பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 484-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார். காஞ்சிபுரத்தில் பைக் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சென்னையில் 1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி - காவல் ஆணையர்
சென்னையில் 1,343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சாந்திநிகேதன் சேர்ப்பு
மறைந்த நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் இல்லமான சாந்திநிகேதன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக உலக அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல்
சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மீண்டும் சீண்டினால் அக்காவுடன் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை விஜயலட்சுமி வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார்
தொண்டர்களால் தலைவரானேன் – ஸ்டாலின்
தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன். ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல. தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது தி.மு.க. 2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை தி.மு.க என முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்
நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டுவோம் - உதயநிதி
சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம், நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என வேலூர் தி.மு.க முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
தி.மு.க முப்பெரும் விழா; விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்
வேலூர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் தி.மு.கவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா தொடங்கியது முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது 51 ரன்கள் இலக்கை 6.2 ஓவர்களில் எட்டி எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது
காவிரி விவகாரம்: டெல்லி செல்லும் தமிழ்நாடு குழுவில் 12 எம்.பிக்கள்
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்கச் செல்லும் தமிழ்நாடு குழுவில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்
மீண்டும் மோடி பிரதமராக வர வாழ்த்துகிறேன்: எடப்பாடி பழனிசாமி
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பா பழனிசாமி ட்விட்டர் எக்ஸில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “இரக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகிய தலைமைப் பண்புகளே நமது தொலைநோக்குப் பார்வையுள்ள பிரதமராக உருவெடுத்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, னது கடின உழைப்பின் மூலம் நமது தேசத்தின் உணர்வை உயர்த்தியுள்ளார்.
அவரது பிறந்தநாளில், அவர் மற்றொரு வெற்றிகரமான பதவிக் காலத்தையும், நூறு வருட சேவையையும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சிக்கு வரும்: அண்ணாமலை
தமிழ்நாட்டில் 2026ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் எனக் கூறிய அண்ணாமலை கூட்டணி கட்சிக்குள் கொள்கை மாறுபடு இருக்கதான் செய்யும் என்றார்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏதோ வந்தோம் பேசுகிறோம் என்று அரசியல் செய்யக்கூடாது; அண்ணாமலையை சாடிய சசிகலா
அண்ணா குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சசிகலா: “நேற்று வரை ஒரு வேலையில் இருந்துவிட்டு இன்று அரசியலுக்கு வந்து வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது அரசியலை சிலர் விளையாட்டுத் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ வந்தோம் பேசுகிறோம் என்று அரசியல் செய்யக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது; அ.தி.மு.க-வுக்கு அண்ணாமலை பதிலடி
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “சனாதன இந்து தர்மம் உறுதியாக உள்ளது; அதை யாராலும் அழிக்க முடியாது. சனாதன தர்மம் நிலைத்திருக்க காரணம சிவனடியார்கள்; இந்து தர்மம், சனாதன தர்மத்தை மீட்கும் வகையில் பிரதமர் செயல்பட்டு வருகிறார். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பா.ஜ.க, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது.” என்று தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளிடம் வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது; தங்கம் தென்னரசு எச்சரிக்கை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் குறைந்தபட்சத் தொகை இல்லாத பட்சத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் செலுத்தப்பட்ட ரூ.1,000 பிடித்தம் செய்த செய்திகள் வெளியான நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளிடம் வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையில் வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அது குறித்து பொதுமக்கள் முதல்வரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ல் புகார் அளிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சகோதரி மறைவு - ஸ்டாலின் இரங்கல்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு கீதா மேத்தாவின் பங்களிப்பு மகத்தானது நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்திஅருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் பெரியார் படத்துக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளையொட்டி
அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதலமைச்சரை தொடர்ந்து பெரியார் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மோடிக்கு ராகுல் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம்
பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம். கோவை தெற்கு மாவட்ட பாஐக சார்பாக 73 ஜோடிகளுக்கு நாட்டு மாடு உள்ளிட்ட சீர்வரிசையுடன் இலவச திருமணம்.
புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஜெகதீப் தன்கர்
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கஜ் துவார் என அழைக்கப்படும் நுழைவு வாயிலில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்பு
வீரலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு- விஜயலட்சுமி
என்னை பற்றி அவதூறு பரப்பினால், வீரலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்- நடிகை விஜயலட்சுமி
விநாயகர் சதுர்த்தி - பூக்கள் விலை உயர்வு
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்கள் விலை கடுமையாக உயர்வு. மதுரை மாட்டுத் தாவணி மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை விற்பனை
ரவுடி விஷ்வா கடிதத்தால் பரபரப்பு
"என் மீது போலி என்கவுண்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமனும், உதவி ஆய்வாளர் தயாளனும்தான் காரணம்". ஸ்ரீபெரும்புதுரில் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு
'மக்களுடன் ஸ்டாலின்' செயலி
'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வேலூரில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் தொடங்கி வைக்கிறார்
சபரிமலை கோயில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. புரட்டாசி மாத பூஜைக்காக இன்று முதல் 22-ம் தேதி இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்தியா Vs இலங்கை பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? கொழும்புவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதல்
6 மாவட்டங்களில் இன்று மழை
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.