Tamil Nadu News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கியது. சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் - அரசாரணை வெளியீடு
கடந்தாண்டு நவ.24ஆம் தேதி வரை கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க 182 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த 36 ஆயிரத்து 413 பேரின் குடும்பத்தினருக்கு பணம் வழங்கப்படவுள்ளது.
"பிரதமர் மோடி திமிர் பிடித்தவர்" - மேகாலயா ஆளுநர் சத்தியபால்
கொரோனா அப்டேட்
உலகம் முழுவதும் கொரோனாவால் 29.53 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 25.59 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 54.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல்,டீசல் அப்டேட்
62 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:42 (IST) 05 Jan 2022அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவிப்பு
அனைத்து வகை இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
- 23:28 (IST) 05 Jan 2022ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காரில் சென்ற ஒருவர் சுட்டுக்கொலை - போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காரில் சென்ற ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுலார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22:03 (IST) 05 Jan 2022நடிகை மீனாவுக்கு கொரோனா தொற்று உறுதி
நடிகை மீனாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 20:50 (IST) 05 Jan 2022தமிழகத்தில் மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 9 பேர் பலி
தமிழகத்தில் மேலும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 2,731ஆக இருந்த நிலையில் 4,862 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்தனர்.
- 20:47 (IST) 05 Jan 2022இந்தியாவில் முதல் ஒமிக்ரான் மரணம் பதிவு
கடந்த வாரம் ராஜஸ்தானின் உதய்பூரில் இறந்த நபரின் மாதிரிகள், கோவிட் -19ன் திரிபான புதிய ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முதல் ஒமிக்ரான் மரணத்தை புதன்கிழமை பதிவு செய்தது.
- 20:43 (IST) 05 Jan 2022சென்னையில் ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் ஒரே நாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சென்னையில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் கொரோனாவுக்கு 7,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 19:57 (IST) 05 Jan 2022கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் வெளியே சுற்றினால் போலீசில் புகார் அளிக்க வேண்டும்
கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் முடிவு வருவதற்குள் வெளியே சுற்றினால் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
- 19:52 (IST) 05 Jan 2022கோவையில் பொது இடங்களில் மக்கள் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
“கோவையில் பொது இடங்களில் கொரோனோ விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; பொது இடங்களில் மக்கள் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும்” - மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
- 19:50 (IST) 05 Jan 2022குரோம்பேட்டை எம்.ஐ.டியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்வு
குரோம்பேட்டை எம்.ஐ.டி வளாகத்தில் 68 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கே அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுது, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் விடுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 19:44 (IST) 05 Jan 2022பிரதமர் மோடி திரும்பிச் சென்றதற்கு பஞ்சாப் முதல்வர் வருத்தம்
பாதுகாப்பு குளறுபடி காரணமாக பஞ்சாபில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தடைகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி, திரும்பிச் சென்றதற்கு வருந்துகிறோம் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
- 18:44 (IST) 05 Jan 2022ஆளுநரின் உரை நமத்துப்போன பட்டாசு : அண்ணாமலை கருத்து
தமிழகத்தில் இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரையாறறினார். இந்த உரையில் முதல்வர் ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசிய நிலையில், ஆளுநரின் உரை நமத்துப்போன பட்டாசாக ஏமாற்றமளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் ஆளுநரின் உரை மக்களுக்கான உரையாக இருக்க வேண்டுமே தவிர அரசியலாக அமையக்கூடாது என்று கூறியுள்ளார்.
- 18:40 (IST) 05 Jan 2022பாராசிட்டமலோ அல்லது வலி நிவாரணியோ பரிந்துரைக்கப்படவில்லை - பாரத் பயோடெக்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூச செலுத்தப்பட்டவுடன் பாராசிட்டமலோ மாத்திரை கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசிக்கு பிறகு பாராசிட்டமலோ அல்லது வலி நிவாரணியோ பரிந்துரைக்கப்படவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
- 17:51 (IST) 05 Jan 2022விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 17:31 (IST) 05 Jan 2022நீட் தேர்வுக்கு முழு பொறுப்பு ஆளுநர்தான் - டி.ஆர்.பாலு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 3வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு முழு பொறுப்பு ஆளுநர்தான்; சட்டத்தை மதிக்காத ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
- 17:09 (IST) 05 Jan 2022இரவு பணிக்கு செல்பவர்களுக்கு அடையாள அட்டை, தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - தமிழக அரசு
தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், இரவு பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டையுடன், தடுப்பூசி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- 16:50 (IST) 05 Jan 2022உணவகங்கள், விடுதிகள், அடுமனைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளில் உணவகங்கள், விடுதிகள், அடுமனைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 16:33 (IST) 05 Jan 2022திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 16:15 (IST) 05 Jan 2022பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
- 16:13 (IST) 05 Jan 20221 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து
1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்
- 15:59 (IST) 05 Jan 2022தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுகிறது
- 15:45 (IST) 05 Jan 2022சாலையை மறித்த போராட்டக்காரர்கள் - மேம்பாலத்தில் 15 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி
பாஞ்சாப்பில் பிரதமர் செல்லும் பாதையை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேம்பாலத்தில் 15 நிமிடம் பிரதமர் மோடி காத்திருந்ததாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது
- 15:28 (IST) 05 Jan 2022நெல்லையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி
பிரேசில் நாட்டில் இருந்து நெல்லை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- 15:21 (IST) 05 Jan 2022நெல்லை பள்ளி விபத்து -மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
நெல்லையில் டவுண் சாஃப்டர் பள்ளி விபத்து தொடர்பாக கோட்டாச்சியர் தலைமையிலான குழு நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை அறிக்கையை சிறப்பு குழு தாக்கல் செய்தது
- 15:12 (IST) 05 Jan 2022நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி
நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டதாக அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
- 15:00 (IST) 05 Jan 2022பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் திடீர் ரத்து!
பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் இன்று ரூ.42,750 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
- 14:51 (IST) 05 Jan 2022கல்லூரிகளுக்கு விடுமுறை..வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை!
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கால், இனி சனிதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். மேலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
- 14:35 (IST) 05 Jan 2022தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!
தமிழகம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
- 13:54 (IST) 05 Jan 2022முன்னாள் அமைச்சர் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் தமிழக போலீசரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- 13:50 (IST) 05 Jan 20227 நாட்களுடன் வீட்டுத்தனிமை முடித்துக் கொள்ளலாம்: மத்திய அரசு!
கொரோனா தொற்று பாதித்து, வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு, தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில், 7 நாட்களுடன் வீட்டுத்தனிமை முடித்துக் கொள்ளலாம். மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 13:45 (IST) 05 Jan 2022முன்னாள் அமைச்சர் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் தமிழக போலீசரால் இன்று கைது செய்யப்பட்டார்.
- 13:35 (IST) 05 Jan 2022முன்னாள் அமைச்சர் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் தமிழக போலீசரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- 13:32 (IST) 05 Jan 2022அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!
தேசியக் கொடி மற்றும் அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 13:31 (IST) 05 Jan 2022வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மண்டபங் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!
சென்னையில் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள், கோயில் மற்றும் ஹோட்டல்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்து முன்கூட்டியே மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 13:24 (IST) 05 Jan 2022அண்ணா பல்கலை,. விடுதியில் 12 மாணவர்களுக்கு கொரோனா!
அண்ணா பல்கலைக்கழக விடுதியில், ஏற்கனவே 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- 13:22 (IST) 05 Jan 2022வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மண்டபங் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!
சென்னையில் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள், கோயில் மற்றும் ஹோட்டல்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்து முன்கூட்டியே மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 13:19 (IST) 05 Jan 2022சென்னையில் 40,80,578 வாக்காளர்கள்: மாநகராட்சி ஆணையர்!
சென்னையில் 40,80,578 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 20,04,860; பெண் வாக்காளர்கள் 20,74,616 மற்றும் 3ம் பாலின வாக்காளர்கள் - 1,102 பேர் அடங்குவர். மேலும் 26,540 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
- 13:17 (IST) 05 Jan 2022பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர், சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
- 12:46 (IST) 05 Jan 2022ஐ.எம்.டியில் 67 பேருக்கு கொரோனா தொற்று
குரோம்பேட்டை எம்.ஐ.டி விடுதியில் 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து விடுதியிலேயே அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- 12:45 (IST) 05 Jan 2022ஆளுநர் உரை மீதான முதலமைச்சரின் பதிலுரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 7ம் தேதி வரை 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரின் பதிலுரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
- 12:43 (IST) 05 Jan 2022கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே ஜல்லிகட்டு நடைபெறும் - கமிட்டி
ஜனவரி 15ம் தேதி அன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உல்ளது என்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம் என்றும் கமிட்டியினர் கூறியுள்ளனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அறிவிப்பு
- 12:15 (IST) 05 Jan 2022கொரோனா தொற்று பரவல் தொடர்பான ஆலோசனை
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- 12:15 (IST) 05 Jan 2022ரயில்வே போலீசாரை, நேரில் அழைத்து பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நாடகமாடி கொள்ளையடித்த ஊழியரை கைது செய்து விரைவாக விசாரணையை மேற்கொண்ட ரயில்வே காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு
- 12:15 (IST) 05 Jan 2022இரண்டு நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதம் நாளையும், அதற்கு முதல்வரின் பதிலுரை 7ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:44 (IST) 05 Jan 2022சுயமரியாதை தத்துவங்களை தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வருகின்றது
சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு போன்ற தத்துவங்களை தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வருகின்றது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகிய உத்தன் தலைவர்களின் சிந்தனைகள் அரசின் வழித்தடத்தை தீர்மானிக்கின்றன என்றும் ஆளுநர் உரையில் ஆர்.என். ரவி
- 11:35 (IST) 05 Jan 2022தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக தமிழகத்தை உருவாக்குவோம்
மக்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதோடு தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக தமிழகத்தை மாற்றுவோம் என்று ஆளுநர் உரையில் தமிழக ஆளுநர் பேச்சு.
- 11:33 (IST) 05 Jan 2022மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
கடந்த 19ம் தேதி அன்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை இலங்கை விடுதலை செய்தது.
- 11:20 (IST) 05 Jan 2022வேதா நிலையம் - மேல்முறையீடு தள்ளுபடி
வேதா நிலையம் அரசு இல்லமாக மாற்றிய உத்தரவை ரத்து செய்தது சரியே என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு
- 11:18 (IST) 05 Jan 2022நுழைவுத் தேர்வுகள் தேவையற்றன என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் - ஆளுநர்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி தன்னுடைய உரையை துவங்கியுள்ளார். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றன என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.
- 11:17 (IST) 05 Jan 2022தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,36,25,813 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டும் 3,23, 91, 250 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,12,36, 759 ஆக உள்ளது. 3ம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 7, 804.
- 10:50 (IST) 05 Jan 2022'ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்” -ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
- 10:35 (IST) 05 Jan 2022இருமொழி கொள்கை - அரசு உறுதி
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
- 10:26 (IST) 05 Jan 2022'இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்' - ஆளுநர் ஆர்.என்.ரவி
இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை. சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது என ஆளூநர் ஆர்.என்.ரவி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
- 10:26 (IST) 05 Jan 2022ஆளுநர் உரை: அதிமுக, விசிக வெளிநடப்பு
நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் . அதே போல், அம்மா கிளினிக் மூலம், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கட்சியும் வெளிநடப்பு செய்துள்ளது.
- 10:26 (IST) 05 Jan 2022'இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்' - ஆளுநர் ஆர்.என்.ரவி
இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை. சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது என ஆளூநர் ஆர்.என்.ரவி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
- 10:15 (IST) 05 Jan 2022ஆளுநர் உரை: அதிமுக, விசிக வெளிநடப்பு
நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் . அதே போல்,
அம்மா கிளினிக் மூலம், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கட்சியும் வெளிநடப்பு செய்துள்ளது.
- 10:15 (IST) 05 Jan 2022ஆளுநர் உரை: அதிமுக, விசிக வெளிநடப்பு
நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் . அதே போல், அதிமுக கட்சியும் வெளிநடப்பு செய்துள்ளது.
- 09:32 (IST) 05 Jan 2022ஓடைபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து - 3 பேர் பலி
விருதுநகர் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
- 09:30 (IST) 05 Jan 2022கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில், 15 ஆயிரத்து 389 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 534 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரமாக உள்ளது.
- 08:53 (IST) 05 Jan 2022ஓடைபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து - 3 பேர் பலி
விருதுநகர் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
- 08:17 (IST) 05 Jan 20225 நாள்களில் ரூ.7,71,100 அபராதம் வசூலிப்பு
சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாத 1,082 பேரிடமிருந்து ரூ.2,26,100 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாத 3,685 நபர்களிடம் ரூ.7,71,100 வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.