Tamil Nadu News Updates: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில்நிலையம் அருகே உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு. 12 பேர் படுகாயம். 20க்கும் மேற்பட்ட வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விவகாரத்தில் கட்டிட உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த 2 நாள்களுக்கு மழை
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
பயணி தாக்கியதில் அரசு பேருந்து ஓட்டுனர் பலி
செங்கல்பட்டு: மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் பெருமாள்(54) உயிரிழப்பு. மது போதையில் இருந்த பயணி தாக்கியதில் படுகாயமடைந்த நடத்துனர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 38வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை
ஐபிஎல்: பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி. 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால், புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இலங்கைக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது. பிரதமர் மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும் என சென்னையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேருக்கு நீதிமன்ற காவல் அளித்து மேஜிஸ்திரேட் மோகனப்ரியா உத்தரவிட்டுள்ளார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஷேக் முகமது பின் சயீதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து ஆழமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவர். மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக சொல்வதை ஏற்க முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
மதுரை, உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் கண்மாயின் மடைக் கல்லில் கி.பி. 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 வரிகள் கொண்ட இந்த வட்டெழுத்து கல்வெட்டை தனியார் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்
கேரள எல்லையில் தக்காளி வைரஸ் குறித்து தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் பாதிப்பு கண்டறியப்படவில்லை. செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் மக்கள் அகற்றப்பட்டது வேதனையான விஷயம். தனியார் நிறுவனத்திற்காக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதுதான் திராவிட மாடல் அரசியலா? என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவுக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருச்சி, தில்லைநகர் அருகே உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்
தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் தேர்தலை எதிர்த்து கபடி வீரர் திருவேல் அழகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கொலை வழக்கில் சிறையில் உள்ள அகமத் அசின், ஜவகர், தேசமுத்து ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பிறப்பித்துள்ளார்.
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் நேற்று வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை அகர்தலா திரும்பி இருந்தார். இந்த நிலையில், முதல்வர் பதவியை பிப்லப் குமார் ராஜினாமா செய்துள்ளார். மேலும், ராஜினாமா கடித்தத்தை ஆளுநரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சேலம், ஆத்தூரில் வரும் 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 5 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தமிழக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் அருகில் புலி தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில், வெடிகுண்டு வெடித்ததில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளர்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா நேற்று இறந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகிய இரு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உதவி ஆணையர் சரவணன் டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தென் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, நடப்பு தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ட்வீட் செய்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சிறிது நேரத்தில் அந்த ட்விட்டை அவர் டெலிட் செய்துவிட்டார்.
வேலூர், ராமநாயிணிகுப்பம் ஊராட்சிமன்ற செயலாளர் ராஜசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமை்ககப்பட்டுள்ளது.தனது மரணத்திற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹரி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை கொண்டுள்ளார். இதனால் ஹரியை கைது செய்தால் தான் ராஜசேகரன் உடலை பெற்று கொள்வோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
நீலகிரி ஊட்டியில் இன்றும் நாளையும் 17வது ரோஜா கண்காட்சி தொடங்கியுள்ளது. ரோஜா மலர்கள் மூலம் வீடு, பியானோ, பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை ஒரே நாளில் ₨600 உயர்ந்துள்ளது. நேற்று வரை ₨500க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ₨1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இணைந்து பணியாற்ற முன்வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் மே 16, 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில், ஐவுளித்துறை சார்ந்த 25 சங்கத்தினர் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் செப். 26 முதல் அக். 2 வரை நுங்கம்பாக்கம் மைதானத்தில் சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் தொடர் நடக்க உள்ளது. இதற்காக முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமிரா, அவசர அழைப்பு பொத்தான்கள் உள்பட புதிய வசதிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் 27லிருந்து 30 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்பட 7 பேரை கைது செய்யக்கோரி இலங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
“இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, பணவீக்கம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது” என உதய்பூர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேச்சு!
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. 110 அடி உயரம் கொண்ட, தெற்காசியாவின் மூன்றாவது பெரிய தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனாவிற்கு பின்பு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட். கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் என பள்ளிக்கல்வித்துறை தகவல்
கோதுமை விலை அதிகரித்து வரும் நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசுக்கு தடை விதித்துள்ளது.
ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களால் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,858 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.மே 16 ஆம் தேதி சென்னை பல்கலை விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில், டெல்லி செல்கிறார் ஆளுநர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.மே 16 ஆம் தேதி சென்னை பல்கலை விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில், டெல்லி செல்கிறார் ஆளுநர்.
சென்னையில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்கான குறைதீர் முகாம். 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது