 பேர் குணமடைந்துள்ளனர் . • 13:23 (IST) 25 Apr 2022
  மத அடையாளங்களுடன் சீருடை அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ்

  பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் சீருடை அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எப்படி உத்தரவு தர முடியும் என நீதிபதிகள் கேட்டதை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது. • 13:07 (IST) 25 Apr 2022
  போலீஸார் அடித்ததால் இளைஞர் தற்கொலை?

  பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விஜய் என்ற இளைஞரை காவலர் தாக்கியதால், இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அனைவரின் முன்பும் போலீஸ் அடித்ததால் இளைஞர் தற்கொலை என உறவினர்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் உறவினர்கள் ஈடுபட்டனர். • 12:50 (IST) 25 Apr 2022
  பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து

  பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். • 12:30 (IST) 25 Apr 2022
  புதிய கல்விக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி-அமைச்சர் பொன்முடி

  புதிய கல்விக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் அமைக்கும் குழு பற்றி மாநில அரசுக்கு எதுவும் தெரிவதில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். • 11:57 (IST) 25 Apr 2022
  சீனாவில் கொரோனா பலி அதிகரிப்பு

  சீனாவில் ஒரே நாளில் கொரோனவால் 39 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. • 11:41 (IST) 25 Apr 2022
  ஆளுநருக்கு அதிகாரம்-முதல்வர் கருத்து

  துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். • 11:19 (IST) 25 Apr 2022
  "திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை"

  ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். • 11:14 (IST) 25 Apr 2022
  முதலமைச்சருக்கு நன்றி கூறிய நயினார் நாகேந்திரன்

  முதலமைச்சர் கட்சி வேறுபாடு பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு திட்டங்கள் தருவதற்கு எனது மனமார்ந்த நன்றி

  என்று நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். • 11:08 (IST) 25 Apr 2022
  பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலனை-அமைச்சர்

  கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். • 10:59 (IST) 25 Apr 2022
  இந்தியாவில் மேலும் 2,541 பேருக்கு கொரோனா

  இந்தியாவில் மேலும் 2,541 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 30 பேர் உயிரிழப்பு. நாடு முழுவதும் 16,522 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் • 10:44 (IST) 25 Apr 2022
  ரயில்வே வேலைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

  கருணை அடைப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023ம் ஆண்டு மே மாதம் வரை கால அவகாசம் வழங்கியது ரயில்வே அமைச்சகம் • 10:41 (IST) 25 Apr 2022
  இன்று அதிமுகவின் 2ம் கட்ட உட்கட்சி தேர்தல்

  அதிமுகவின் 2ம் கட்ட உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது • 10:30 (IST) 25 Apr 2022
  19 லட்சம் மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்பு

  10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கியது. இன்று தொடங்கிய தேர்வு மே 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்பு • 10:00 (IST) 25 Apr 2022
  முதுபெரும் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் காலமானார்

  கேரளா முதுபெரும் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் (89), உடல்நலக்குறைவால் காலமானார். சங்கரநாராயணன் மறைவுக்கு கேரள ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல்! • 09:59 (IST) 25 Apr 2022
  ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற திட்டமில்லை - அனில் அகர்வால்

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். • 09:49 (IST) 25 Apr 2022
  மாஸ்க் அணிவதை உறுதி செய்யுங்கள்: முதல்வர்

  வடமாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். • 09:49 (IST) 25 Apr 2022
  மாஸ்க் அணிவதை உறுதி செய்யுங்கள்: முதல்வர்

  வடமாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். • 09:47 (IST) 25 Apr 2022
  இன்றைய தங்கம் விலை நிலவரம்

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ136 குறைந்து ஒரு சவரன் ரூ39,424-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4928 ஆகும். • 09:42 (IST) 25 Apr 2022
  துணைவேந்தர்களை அரசே நியமிக்க சட்டமசோதா?

  பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. • 09:29 (IST) 25 Apr 2022
  கொரோனா தடுப்பு: ஆலோசனை தொடங்கியது

  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியது . கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது. • 09:09 (IST) 25 Apr 2022
  அறநிலையத்துறை அலுவலகத்தில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

  சென்னை, நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ15 கோடி செலவில் கூடுதல் கட்டடம். பூமி பூஜையுடன் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் • 08:57 (IST) 25 Apr 2022
  CUET தேர்வு - மத்திய அரசு விளக்கம்

  CUET தேர்வால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது. பல்வேறு நிபுணர்களுடன் விரிவான கலந்தாய்வு செயல்முறைகளுக்கு பிறகே CUET தேர்வு இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் • 08:31 (IST) 25 Apr 2022
  இலங்கை தமிழர்கள் மேலும் 15 பேர் வருகை

  இலங்கையில் இருந்து மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் தனுஷ்கோடி வருகை. பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதிக்கு வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து தொடர்ந்து தமிழர்களின் வருகை அதிகரிப்பு • 08:31 (IST) 25 Apr 2022
  இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து. இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். • 08:07 (IST) 25 Apr 2022
  ரயில் விபத்து - ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

  சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து. ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 279 மற்றும் ரயில்வே சட்டப்பிரிவு 151,154 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு • 08:00 (IST) 25 Apr 2022
  தொழிலதிபரை கொன்று 100 சவரன் கொள்ளை

  புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ20 ஆயிரம் கொள்ளை . கொலை செய்யப்பட்ட நபர் 52 வயதான முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நிஜாம். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சுTamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment