Tamil Nadu News Updates: கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரு நாளில் மட்டும், 46,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 77 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
விமான தடை நீட்டிப்பு
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்ட செல்வதால், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் முதல் 6 மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டு்ளளது.
இந்த பட்டியலில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா 2-வது இடத்திலும், தமிழகம் 3-வது இடத்திலும், கேரளா 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடததிலும் உத்திரபிரதேஷ் 6-வது இடத்திலும் உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் பாதித்த பயிர்களுக்குரிய நிவாரணத்தொகை ரூ 97.92 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி 2 நாட்களில் வரவு வைக்கப்படும் என்று எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்து.
உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 59 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹாட்டிமா தொகுதியில் போட்டியிடுகிறார்
தமிழக கோயில்களின் உயர்நிலை ஆலோசனை குழுவின் முதல் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறையின் கீழ் இதுவரை 4 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. அன்னதான திட்டத்தின் கீழ் 44 லட்சம் உணவு பொட்டலங்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு வழங்கினோம் என்று கூறியுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளே உள்ளதால் வீட்டு தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்க்தில் பதிவிட்டுள்ளார்.
கோயில் யானைகளுக்கு வேறு எந்த மாநிலத்திலும் புத்துணர்வு முகாம் இல்லை தமிழகம் அதை சிறப்பாக செயல்படுத்துகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது.
சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
கேரளாவில் ஒரேநாளில் 46,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்புக்கு 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கேரளாவில் கொரோனா தொற்றுக்கு 1.99 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சீன தலைநர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி 4-ந் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஜிங் நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கோயில்களின் நிகழ்வுகளை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயாரா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு அமைச்சர் சக்கரபாணி விடுத்துள்ள நிலையில், விவாதிக்க தயாராக இல்லாவிடில் ஆதரமற்ற குற்றச்சாட்டுக்கு ஈபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்
2021 ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்
பாகிஸ்தான், லாகூரில் உள்ள சந்தையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. தரவரிசையில் நியூசிலாந்து அணி 2வது இடமும், இந்திய அணி 3வது இடமும் பிடித்துள்ளன
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்துகிறார்
உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு 59 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹாட்டிமா தொகுதியில் போட்டியிடுகிறார்
கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8-ம் கட்டம் அகழாய்வும், சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வும், கங்கைகொண்டசோழபுரத்தில் 2-ம் கட்ட அகழாய்வும் மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி மற்றும் பெரும்பாலையில் முதல் கட்ட அகழாய்வும் தொடங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது
அரசு நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த வழக்கில், ஓ. பன்னீர் செல்வத்துக்கு, உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருந்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். குற்றச்சாட்டில் 2 அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி, மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்வதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையும், 2 மாத ஊதிய நிலுவை தொகையும் வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹாடிமா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்
இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட, ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் இடைக்கால தடை விதித்து சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு, சம்பந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, லஞ்ச ஒழிப்புத்துறை எனும் ஆயுதத்தை திமுக அரசு தொடர்ந்து இயக்கி கொண்டிருக்கிறது. குடியரசு தின அணி வகுப்பில் தமிழக ஊர்தியை பங்குபெற வைக்க முடியாத அரசு, அரசியலில் ஏற்படும் பின்னடைவை திசை திருப்ப திமுக முயற்சிப்பதாக இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் நடைபெறும் வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டாத ரூ.1.60 கோடி பணம், 3 கிலோ தங்கம் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியதன் மூலம், ரூ.500 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் கீழடி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்பட 7 இடங்களில் பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் வரை, தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
யூடியூபில் தேவையற்ற பதிவுகளை நீக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? தவறுக்கு துணைபுரிந்தால் YOUTUBE-ம் குற்றவாளிதான். வெடிகுண்டு தயாரிப்பு, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவற்றை கூட இந்த தளம் கற்றுத் தருகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகில இந்திய இட ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு என்பதால் அதை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது எனவும் ருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடு அளிப்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கீழடி, சிவகாளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை என 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிமுகவை அழித்து நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே திமுகவின் நோக்கம் என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சட்டமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், மீண்டும் அப்படி ஒரு தேர்தல் நடைபெற்றால் திமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஊழலை மறைக்கவே ரெய்டுகள் நடத்தப்படுவதாக திமுக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற 22ம் தேதி அன்று ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை
தருமபுரியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றும் ரூ. 4500 கோடி செலவில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ரூ. 250 கோடி செலவில் சேலம், தருமபுரி இடையே போக்குவர்த்தை எளிதாக்க மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிறைவுபெற்ற பணிகளை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ 23.83 கோடி மதிப்பீட்டிலான சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபத்தை திறந்துவைத்தார்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ272 குறைந்து, ரூ36 ஆயிரத்து 648க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்களுக்கு உணவு விநியோகம் நடைபெற்று வருகிறது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 491 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.82 கோடியாக அதிகரித்துள்ளது.
பாப்பிரெட்டிபட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி வீடு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது
கோவை பிகே புதூர் பகுதியில் உள்ள குடோனில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க 4வது நாளாக வனத்துறை அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.