Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாள்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்
உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு. 46.70 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 62.60 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
மேம்பாலம் கட்டுமானப் பணியில் மீண்டும் விபத்து!
மதுரை புதுநத்தம் சாலையில் கடந்த ஆண்டில் விபத்து நிகழ்ந்த மேம்பாலம் கட்டுமானப் பணியில் மீண்டும் விபத்து. ராட்சத ஹைட்ராலிக் கிரேன் கம்பி அறுந்து விழுந்து 2 பேர் படுகாயம். கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனமே விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு!
ஜாக்குலின் சொத்துகள் முடக்கம்
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம். 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை புரசைவாக்கத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் மே தின விழா கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீசெல்வம் பேசியதாவது: “அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தற்போது திமுக அரசு வைத்து வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு பெண் கல்விக்காக அத்திட்டத்தை மாற்றியுள்ளதாகக் கூறுகின்றனர். இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பலாம்” என்று கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத்தில் சோட்டுபாய் வாசவாவின் பாரதிய பழங்குடியினக் கட்சியுடன் (BTP) ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் ஆளும் பாஜகவை, அங்கே பள்ளிகளின் மோசமான நிலை குறித்து கடுமையாக சாடினார். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து பாஜகவின் ஆணவத்தை உடைக்க வேண்டும் என்று குஜராத் மக்களை அவர் வலியுறுத்தினார்.
“அவர்கள் (பாஜக) ஆம் ஆத்மிக்கு பயப்படுவதால் குஜராத் தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என்ற ஊகங்களை நான் கேள்விப்படுகிறேன்… நாங்கள் டெல்லியில் இரண்டு அரசாங்கங்களையும் சமீபத்தில் பஞ்சாபில் ஒன்றையும் அமைத்துள்ளோம், இப்போது குஜராத்தின் முறை… அவர்கள் (பாஜக) நினைக்கிறார்கள், டிசம்பர் வரை அவகாசம் கொடுத்தால் குஜராத் ஆம் ஆத்மி பக்கம் திரும்பும். ஆனால், நான் ஒரு சந்தோஷமான் ஏழை என்று உங்களுக்கு சொல்கிறேன், எனக்கு கடவுளின் கையும் மக்களின் ஆதரவும் மட்டுமே உள்ளது… நீங்கள் (பாஜக) இப்போது தேர்தலை நடத்துங்கள் அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு, நான் உங்களைத் தோற்கடிப்பேன்” என்று கெஜ்ரிவால் உறுதியாகக் கூறினார்.
மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கச் செய்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, கல்லூரியின் துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக டீன் பொறுப்பை கவனிப்பார் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரக பகுதியில் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. சின்னத்தம்பி, கலீம் ஆகிய கும்கி யானைகள், வாகனத்தில் ஏற்றப்பட்டு தற்காலிக முகாமிற்கு அழைத்து செல்லப்படுகின்றன
மருத்துவக் கழிவுகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவி கவி பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினரின் 3 மணி நேர பேச்சுவார்த்தையை ஏற்று உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்
கடலூர் கண்டமங்கலம் பகுதியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலரை, ஊராட்சி மன்ற துணை தலைவர் செருப்பால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வடமாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்க புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றங்களில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்களை விவரங்களை அறிய இது உதவும் என மேற்கு மண்டல ஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார்
ரேஷனில் தரமான பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழு அமைக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 264 சவரன் கொள்ளை போன வழக்கில், முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 40 சவரன் மீட்கப்பட்டுள்ளது
கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ரத்னவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்
உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யூஜிசி- நெட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து வர வேண்டிய சுமார் 12,000 டன் நிலக்கரி வரவில்லை என தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ252.34 கோடிக்கு மது விற்பனை. இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ54.89 கோடிக்கும், சென்னை மண்டலத்தில், ரூ52.28 கோடிக்கும் மது விற்பனை
உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யூஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2021 டிசம்பரில் நடத்தப்படவிருந்த நெட் தேர்வையும், 2022 ஜூனில் நடத்தப்படவுள்ள தேர்வும் ஒன்றாக நடக்கிறது. http://www.ugnet.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.
நெல்லை அம்பை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட். தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
மனிதனை மனிதனே இழுத்த கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு. இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மேலும் 3,324 பேருக்கு கொரோனா தொற்று. 40 பேர் உயிரிழப்பு . ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,876 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் 19,092 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல்
ஒருநபர் விசாரணை குழு அதிகாரி குமார் ஜெயந்த் நேரில் ஆய்வு. தேர் விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒரு நபர் குழு 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது
நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது. தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. அதிமுக ஆட்சியில்தான் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மே 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜகவில் 25 மாவட்ட தலைவர்களை பொறுப்பிலிருந்து நீக்கினார் அண்ணாமலை. அமைப்புரீதியான 59 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி. மே தின உறுதிமொழியை ஏற்றார் முதல்வர்.
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ102.50 உயர்ந்து, ரூ2355.50 ஆக விற்பனை
மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மஹரிஷி சரக் சபாத் உறுதிமொழி ஏற்கப்பட்டதால சர்ச்சை. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ரத்னவேல் விளக்கமளிக்க மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவு
நடப்பாண்டில் முதல்முறையாக பிரதமர் மோடி நாளை வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு செல்கிறார்
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டங்கள்; முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு!