பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து, இன்று முதல் 13ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை – பிரதமர்
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் அப்டேட்
சென்னையில் 67-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல், ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், “தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிகச்சிறந்த வழி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்தறை அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 முதல் 18-ந் தேதி வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், தற்போது இரவு 7.30 மணி நிலவரப்படி 20,765 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் எதிரொலியாக உணவகங்கள் மற்றும் பார்களை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும், 1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இல்லங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று கூறியுள்ள ஐ.சி.எம்.ஆர் தொடர்பில் இருந்த முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மட்டும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 11 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13ம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள்
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சிகிச்சை முடிந்து சென்றவர்கள் வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை. தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த இணை நோயாளிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏதேனும் இருந்தால் பரிசோதனை நடத்த வேண்டும்; அறிகுறி இல்லையெனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தலைவர்களின் திருவுருவச் சிலைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். பதற்றமான இடங்களில் உள்ள தலைவர்களின்
திருவுருவச் சிலைகளை பாதுகாக்க இரும்பு கூண்டுகள் அமைக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி
மற்றும் நவ்ஜோத் சித்து முன்னிலையில்
சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட்
காங்கிரஸில் இணைந்தார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு காலை, மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற காளைகள் மற்றும் வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உள்ளூர் மக்களின் வீடுகளுக்கு உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனை
சாவடி முன்பாகவே திருப்பி அனுப்பப்படுவர் என்று தென்மண்டல ஐ.ஜி. அன்பு அறிவுறுத்தியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தமிழ்நாடு அரசே நடத்த முடிவு செய்துள்ளது. நாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நியமன் செய்யப்பட்டுள்ளார். கனிமவள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுதீப் ஜெயின் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பரவல் தளர்வுகள் அளிக்கும் வரை முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி பாதையாத்திரை நடத்திய முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படையில் 931 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். 3வது டெஸ்டில் நிச்சயம் களமிறங்குவேன். விமர்சனங்கள் பற்றி கவலையில்லை. எனது தகுதியை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரேனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பதால், அவர் வீட்டுத்தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை 940 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தளர்வுகள் அளிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேகரிக்க வேண்டும். அத்தியாவசிய சூழலில் மட்டுமே முதல்வரின் தனிப்பிரிவில் அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து வெளியிட்ட நடிகர் சித்தார்த் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார்.
பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்கவும், அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
தண்ணீர் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய விவசாயிகளுக்கு, இனிமேல் விவசாய கடன் வழங்கக் கூடாது. மேலும் மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி சம்பந்தபட்ட விவசாயிகளை கருப்புப் பட்டியிலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் கூடுதல் ஆணையர் உள்பட மொத்தம் 70 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம். இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
300 மாடுபிடி வீரர்களை கொண்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதிகபட்சமாக போட்டியை பார்வையிட 150 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் ஆனால், பார்வையாளர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தேவைப்பட்டால் இரவு 10 மணி வரை நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி கடிதம் எழுதியுள்ளார்.
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நாகூர் கந்தூரி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது நாகை நிர்வாகம். தர்காவில் வழக்கமாக தொடர்ந்து நடைபெறும் வழிபாட்டு முறைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 20ம் தேதி அன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா தக்கம் குறைந்த பிறகு மீண்டும் தேர்வுகள் நடைபெறும் என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக தற்போது முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று இருக்கும் டைடல் பார்க் கட்டடத்திற்கு வயது 25. தமிழகத்தில் கணினி புரட்சியை கலைஞர் தான் உருவாக்கினார் என்று கருத்தரங்கில் முதல்வர் பேச்சு
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோரின் கழுத்து மீது கத்தி தொங்கிய நிலையிலும் ஜொகனஸ்பார்க் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடினார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.