Advertisment

Tamil News Today: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இன்று நடக்கு செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
time

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

Tamil News Updates

அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிகள் டெபாசிட் கூட வாங்க கூடாது - மு.க.ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து, தமிழ்நாட்டை நாசப்படுத்திய அடிமை அ.தி.மு.க-வுக்கும், தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜ.க-வுக்கும் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது” என்று கூறினார்.

ஐ.டி., இ.டி. கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன? - ஸ்டாலின் 

திருவள்ளூரில் நடைபெற்ற தி.மு.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: “ஐ.டி., இ.டி. கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்? அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction rate 1% கூட இல்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசியில் பேசிய மு.க. ஸ்டாலின்

முதலமைச்சருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள போதும்கூட வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொலைப்பேசியில் எங்களிடம் கேட்டறிந்து வருகிறார் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்; அமித் ஷாவுக்கு தேஜஸ்வி யாதவ் கோரிக்கை

பீகார் மாநில துணை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமித் ஷா பேசியுள்ளார்.

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் யாதவர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த சாதிவாரி கணக்கெடுப்பு தவறு என்றால் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை அமித ஷா நடத்தப்படும். உங்களை யார் தடுத்தார்? எனக் கேள்வியெழுப்பினார். 


டெல்லியில் காற்று மாசுபாடு; உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி பாதிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையில் நீடிக்கும் சூழலில், நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை, வங்கதேச வீரர்கள் ஈடுபடவில்லை. வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது

அரசியலுக்கு வருவதற்கான வேலையைதான் விஜய் செய்கிறார்வெற்றிமாறன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான வேலையைதான் செய்து வருகிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

புதிய மருத்துவக் கல்லூரி - பிரதமருக்கு அன்புமணி கடிதம்  

புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது- பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்  

தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை. விடுமுறை தினத்தையொட்டி, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம். குழந்தைகளை கவரும் வகையில், விதவிதமான பட்டாசுகள் அறிமுகம். 

முழு கொள்ளளவை எட்ட உள்ள வைகை அணை

வருசநாடு வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு. நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை எட்ட உள்ள வைகை அணை

சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம் 

சென்னை உயர் நீதிமன்றம் தயாரித்து கொடுத்த கேள்வித் தாள்களையே விநியோகம் செய்தோம். சிவில் நீதிபதி தேர்வில் வடசென்னை தேர்வு மையத்தில் பிற்பகல் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் மாற்றி கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடி குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் 

2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீடு லிமிட் தற்போது மாற்றம்

2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீடு லிமிட் தற்போது மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஐஐடி ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து, கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி நேற்று முதல் புதிய ஸ்பீடு லிமிட் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது - போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்

டெல்லி தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை

டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை. காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் நீடிக்கும் நிலையில் டெல்லி அரசு அறிவிப்பு.

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கியது

திருவள்ளூரில் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 11,569 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

மத்தியகிழக்கு அரபிக்கடலில் வரும் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

காவல் நிலையத்தில் கையெழுத்திட டிடிஎஃப் வாசன் வருகை  

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் வருகை. டிடிஎஃப் வாசன் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திட வருகை. நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றார் டிடிஎஃப் வாசன்

231 வழக்குகள் பதிவு: ரூ 2.36 லட்சம் அபராதம் வசூல்

 சென்னையில் நேற்று முதல் வேக வரம்பு கட்டுப்பாடுகள் அமல்,முதல் நாளில் 231 வழக்குகள் பதிவு மொத்தம் ரூ 2.36 லட்சம் அபராதம் வசூல்- போக்குவரத்து காவல் துறை தகவல்

 கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியதால்  5 மாவட்டங்களுக்கு வெள அபாய எச்சரிக்கை

 கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை. கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மத வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடித்த விவகாரம்: 54 வழக்குகளை பதிவு செய்த கேரள போலீசார் 

கேரள மாநிலம் களமசேரியில் கடந்த வாரம் மத வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக, மத வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகளை அம்மாநில போலீசார் பதிவு செய்துள்ளனர் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்டில் 26 வழக்குகளும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 வழக்குகளும் பதிவாகியுள்ளன

கனமழை பொதுமக்கள் அவதி

ராமநாதபுரத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை குளம்போல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், கடும் அவதி

காசா கிராண்ட் சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

காசா கிராண்ட் தலைமையிடம் உள்ளிட்ட சில இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது 

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக ஐடி ரெய்டு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக ஐடி ரெய்டு. தி.மலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை. அமைச்சருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, மருத்துவமனையில் நடைபெற்று வரும் சோதனை.

 விழுப்புரத்தில்  தொழிலதிபர் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக சோதனை

விழுப்புரத்தில் தொழிலதிபர் பிரேம்நாத் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக சோதனை. பிரேம்நாத்தின் இல்லம், மார்பிள்ஸ் கடை, விடுதி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

 6 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு

 இலங்கை கடற்கொள்ளையர்களால் நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு.

தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. 

 10 மாவட்டங்களில் இன்று மழை

தமிழகத்தின் பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தூத்துக்குடியில் ஆகிய 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

 வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்.

 2 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

 கல்லார், அடர்லி ரயில் நிலையங்கள் அருகே உள்ள தண்வாளத்தில் பாறைகள் சரிந்ததால், மேட்டுப்பாளையம், ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து.  மழை நிலவரத்தைப் பொறுத்து வரும் 7ம் தேதி காலை 7.10 மணிக்கு சேவை தொடங்கும் என தகவல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment