Tamil Nadu News Updates: எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார்.
நேதாஜி 126ஆவது பிறந்தநாள் விழா
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றும் நம் மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் ஹோலோகிராம் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அதேபோல், சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது.
பெட்ரோல்,டீசல் அப்டேட்
80ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 6,452 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
u19 உலகக்கோப்பையில் சாதனை
u19 உலகக்கோப்பைக் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. புதுமுக அணியான உகாண்டாவை 326 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. 162 ரன்கள் குவித்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கர்நாடகாவில் ஒரேநாளில் 50,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 3.57 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 24,283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 40 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 37,218ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 6,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, அதிகபட்சமாக, கோவையில் மேலும் 3,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் மேலும் 1,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்தனர்.
நேதாஜி ஹோலோகிராம் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி: “சுதந்திர இந்தியாவை உருவாக்கும் கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள். இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை என நேதாஜி கூறுவார். சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம். 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம்.” என்று கூறினார்.
நேதாஜி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம்; பேரிடரை எதிர்கொள்ள நவீன கருவிகள் நம்மிடம் உள்ளது. தேசிய பேரிடர் படையை நாம் வலுபடுத்தி உள்ளோம், நவீன படுத்தி உள்ளோம். நேதாஜி பிறந்தநாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்தோம். அதன்படி நேதாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; நாம் நிற்கும் இந்த இடமும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. மிக விரைவில் இங்கு கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும்.” என்று கூறினார்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் பிரதிபலிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கருங்கல்லால் ஆன நேதாஜியின் முழு உருவ நிலை நிறுப்படும் வரை ஹோலோகிராம் ஒளிச்சிலை காட்சி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் நாகசாமி வயது மூப்பினால் சென்னையில் இன்று காலமானானார். அவருக்கு வயது 91. டாக்டர் நாகசாமி 1966 – 1988 வரை தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநராக பணியாற்றிவர்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடமாற்ற விதி திருத்தம், தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடமாற்ற விதி திருத்தம் நிர்வாக கட்டமைப்பின் தன்மை, பணியாற்றும் செயல்திறனை பாதிக்கும். மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணி சூழலை நிர்வகிப்பதும் சிக்கல் ஆக்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள கணினி மற்றும் ஆவணங்களை சேதப்படுத்திய இடைநிலை ஆசிரியை தைலம்மை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து படகுகளையும் கைதான மீனவர்களையும் மீட்க வேண்டும் என்றும் படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த கர்நாடகாவுக்கு தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்
திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த மாடுபிடி வீரர் சசி கில்பட், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து பஞ்சாப் முதல்வர் போல் கண்ணீர் சிந்த மாட்டோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சூரியக் கதிர்களை போல அவர் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது; அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்
மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் இரவு பணியின் போது திடீரென மயங்கி விழுந்த பெண் காவலர் கலாவதி மரணம் அடைந்துள்ளார்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் குறைந்துள்ளது. கடந்த 15-ம் தேதி 30% ஆக இருந்த பாதிப்பு தற்போது 20% ஆக குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா 3-ம் அலையில் பாதிப்பு குறையத் தொடங்கியது மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில், இன்று காலை எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கடந்த 2 அல்லது மூன்று நாள்களாக, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். தயவுசெய்து விழிப்புடன் இருங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, பாதுகாப்புடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர் வரவே நான் பாடுபடுகிறேன்.எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்தது; ரஷ்யாவில் 'ஜோசப் ஸ்டாலின்' இறந்த நிலையில் அவரது பெயரை எனக்கு சூட்டினர் என திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகனின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் கொரோனா ஊரடங்கு தொடர்பான தகவல் மற்றும் ஆலோசனை பெற உதவி மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 9498181239 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் இன்றி குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. 2007ஆம் ஆண்டிற்கு பின் கோயில் புனரமைக்கப்பட்டு மீண்டும் வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையை பொறுத்து வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் . தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 2,59,168 பேர் குணமடைந்துள்ளனர் . 525 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலை வணங்குகிறேன். நமது தேசத்திற்கு நேதாஜி ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.