/indian-express-tamil/media/media_files/FRfyT0fOn5MTtr9HuBNw.jpg)
News updates
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 539-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் தீ விபத்து
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது, கோயிலை சுற்றி இருந்த ஓலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடி பட்டாசு விற்பனை
தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 6 விமானங்கள் ரத்து
தீபாவளி பண்டிகை காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தப் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு வேறு விமானங்களுக்க டிக்கெட் மாற்றி தரப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி
தமிழகத்தில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு. விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
உத்தரகாண்ட்: சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து: சிக்கிக்கொண்ட 36 தொழிலாளர்கள்
உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல். 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல்
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு- சென்னை காவல்துறை தகவல்
தீபாவளி: 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: ரூ.18.76 லட்சம் அபராதம்
அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மையை மதித்திடும் இந்து சமுதாய உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்: தமிமுன் அன்சாரி
இந்து சமுதாயப் பெருமக்கள் கொண்டாடி மகிழும் தீபாவளி, அவர்களின் மகிழ்ச்சிக்குரிய அடையாளங்களில் ஒன்று. பெரும்பான்மையினராக வாழும் போதும், சிறுபான்மையினரின் மீது அன்பு பகிர்ந்து வாழும் அவர்களின் உயரிய பண்பாட்டைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மதித்திடும் இந்து சமுதாய உறவுகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம். தமிமுன் அன்சாரி, மஜக பொதுச்செயலாளர்
ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
கோவை வெடிகுண்டு மிரட்டல்: காவல் ஆணையர் விளக்கம்
கோவையில் குண்டு வெடிக்கவுள்ளதாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பிய மர்ம நபர். ’இது போலியான மெயில். 3,000 திற்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை பதற்றமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்’- கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்
மோடி தீபாவளி வாழ்த்து
பிரதமர் மோடி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும் ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக்கட்டும் தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும்.- கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.