Advertisment

Tamil News Highlights: கனமழை: கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
School leave

Tamil news live

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 

Advertisment

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் 536-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil News Updates 

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு



அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 21ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.



சட்டசபையில் நிதீஷ்குமார் சர்ச்சை கருத்து : இந்திய கூட்டணியை விமர்சித்த மோடி

இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ஒருவரின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சி குழுவில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை பெண்களுக்கு "மரியாதை" என்ற பெயரில், தற்போதைய அரசாங்கத்தை (மத்திய) கவிழ்க்க எதிர்கட்சியினர் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறார். இதற்காக ஒரு மாநில சட்டசபையில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சர்ச்சையாக வார்த்தைகளை பயன்படுத்தினார். தாய்மார்களே, சகோதரிகளே... அதற்காக அவர் வெட்கப்படவே இல்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி கூறினார். 

மேலும் அப்படிப்பட்ட பார்வை கொண்டவர்கள், உங்கள் மரியாதையை எப்படிக் காப்பாற்றுவார்கள்அவர்கள் எவ்வளவு தாழ்ந்து போவார்கள என்பது இதில் இருந்து தெரிகிறது. இதனால் நாட்டுக்கு ஒரு துரதிஷ்டமான நிலை. எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் கூட பெண்களுக்கு அவமரியாதைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று மோடி கூறினார்.

அமர் பிரசாத்தை குண்டாஸில் அடைக்க திட்டமில்லை : காவல் துறை

 பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

நெட்பிளிக்ஸில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படமாக ஜவான் சாதனை

நெட்பிளிக்ஸில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது ஜவான். திரைப்படம் இதுவரை 1 கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது; ரயில்வே எஸ்.பி எச்சரிக்கை

தீபாவளியையொட்டி, ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல கூடாது. மீறினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே எஸ்.பி சுகுணா சிங் தெரிவித்துள்ளார்

சீமான் பிறந்த நாள்; எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சீமானின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன் என சீமானுக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் புலம் பெயர்ந்தோர்; ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை

முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பயணிக்கும் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்வே பாதுகாப்பு படை உடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை, டிக்கெட் பரிசோதகர்கள் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை; 4 பேர் கைது

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படப்பையில் வங்கதேசத்தை சேர்ந்த சபாபுதீன் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மறைமலைநகர் அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் முன்னா, மியான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக சாஹித் உஷான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

ரேக்கிங்சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ரேக்கிங் கொடுமை செய்த புகாரில் கைதான சீனியர் மாணவர்கள் பேரும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

மக்கள் தொகை பெருக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆனைய தலைவர் ரேகா சர்மா கடிதம்

தொல்.திருமாவளவன் பேட்டி

அண்ணாமலை நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்கள் அதிமுகபாமக தொண்டர்கள் என்பதனை அதிமுக உணர வேண்டும். அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது - தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு!

நாடாளுமன்ற தேர்தல்: தேர்தல் அதிகாரிகள் நாளை ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் தேர்தல் அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் நாளை (நவ.9) முதல் 11 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்- மெட்ரோ ரயில் நிர்வாகம்

2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்                

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்... மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும்-பிரேம் ஆனந்த் சின்ஹாதெற்கு மண்டல கூடுதல் ஆணையர்

கொடிவேரி அணையிலிருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைகட்டில் இருந்து ஆயிரத்து 691 கன அடி உபரிநீர் வெளியேறி வருவதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் - செல்லூர் ராஜு

அண்ணாமலை சொல்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட முடியுமாஅமைச்சராக சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் - செல்லூர் ராஜு

மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரிதென்காசிநெல்லைகன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு;

ஈரோடுதிருப்பூர்தேனிதிண்டுக்கல்மதுரைவிருதுநகர்தூத்துக்குடிராமநாதபுரம்சிவகங்கைபுதுக்கோட்டைதஞ்சைதிருவாரூர்நாகைமயிலாடுதுறைகடலூர்சேலம்தருமபுரிகிருஷ்ணகிரிதிருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மையம்

மன்னிப்பு கோரிய நிதிஷ்குமார்

பீகார் சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம். எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்னிப்பு கோரினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம்

பீகார் சட்டப்பேரவையில் கடும் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் தமிழகத்தின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்கிறார்

கொடநாடு வழக்கு: தகவல்கள் பெற பென் டிரைவ்கள் ஒப்படைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - மாவட்ட நீதிபதியிடம் பென் டிரைவ்களை சமர்ப்பித்த சிபிசிஐடி போலீசார்

கொடநாடு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள். ஆய்வகத்தில் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளில் பதிவான தகவல் பரிமாற்ற விபரங்கள் சேகரிப்பு

பதிவான தகவல்களை பெற சிபிசிஐடி போலீசார் 3 பென் டிரைவ்களை மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். 3 பென் டிரைவ்களும் விரைவில் கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தகவல்கள், பதிவு செய்து பெறப்பட உள்ளது. ஆய்வு முடிவுகள் மூலம் சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்ப்பு. 

பாஜக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் நடக்காது- சேகர் பாபு 

எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் சரி. எத்தனை முறை இ.டி, ஐ.டிக்களை கொண்டு ரெய்டு நடந்தினாலும் சரி தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை இது திராவிட மண், அண்ணாமலை போன்றோருக்கு அதிகாரத்தில் கையெழுத்திடும் வாய்ப்பை தமிழக மக்கள் ஒருபோதும் வழங்க மாட்டார்கள்- சேகர் பாபு 



ஓ.பி.எஸ் மேல்முறையீடு

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு

அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு ஒப்புதல்

பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை தெரிவிக்க  தொலைபேசி எண்கள் அறிவிப்பு 

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களில் பயணிக்கலாம். ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்" - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,702 கன அடியில் இருந்து 6,498 கன அடியாக அதிகரிப்பு அணையின் நீர்மட்டமானது 53.80 அடியில் இருந்து 54.55 அடியாக உயர்ந்துள்ளது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

2வது முறையாக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி 

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது முறையாக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார் அமைச்சர் பொன்முடி.

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨80 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ. 5,660க்கும், ஒரு சவரன் ரூ. 45,280க்கும் விற்பனை

10 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை

ஆள் கடத்தல் வணிகம் தொடர்பாக 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை.  திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுவை, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சோதனை

கல்வி அதிகாரி வீட்டில் ரெய்டு - ரூ.3 லட்சம் பறிமுதல்

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.13,000 சிக்கியது முதன்மை கல்வி அலுவலர் ராமனின் பதவிக்காலம் கடந்த 7ம்தேதியுடன் நிறைவடைந்தது பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கியதாக தகவல்

சென்னை: என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது

 சென்னையில் நடைபெற்று வரும் என்.. சோதனையில் 3 பேர் கைதுபடப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்த என்..போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிப்புதிரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிப்புமறைமலைநகர் பகுதியில்ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னாமற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் கைதுபோலி ஆதார் அட்டை தயாரித்துஅதன் மூலம் பணியாற்றி வந்தது கண்டுபிடிப்பு

அரபிக் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

69 அடியை எட்டிய வைகை அணை:  5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

மாவோயிஸ்ட் மற்றும் சிறப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு - 2 பேர் கைது

 கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை - துப்பாக்கிச் சூடு. மாவோயிஸ்ட் நடமாட்டம் - சிறப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது துப்பாக்கி சூடு. மாவோயிஸ்ட் மற்றும் சிறப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு - 2 பேர் கைது . மாவோயிஸ்ட்டுகள் இருவரை கைது செய்தது சிறப்பு படை - 2 பேர் தப்பியோடியதாக தகவல். அனிஷ் என்பவரை வீட்டை சிறப்பு படையினர் சுற்றி வளைத்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

 சென்னை: 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

 சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் ஆய்வு. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் இல்லங்களில் சோதனை. மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீஸ் பாதுகாப்புடன் என்.. சோதனை. சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் - என்.. அதிகாரிகள்.

 நானும், திமுகவினரும் எதற்கும் பயப்பட மாட்டோம்: அமைச்சர் ..வேலு

எதற்கும் பயப்பட மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாகவே வருமான வரி சோதனை மூலம் அச்சுறுத்தல். காசா கிராண்ட், அப்பாசாமி நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும், திமுகவினரும் எதற்கும் பயப்பட மாட்டோம்- அமைச்சர் ..வேலு.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment