Tamil Nadu News Updates: வங்க கடலில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி, புயலாக வலுவிழந்தது; நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து
பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
இலங்கை கலவரம்
ராஜபக்ச குடும்பத்தின் சொத்துகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் 40க்கும் மேற்பட்ட வீடுகளை தீக்கிரையாக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் ராஜபக்சவின் தந்தை சிலை தகர்ப்பு
பெட்ரோல் நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 35வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை
ஐபிஎல் : குஜராத் அணி அபார வெற்றி
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி. முதலில் ஆடிய குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்ப்பு .தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 13.5 ஓவர்கள் முடிவில் 82 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ட்வீட்: “ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகி 2 நாட்கள் ஆகிவிட்டது; இடைக்கால அரசை நியமித்து முன்னேறி செல்ல வேண்டும். அரசமைக்க யாரும் முன்வராவிட்டால், அதிபர் கோட்டாபய உடனே சுதந்திர அரசை நிறுவி, மேலும் பொருளாதாரம் பாதிப்பதை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், விசிக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரை: “புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை இந்த வாரத்தில் நியமிக்கப்படுவர்; மக்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும். அதிபரின் அதிகாரங்களை குறைத்துக்கொள்ள தயார்; நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19வது திருத்தத்தை கொண்டுவருவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு; ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே தனது விருப்பம்” என்று கூறினார்.
கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி, மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. விளையாட்டு போன்ற நிகழ்வுகளை காலை நேரத்திலேயே முடிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய உள்ளூர் நபர்களுக்கு அந்நிறுவன வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என்றும் தலைவர் பதவியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது. மேலும் தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
ஆளுநர் மத்திய அரசுக்கு தான் அறிக்கை அனுப்பி உள்ளார். ஐபிசி குற்றங்கள் மத்திய அரசின் கீழ் தான் வரும். ஐபிசி குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு மத்திய அரசே தண்டனை வழங்கும் என்பது தவறான வாதம் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறியுள்ளார்
சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டிகளில், 100மீ தடை தாண்டும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஜோதி தங்க பதக்கம் வென்றார்
ராஜீவ்காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாதுஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் மேல்முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்ல. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது. சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில், குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது
சில சந்தர்ப்பங்களில், அமைச்சரவையின் பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாக இல்லாமல் இருந்தால், ஆளுநர் சுயமாக முடிவெடுக்க முடியும் என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
சென்னை எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சூளை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது
தேச துரோக வழக்கு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
ஆளுநர் எந்த விதிகளின் அடிப்படையில் கோப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்? ஆளுநருக்காக நீங்கள் ஏன் வாதாடுகிறீர்கள்? என்று பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் வார்டு எண்களின் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இருக்கைகள் ஒதுக்கீடு தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில். திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கான உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ₨1,000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேக்கடி(தேனி), பள்ளிப்பட்டு(திருவள்ளூர்), திருப்பூரில் தலா 5 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளாதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை, தலைமைச் செயலகத்தில் தேசிய அளவில் சிறந்த விருது பெற்ற 12 ஊராட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மத்திய அரசின் விருதுகளை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை வழங்கினார் சபாநாயகர் அப்பாவு. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை வழங்கினார்
முதல்வர் மு.க.ஸ்டாலினை முகநூலில் விமர்சித்தவரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு, கல்வியாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்!
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால், புதிய பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பேட்டி அளித்துள்ளார்.
இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்திற்கு தற்காலிக தடை விதித்து இலங்கை பெட்ரோலிய நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
தேச துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் மகேஷ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தேச துரோக வழக்குகளுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறையல்ல என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதால், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழு உறுதுணையாக இருக்கும் – இலங்கையின் இந்திய தூதரகம் ட்வீட்!
இலங்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும், பிற்பகல் 3 மணியளவில் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் அதிபர் கோட்டபய ராஜபக்சே பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லூர் அனல் மின்நிலைய ஆவது அலகில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு . கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி பாதிப்பு
இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில், 5 ஆயிரம் பேர் தமிழர்கள். தென் மண்டலத்தில் ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதில் பெருமை. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி என்பதே இலக்கு என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
திண்டுக்கல் பழனி சித்தரவு கிராமத்தில் உச்சகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பதாக புகார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். 19,494 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரியகுப்பம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளை அடிக்க வந்த 20 பேர், போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு. போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹472 குறைந்து, ரூ38,296க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ4787க்கு விற்பனை
இலங்கையின் ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை தலைவர் விக்ரமரத்ன ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழு முன் ஆஜராக உத்தரவு. இருவரும் காலை 10 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு முன் ஆஜராக அறிவுறுத்தல்
போர்க்களமாக காட்சியளிக்கும் இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு!
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்