வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.16) மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற சிஎஸ்கே
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சிஎஸ்கே அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையாக ரூபாய் 20 கோடி வழங்கப்பட்டது. 2ஆவது இடம் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
ஒரே மாதத்திலே 15 ஆவது முறையாக உயரும் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆகவும், டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது.
உலகளவில் 49 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.07 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 21.80 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனாவுக்கு மேலும் 15 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 35,884 ஆக அதிகரிப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்இலங்கை கடற்படையின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
வரும் காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப்பால் மட்டுமின்றி ஆட்டுப்பால் விற்பனை செய்யப்படும் என்றும், ஆவின் பால்கலப்பின மாடுகளில் இருந்து பெறப்படுவதால், ஆட்டுப்பாலும் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
சபரிமலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டுள்ளது. அதள்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும் என்றும், நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு அக்டோபர் 31க்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் எதையும் செய்யாமல் காலத்தை வீணாக கடத்தியது அதிமுக அரசு தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதித்துள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். ஆனால் சசிகலா வருகையால் அதிமுகவில் தாக்கம் இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை கடற்படையின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் (29) மாரடைப்பால் காலமானார். 19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்வைத்த இந்த கோரிக்கைக்கு, அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
கட்சியின் முழு நேரத் தலைவராக நான் இருக்கிறேன் என காங்கிரஸ் செய்ற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி கூறியுள்ளார். மேலும் நேரடியாகவே நேர்மையான, வெளிப்படையான விவாதங்களை நடத்தலாம், ஊடகங்கள் வாயிலாக கட்சித் தலைமையிடம் பேச வேண்டாம் எனவும் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அதிமுகவை கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி என்ற மத்திய அரசின் தொடர் பிரச்சாரம் நம்பக்கூடியதாக இல்லை. நமக்கு தெரிந்தவரை பொருளாதார மீட்பு என கூறி தேசிய சொத்துக்களை விற்பதே மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன். இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கிவைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன் என சசிகலா கூறியுள்ளார்
சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த தார்மீக உரிமை கிடையாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண் கலங்கினார் வி.கே.சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு 9 மாத சிறை தண்டனை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று சுதாகரன் விடுதலையானார்.
அதிமுக பொன்விழாவை ஒட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்துகிறார். அவரை அதிமுக கொடியேந்தி தொண்டர்கள் வரவேற்றனர்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான மாரத்தானில் 750 கிமீ தூரத்தை 2 வாரங்களுக்குள் கடந்து சாதனை புரிந்த பள்ளி மாணவர் சர்வேஷூக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு தொகையாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம், அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட 57 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 166 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 17,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கட்சியின் புதிய தலைவர் மற்றும் உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று சசிகலா மரியாதை செலுத்துகிறார்.