Advertisment

Tamil News Highlights: சென்னையில் 4 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமல்

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Traffic

Tamil news Updates

Petrol and Diesel Price:: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

4 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமல்

சென்னையில் வரும் 4 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமலாகிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

'மக்கள் ஆணையிட்டால் தளபதி செய்து முடிப்பார்': நடிகர் விஜய்

லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், “சினிமாவை சினிமாவாக பாருங்கள்; சினிமா மக்கள் விரும்பும் பொழுது போக்கு அம்சம்.

பள்ளி, கல்லூரிகள் அருகில் மதுக்கடைகள் இருந்தாலும் மாணவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

நீங்கள் மன்னர்கள், நான் உங்கள் தளபதி. புரட்சித்தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், புரட்சி கலைஞர், தல என்றால் அனைத்திற்கும் ஒருவர் தான்.

தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல, மன்னர் ஆணையிட்டால் தளபதி செய்து முடிப்பார்” என்றார்.

ஆளுனருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட அறிவிப்பு

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விவகாரத்தில் கையெழுத்து போட மறுக்கும் ஆளுனர் ஆர்.என். ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

சென்னையில் வேக கட்டுப்பாடு:நவ.4 முதல் அமல்

சென்னையில் வேக கட்டுப்பாடு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

கோயம்புத்தூர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நியாய விலைக் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை  - அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே சிறந்த சேவைகளை வழங்கி லாபத்தில் இயங்கி வருகின்றன. விவசாயிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக்க் கூறினார்.

அக்டோபரில் 1 கோடியே 72 லட்சத்து 3 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல்  

2022 - 23 அக்டோபர் மாதத்தைவிட 13% உயர்ந்து 2023-24 அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.72 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. அதிக ஜி.எஸ்.டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா 2-ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளன என்று மத்திய நிதி அமைச்சக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்  விதித்தது மாலத்தீவு அரசு

மாலத்தீவு எல்லைக்குள் மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு ரூ. 2.27 கோடி மாலத்தீவு அரசு அபராதம் விதித்துள்ளது. மாலத்தீவு கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக 2 லட்சம் ரூபியா, வலை உபயோகித்து மீன் பிடித்ததாகவும் 20 லட்சம் ரூபியா, உரிமம் இல்லாமல் கடல் பகுதியில் இருந்ததாக  20 லட்சம் ரூபியா என மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரவுடி கருக்கா வினோத்தை நவ. 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய  ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லைஎன ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

வனத்துறைக்கு சொந்தமான கேமரா கோபுரம் விழுந்து கல்லூரி மாணவர் பலி

திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி - வெங்கல் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான கேமரா கோபுரம் காற்றில் உடைந்து விழுந்து விபத்து கல்லூரி மாணவர் தினேஷ் குமார் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தமிழ்நாடு மாநிலம் உருவான நாள் : ஆளுனர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தமிழ்நாடு மாநிலம் உருவான நாளான இன்று மாநிலத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மிகப்பெரிய நமது தேசத்தின் கலாசார பன்முகத்தன்மையை நமது மாநிலம் வளப்படுத்துகிறது. அதை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். -ஆளுநர் ரவி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை : உள்துறை செயலாளர், டி.ஜி.பி. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

RSS அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி தராததால் காவல்துறைக்கு எதிராக வழக்கு; உள்துறை செயலாளர், டி.ஜி.பி. நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

பயணிகளிடம் சில்லரை கேட்டு வாக்குவாம் செய்ய கூடாது : நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு

"மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணிகளிடம் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது. பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. பயணச்சீட்டிற்கு பயணிகள் அளிக்கும் பணத்தை பெற்று, உரிய மீதம் தொகையை வழங்க நடத்துனர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துமீறி கொடிக்கம்பம் வைத்த பா.ஜ.க : அ.தி.மு.க வாக்குவாதம் செய்ததால் அகற்றம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக மன்றமாக செயல்பட்ட குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அத்துமீறி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக அதிமுகவினர் வாக்குவாதம் செய்து வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் கொடிக்கம்பத்தை அகற்றினர். அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் சசிகலா, சமீபத்தில் பாஜகவில் இணைந்ததை அடுத்து அந்த கொடிக்கம்பம் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐயன் கார்த்திகேயன் தேர்வு

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள உண்மை செய்தியை கண்டறிவதற்கான புதிய பிரிவிற்கு  Mission Director ஆக ஐயன் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநில கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீசார் கடிதம்

ரூட் தல பிரச்னையில் மோதல் - 30 மாணவர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரி மாநில கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆவடி, தாம்பரம் பகுதியில் ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களை கண்காணிக்கவும் ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி,கோவை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சை, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 நவ.15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் 

சம்பா பருவத்தில் அனைத்து விவசாயிகளும் நவ.15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.  நவ.15க்கு முன் மழைப்பொழிவு ஏற்பட்டால் குறுகிய கால நெற்பயிர்களை நேரடி விதைப்பாக பயிரிடலாம்- வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

சிறப்பு மலர் வெளியீடு

சென்னை, தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரித்துள்ள சிறப்பு மலர்கள் வெளியீடு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார். "விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" - தமிழ், ஆங்கிலத்தில் வெளியீடு

ஜனநாயகத்திற்கே தி.மு.க ஆதரவு

எமர்ஜென்சியின் போது ஆட்சியடைவிட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர். இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது தி.மு.க- சென்னை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் 

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு

'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பாஜக - உதயநிதி 

இன்ஸ்டன்ட் அரசியல் செய்யும் பாஜகவிடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி, நாளையே கோட்டைக்குள் சென்று விட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. 

இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக் கொண்டு அரசியல் என்ற பெயரில் மக்கள் விரோதச் செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

வேலூர் இப்ராஹிம் உட்பட 10 பேர் கைது

கடலூர் பூதாமூர் பகுதியில் அனுமதியின்றி பா.ஜ.க கொடி ஏற்றியவர்கள் கைது. பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உட்பட 10 பேர் கைது. காவல்துறையினர் கொடி கம்பத்தை அகற்றினர்.  

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் முந்தைய செப்டம்பர் மாதத்தை விட 1.13 லட்சம் பயணிகள் அதிகரிப்பு அதிகபட்சமாக அக்டோபர் 20ம் தேதி மட்டும் 3.60 லட்சம் பேர் பயணித்துள்ளனர் - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨232 சரிவு ஒரு கிராம் தங்கம் - ரூ.5,686க்கும், சவரன் - ரூ.45,488க்கும் விற்பனை

நடிகை கௌதமி அளித்த நிலமோசடி புகார்: அழகப்பா வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறையினர் சீல்

நடிகை கௌதமி அளித்த நிலமோசடி புகார் அடிப்படையில், காரைக்குடி தொழிலதிபர் அழகப்பா வீட்டில் போலீசார் நடத்திய ஆய்வு நிறைவு; அழகப்பா வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறையினர் சீல்

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் தவிப்பு

"காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் தவிப்பு: உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்; தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

டிசம்பரில் தமிழகம் வருகிறார் மோடி 

டிசம்பரில் தமிழகம் வருகிறார், பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் ராமேஸ்வரம் பாம்பன் பால பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு வர உள்ளதாக தகவல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்

வரும் நவ.5 தேதி ரேஷன் கடைகள் இயங்கும்

வரும் நவ.5 தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது 

2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது trb.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிப்பு

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் 5ம் கட்ட பட்டியல் வெளியீடு

.ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 5 வேட்பாளர்கள் கொண்ட 5ம் கட்ட பட்டியல் வெளியீடு

.வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்தது. நவம்பர் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், இன்று ரூ.101.50 அதிகரிப்பு. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது.

என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற முடியாது

 "என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், எனது தலைமுடியைக் கூட தொட முடியாது" - மஹுவா மொய்த்ரா, எம்.பி.

 சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு - 73.95%

செம்பரம்பாக்கம் - 86.01%

புழல் - 80.64%

பூண்டி - 57.78%

சோழவரம் - 54.58%

கண்ணன்கோட்டை - 88.2%

 தீபாவளி பண்டிகை: அதிகரித்த ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை ஆடுகள் சந்தையில் இன்று அதிகாலை முதலே அதிக அளவில் ஆடுகள் விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment