Tamil Nadu News Updates: எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியானது. திரைமறையில் நட்த பேச்சுவார்த்தையில் ரூ3.36 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் இறுதியானது. ட்விட்டரில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவுள்ளதாக எலான் எஸ்க் அறிவிப்பு
இன்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
விரைவில் அரசியல் பயணத்தை தொடங்குவேன்: சசிகலா
விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளேன். பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் என விகே சசிகலா பேச்சு
16 யூடியூப் சேனல்கள் முடக்கம்
பாகிஸ்தானை சேர்ந்த 6 சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்களை முடக்கம். தவறான நடவடிக்கைகள் பரப்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:27 (IST) 26 Apr 2022அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
- 20:15 (IST) 26 Apr 2022இ-ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி தீயிட்ட மருத்துவர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அடிக்கடி பழுது மற்றும் மைலேஜ் கொடுக்காததால் மருத்துவர் ஒருவர் விரக்தியில் இ-ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார்.
- 20:12 (IST) 26 Apr 2022மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்
சென்னை, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார்
- 18:14 (IST) 26 Apr 2022முதல்வர் குறித்து அவதூறு ஆடியோ வழக்கு; மீரா மிதுனுக்கு முன்ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- 17:31 (IST) 26 Apr 2022நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
- 17:29 (IST) 26 Apr 2022தமிழ்நாடு வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500ம், மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.5,00 ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்த ஊதிய உயர்வால் ஆண்டொன்றுக்கு ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
- 17:06 (IST) 26 Apr 2022அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி - சென்னை ஐகோர்ட் உத்தரவு
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 16:27 (IST) 26 Apr 2022ராகிங் செய்த 5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம்
திருவண்ணாமலை செங்கம் அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு
- 16:03 (IST) 26 Apr 2022காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு
காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். மேலும், காங்கிரசில் இணையாவிட்டாலும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி என்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்துள்ளார்
- 15:57 (IST) 26 Apr 2022மின்சார ரயில் விபத்து; முதற்கட்ட விசாரணை தகவல்
மின்சார ரயிலில் ஓட்டுநர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மின்சார ரயில் விபத்து வழக்கின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- 15:46 (IST) 26 Apr 2022நல்லகண்ணு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் - அண்ணாமலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம். அரசியலில் வாழும் உதாரணமாக உள்ள நல்லகண்ணு 100 ஆண்டுகாலம் வாழ கடவுளை வேண்டுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
- 15:17 (IST) 26 Apr 2022அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- 14:01 (IST) 26 Apr 2022தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:00 (IST) 26 Apr 2022ட்விட்டருக்கு இனி இருண்ட காலம்!
ட்விட்டருக்கு இனி இருண்ட காலம். அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால்- ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் பேச்சு!
- 13:26 (IST) 26 Apr 2022ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜூன் 24க்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுவரை 159 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
- 13:26 (IST) 26 Apr 2022விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!
காவல்நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்த சுரேஷின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 13:10 (IST) 26 Apr 2022புரசைவாக்கம் காவல்நிலையத்தில் விக்னேஷ் உயிரிழப்பு..
கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ், காவல்துறை விசாரணைக்கு வர மறுத்தார். விக்னேஷ் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். விக்னேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விக்னேஷ்க்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர் - சென்னை, புரசைவாக்கம் காவல்நிலையத்தில் விக்னேஷ் உயிரிழப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்!
- 12:52 (IST) 26 Apr 2022முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நிறைவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றது. இதுவரை 156 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
- 12:46 (IST) 26 Apr 2022"மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி"
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- 12:06 (IST) 26 Apr 2022வகுப்புவாத கலவரம் குறித்து நீதி விசாரணை-மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ராம நவமி, அனுமன் ஜெயந்தியின் போது நடந்த வகுப்புவாத சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
- 12:04 (IST) 26 Apr 2022ரஷ்யா வசம் சென்ற உக்ரைன் நகரம்-இங்கிலாந்து அறிவிப்பு
உக்ரைனின் கிரெமின்னா நகரம் ரஷ்யா வசம் சென்றுவிட்டதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- 11:50 (IST) 26 Apr 2022கலைஞர் பிறந்த நாள் இனி அரசு விழா-முதல்வர் அறிவிப்பு
கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
- 11:29 (IST) 26 Apr 2022"ரயில்வே துறையில் செலவுக்குறைப்பு என்ற பெயரில் பணியிடங்களை ரத்து செய்வதா?" - ராமதாஸ்
"ரயில்வே துறையில் செலவுக்குறைப்பு என்ற பெயரில் பணியிடங்களை ரத்து செய்வதா? இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
- 11:17 (IST) 26 Apr 2022திராவிட சிந்தனை-முதல்வர் கருத்து
திராவிட சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- 10:59 (IST) 26 Apr 2022ஐஐடியில் கொரோனா பாதிப்பு 111 ஆக உயர்வு
சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- 10:58 (IST) 26 Apr 2022ஜெயலலிதா மரணம் - புகழேந்தி ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆஜர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி புகழேந்தி அளித்த மனு மீதான விசாரணைக்கு ஆஜர்
- 10:41 (IST) 26 Apr 2022மதுரை மேம்பால விபத்து - கட்டுமான நிறுவனத்துக்கு ரூ3 கோடி அபராதம்!
மதுரையில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்திற்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்தது தேசிய நெடுஞ்சாலை துறை
- 10:06 (IST) 26 Apr 2022ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- 09:59 (IST) 26 Apr 2022தக்காளி விலை திடீர் உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ50க்கு விற்பனை. தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரிப்பு
- 09:47 (IST) 26 Apr 2022ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- 09:38 (IST) 26 Apr 2022CBSE 2-ம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது
இந்தியா முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பயிலும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட பொதுத்தேர்வை எழுதுகின்றனர்
- 09:35 (IST) 26 Apr 202210வது முறையாக சாம்பியனான சரத்கமல்
தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சரத்கமல்!
- 09:08 (IST) 26 Apr 2022ஜிப்மர் இயக்குனருக்கு கொரோனா தொற்று
ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிம்பர் வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 09:02 (IST) 26 Apr 2022விசாரணை கைதி மரணம் - சிபிஐ விசாரிக்க ஓ.பி.எஸ் கோரிக்கை
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது இறந்த விக்னேஷ் குடும்பத்துக்கு அரசு ரூ50 லட்சம் இழப்பீடு தரவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை
- 08:17 (IST) 26 Apr 2022மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்
சட்டப்பேரவையில் மின்சாரம் - மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.