தமிழ்நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் காலை வரை மழை தொடர்வதால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து உபர் நீர் திறக்கப்படவுள்ளது.
கொரோனா அப்டேட்
உலகளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 50.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் மூன்றாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
-
21:42 (IST) 07 Nov 2021
பாஜக குடும்பத்தை மையப்படுத்தவில்லை, மக்களுக்காக வேலை பணியாற்றுகிறது: பிரதமர் மோடி
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக இன்று இந்த இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அது எந்த குடும்பத்தையும் மையமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால், மக்கள் நலனுக்காக பாடுபடுவதில் கவனம் செலுத்துகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதிலும் கட்சியின் விழுமியங்கள் உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
-
21:29 (IST) 07 Nov 2021
தொடர் மழை: சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
11:27 (IST) 07 Nov 2021
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் 124 செயற்குழு உறுப்பினர்கள் என பலர் நேரில் பங்கேற்றுள்ளனர்.
-
10:36 (IST) 07 Nov 2021
மக்களுக்கு உதவுவதே சிறந்த பரிசு - கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்
மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் என கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
-
09:36 (IST) 07 Nov 2021
கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12,432 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.