scorecardresearch

Tamil News Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.. தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, IPL 2022, Nikhath Zareen wins Gold, Neet exam date 2022, TNPSC Group 2 hall ticket- 20 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

TNPSC Group Exam
TNPSC Group Exam

குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, இன்று (மே 21) நடைபெற உள்ளது. நடப்பாண்டில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்.

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு தங்கம்!

துருக்கியில் நடைபெற்ற மகளிருக்கான உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் நிகாத் சரீன்(25) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் நிகாத் வீழ்த்தினார். இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 5வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை நிகாத் பெற்றார்.

IPL 2022: பெங்களூரு அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 18.4 ஓவரில் 2 விக்கெட்டு இழப்புக்கு 170 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவருமான, நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்து மற்றும் அவருடன் இருந்த நண்பரும் தாக்கியதாகக் கூறப்படும் 65 வயது நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tamil News Latest Updates

ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாட்கள் வேலை நிறுத்தம்!

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Read More
Read Less
Live Updates
20:31 (IST) 20 May 2022
கேரள மாநிலம் அகத்தியர் தீவு அருகே ₨1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

கேரள மாநிலம் அகத்தியர் தீவு அருகே ₨1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20 பேர் படகுகளில் கடத்தியதாக கைது செய்து கொச்சி கடலோர காவல்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

19:50 (IST) 20 May 2022
மதுரை – செகந்திராபாத் கோடைகால சிறப்பு ரயில்

மதுரை – செகந்திராபாத் கோடைகால சிறப்பு ரயில் மாலை 05.40 மணிக்கு பதிலாக இரவு 08.45 மணிக்கு புறப்படும் என ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

19:49 (IST) 20 May 2022
ஹைதராபாத்தில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்

ஹைதராபாத்தில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:47 (IST) 20 May 2022
அடுத்த ஐபி எல்லில் விளையாடுவதை உறுதி செய்தார் தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தபோட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த ஐபி எல்லில் விளையாடுவதை உறுதி செய்தார் தோனி… “CSK- வில் விளையாடாமல் இருப்பது நியாமல்ல” என்றும் கூறியுள்ளார்.

19:37 (IST) 20 May 2022
வரதராஜ பெருமாள் கோயிலில் தேவபாராயணம் பாட அனுமதி அளித்த உத்தரவுகள் நிறுத்திவைப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேவபாராயணம் பாட அனுமதி அளித்த உத்தரவுகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும், உதவி ஆணையர், தனி நீதிபதி ஆகியோரின் உத்தரவுகளை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவில் தென்கலை, வடகலை பிரிவினர் பாட அளிக்கப்பட்ட அனுமதி நிறுத்திவைப்பு

18:15 (IST) 20 May 2022
குன்னூர் ராணுவ கல்லூரியில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் போர் நினைவு சதுக்கத்தில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார்

18:13 (IST) 20 May 2022
தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

18:13 (IST) 20 May 2022
அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பான வழக்கு

அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18:11 (IST) 20 May 2022
சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது

17:05 (IST) 20 May 2022
நெல்லை கல்குவாரி விபத்து; தேடப்பட்டு வந்த 2 பேர் கைது!

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளையை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மங்களூருவில் தனிப்படை கைது செய்துள்ளது.

16:52 (IST) 20 May 2022
கொடுங்கையூர் குப்பை மேட்டில் தீ விபத்து!

சென்னை, கொடுங்கையூரியில் உள்ள குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொடுங்கையூர் பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16:42 (IST) 20 May 2022
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்!

தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுயில் நடப்பு சாம்பியன் அகனே யமகுச்சியை நேர்கொண்ட அவர் 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

16:27 (IST) 20 May 2022
ஞானவாபி மசூதி வழக்கு: மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஞானவாபி மசூதி ஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணையை ஜூலை 2வது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது

16:07 (IST) 20 May 2022
மகள்களை அடித்துக்கொலை; குற்றவாளி சரண்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சின்ன மதுரபாக்கத்தில் 16, 10 வயதுடைய 2 மகள்களை அடித்துக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் தந்தை கோவிந்தராஜ் சரணடைந்துள்ளார். மனைவி உடன் சண்டையிடுவதை மகள்கள் கண்டித்ததால், ஆத்திரத்தில் அடித்துக்கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

15:51 (IST) 20 May 2022
ஜி.கே.வாசன் கேள்வி!

“பேரறிவாளனின் விடுதலையில் உறுதியான நிலையை எடுக்காமல், ஒருபுறம் போராட்டம், மறுபுறம் அவரின் விடுதலையை கொண்டாடும் கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்னையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுயநலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை” என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

15:44 (IST) 20 May 2022
‘சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைதான நிலையில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசா முறைகேடு வழக்கில் எம்.பி., கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், நாடு திரும்பிய 16 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படும் பட்சத்தில் 3 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் சிபிஐ அந்த உத்தரவு குறிப்பிட்டுள்ளது.

14:50 (IST) 20 May 2022
நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 இளைஞர்கள் கைது!

சேலத்தில் குரும்பப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஆயுதங்கள் தயாரித்ததாக 2 இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். பெயர் கூற விரும்பாத நபர் அளித்த ரகசிய தகவலை அடுத்து இளைஞர்களை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆயுங்கள் கொள்ளை கும்பலுக்கு சப்ளை செய்ய தயாரிக்கப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:07 (IST) 20 May 2022
விசா முறைகேடு வழக்கு – முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைதான நிலையில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

12:57 (IST) 20 May 2022
சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்; தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – ஓ.பி.எஸ்

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

12:25 (IST) 20 May 2022
தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநில மொழிகளுக்கும் முகியத்துவம் – மோடி விளக்கம்

பிரதமர் மோடி: “சமீப காலமாக மொழியை வைத்து பல சர்ச்சைகளை கிளப்ப சிலர் முயற்சி செய்கின்றனர்; ஒவ்வொரு மாநில மொழியும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகின்றன; தேசியக் கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

11:39 (IST) 20 May 2022
டெண்டர் முறைகேடு வழக்கு: முதல் கட்ட விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க ஐகோர்ட் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:10 (IST) 20 May 2022
நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் – மோடி

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேச்சு: “உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது; நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.” என்று கூறினார்.

10:59 (IST) 20 May 2022
தக்காளி விலை உயர்வு!

தமிழகத்தில் மழை காரணமாக வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

10:57 (IST) 20 May 2022
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

ஒகேனக்கல் பகுதியில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 51,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

10:26 (IST) 20 May 2022
124-ஆவது உதகை மலர்க் கண்காட்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் 124வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

10:01 (IST) 20 May 2022
சென்னை வெள்ளம் தடுக்க ரூ. 184 கோடி ஒதுக்கீடு!

திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு அரசாணை வெளியிட்டுள்ளது.

09:45 (IST) 20 May 2022
ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்!

சென்னை, நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

09:13 (IST) 20 May 2022
பிட் பேப்பர் பறிமுல்.. 11 அறை கண்காணிப்பாளர்கள் நீக்கம்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், கடந்த 17ம் தேதி நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், குவியல் குவியலாக பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

09:06 (IST) 20 May 2022
தோடா பழங்குடியினருடன் டான்ஸ் ஆடிய முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் தோடா பழங்குடியின மக்களை சந்தித்தார். அப்போது முதல்வரை வரவேற்று நடனமாடிய பழங்குடி மக்களுடன் முதல்வரும் சேர்ந்து ஆடினார்.

08:37 (IST) 20 May 2022
திவாலானது இலங்கை அரசு!

இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கம் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக, அதிகரிக்கும் என இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசங்க தெரிவித்துள்ளார்.

08:32 (IST) 20 May 2022
லாலு பிரசாத் தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு!

ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

08:29 (IST) 20 May 2022
உதகையில் 124வது மலர்க் கண்காட்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் 124வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மலர்க் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

08:28 (IST) 20 May 2022
174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

08:28 (IST) 20 May 2022
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

08:28 (IST) 20 May 2022
எஸ்.பி.வேலுமணி வழக்கு!

டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

08:28 (IST) 20 May 2022
நெல்லையில் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்!

நெல்லையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரியும், முறையாக அனுமதி பெறாத குவாரிகளை மூட வலியுறுத்தியும், பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Web Title: Tamil news today ipl 2022 nikhath zareen wins gold neet exam date 2022 tnpsc group 2 hall ticket