Advertisment

Tamil News Highlights: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆகிறார்

இன்று நடைபெறும் செய்தியை தெரிந்துகொள்ள இந்த லிங்கில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News

Live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 Tamil news updates

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது

இ.பி.எஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது . ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் நிர்வாகிகள் பங்கேற்பு

காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி அமெரிக்க அதிபர் பைடன்,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் கூட்டாக அஞ்சலி செலுத்தினர்

அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின் . டெல்லியில் குடியரசு தலைவரின் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின் . தமிழக முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி 

"அமைதியின் சுவற்றில்" கையெழுத்திடும் உலகத் தலைவர்கள்

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி . நினைவிடம் வரும் உலக தலைவர்களுக்கு சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்பு . ராஜ்காட்டில் உள்ள "அமைதியின் சுவற்றில்" கையெழுத்திடும் உலகத் தலைவர்கள்

இன்று 2வது நாள் கூட்டம்

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு - இன்று 2வது நாள் கூட்டம் நடைபெறுகிறது.

சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர் 

 ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்  . விஜயவாடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் சமர்ப்பித்த ரிமாண்ட் ரிப்போர்ட் மீது வாதம் நடைபெறுகிறது

மொராக்கோ நிலநடுக்கம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000- தாண்டியது. மொத்தம் 2,012 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,059 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

 3வது சுற்று வட்ட பாதையில் ஆதித்யா எல்1

ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு முன்னேறியது. தற்போது விண்கலத்திற்கு மூன்றாவது உந்துவிசை அளிக்கப்பட்டு 296 கிமீ x 71767 கிமீ சுற்றுவட்ட பாதையில் இயக்க வைக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்ட பணிகள் வரும் 15ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி

சென்னை அடுத்த மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி சாலைகளில் தேங்கிய கழிவு நீரை முறையாக அகற்றாத மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்,

நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் தொடங்கியது.  பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்பு. நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்

ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்; "பாஜக அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமானது" என காங்கிரஸ் விமர்சனம்!

அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் பிரேசில்

அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை ஏற்கிறது பிரேசில். பிரேசில் அதிபரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி. இந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு பிரேசில் வசமாகிறது.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் காவல்துறை *நெல்லூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு: கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாடு திரும்புகிறார்

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாடு திரும்புகிறார். இந்திய பயணத்தை முடித்து கொண்டு வியாட்நாம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 

மீண்டும் புரட்சி பயணம் - ஓ.பி.எஸ் பேச்சு 

"சென்னையில் இன்று நடப்பது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது ஒரு கும்பல்; தொண்டர்களின் விருப்பத்தின் படி மீண்டும் புரட்சி பயணத்தை தொடங்க உள்ளேன்" என்று  மதுரை நாகமலையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

'ஓராண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம்': செயலாளர் விஷால் பேட்டி

"அடுத்த ஓராண்டுக்குள் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என நம்புகிறோம்; விரைவில் எங்கள் கட்டிடத்தில் இந்த கூட்டம் நடைபெறும்" என்று தென்னிந்திய நடிகர் சங்க 67வது பொதுக்குழு கூட்டத்துக்கு பின், பொதுச்செயலாளர் விஷால் கூறினார். 

காற்றில் பறந்த அரசு துறை ஆவணங்கள்

 இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டு கட்டாக அரசு துறை ஆவணங்கள் காற்றில் பறந்தன. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மோடி - பிரான்சு அதிபர் சந்திப்பு 

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

நாடு நன்றாக இருக்க 2024 தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும் - மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளையும் வென்றால்தான் அடுத்து அமையும் ஆட்சியில் முக்கிய பங்காற்ற முடியும்; நாடு நன்றாக இருக்க 2024 நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.

தெற்காசியாவில் எங்களின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி இந்தியா - துருக்கி அதிபர் எர்டோகன்

தெற்காசியாவில் தனது நாட்டின் மிகப் பெரிய வர்த்தகப் கூட்டாளியாக இந்தியா இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மிகப்பெரிய திறனைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஜி20 உச்சிமாநாடு வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் வாழ்த்து 

ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் , “இந்தியாவின் ஜி 20 ஜனாதிபதி பதவியின் வெற்றிக்காகவும், உலக மக்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்காக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்...” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி, தென்கொரியா அதிபர்கள் உடன் மோடி இருதரப்பு சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸ் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

கோடி கோடியாக சம்பளம்... நடிகர் சங்க கட்டடத்தை கட்டமுடியாதா? ஹீரோக்களை கேள்வி கேளுங்கள் - நடிகர் செந்தில் ஆவேசம்

"கோடி கோடியாக ஊதியம் வாங்குகிறீர்களே நடிகர் சங்க கட்டடத்தை கட்டமுடியாதா? என அனைத்து கதாநாயகர்களையும் பார்த்து கேள்வி கேளுங்கள் என நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு வந்த நடிகர் செந்தில் ஆவேசமாகப் பேசினார். 

சந்திரபாபு நாயுடுவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி மனுத் தாக்கல்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கபட்டதையடுத்து, ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.

ஆந்திரா முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை; ரோஜா கொண்டாட்டம்

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கட்சி தொண்டர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்

.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி - ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னை, உத்தண்டியில் நடைபெற்ற .ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் சரிவர ஏற்பாடுகள் செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்  அடைந்தனர். டிக்கெட் வாங்கியவர்களையே அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment