கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, உதவிட முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, மதிமுக சார்பில், ரூ.13.15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காசோலையை, அக்கட்சியின் தலைவர் வைகோ, நேற்று தலைமை செயலத்தில் வைத்து ஸ்டாலினிடம் வழங்கினார்.
Tamil Nadu news live update
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 8.22 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14.62 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். வரும் 28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் காப்பியடித்தலைத் தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4 நாட்களுக்கு மழை!
தெற்கு அந்தமான் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:25 (IST) 05 May 2022CUET நுழைவுத்தேர்வுவ் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு - யுஜிசி
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு விண்ணப்பத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
CUET நுழைவுத்தேர்வுக்கு வரும் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
- 21:08 (IST) 05 May 2022என்.எல்.சி பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணி: GATE அடிப்படையில் தேர்வு செய்வதை மாற்ற வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 20:46 (IST) 05 May 2022கோவிட் தொற்று நோய் முடிந்ததும் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்த நாளில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘சிஏஏ உண்மையானது. அந்த சட்டம் உண்மையாகவே இருக்கும். அதை திரிணாமுல் காங்கிரஸால் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறினார்.
கோவிட் -19 தொற்று நோய் சூழ்நிலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும், அவர், திரிணாமுல் காங்கிரஸ் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
வடக்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “சிஏஏ அமல்படுத்தப்படாது என்று திரிணாமுல் காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது. கோவிட் -19 அலை முடிந்ததும் நாங்கள் சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவோம். நம்முடைய அகதி சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை உரிமைகளை வழங்குவோம் என்பதை இன்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.” என்று கூறினார்.
- 19:45 (IST) 05 May 202212ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட்
தமிழகத்தில் இன்று நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளில் 32,674 மாணவர்கள் வரவில்லை என்று தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8.22 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 32,674 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
- 18:33 (IST) 05 May 2022கோடை வெயில், பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை
கோடை வெயிலை எதிர்கொள்வது, பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு குழு மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
- 17:57 (IST) 05 May 2022இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்படும் - கே.எஸ். அழகிரி
இலங்கை மக்களுக்கு நிவாரணமாக தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
- 17:55 (IST) 05 May 2022மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை, பனை மரங்கள் நட உத்தரவிடக் கோரி வழக்கு
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
- 17:17 (IST) 05 May 2022மாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகள் அணியக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை
மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான வண்ண கயிறுகளை அணியக்கூடாது என்று அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
- 16:58 (IST) 05 May 2022கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்கள் சுமார் ₨1.5 கோடி இழப்பு
கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்கள் சுமார் ₨1.5 கோடி பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம் என காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
- 16:57 (IST) 05 May 2022பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு புதிய சுற்றறிக்கை
சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான வண்ண கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது எனவும் சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் உனவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
- 16:56 (IST) 05 May 2022பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு புதிய சுற்றறிக்கை
சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான வண்ண கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது எனவும் சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் உனவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
- 16:09 (IST) 05 May 2022உரிமமின்றி இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்
சென்னை, ராயப்பேட்டையில் உரிமமின்றி இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உரிமம் பெறாமல் போதை மறுவாழ்வு மையங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை என மாநில மனநல ஆணையம் அறிவித்துள்ளது.
- 16:08 (IST) 05 May 2022காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய வழக்கு - கைதிக்கு குண்டர் சட்டம்
நெல்லை கோவில் விழாவில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- 16:06 (IST) 05 May 2022ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சி : சீமான் கருத்து
தருமபுர ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சி; மனிதனை மனிதனே சுமப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.
- 15:41 (IST) 05 May 2022போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படும் விழா நாட்கள் நீங்கலாக இணையவழியில் இரு வழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
- 15:37 (IST) 05 May 2022சுற்றுலாத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
சென்னையில் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் 'எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்' என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:57 (IST) 05 May 2022இரண்டரை கோடி மதிப்பிலான 3 சிலைகள் மீட்பு
மாமல்லபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த, இரண்டரை கோடி மதிப்பிலான 3 உலோகச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டுள்ளது.
- 14:55 (IST) 05 May 2022ரூ.1 கோடி செலவில் ஆண்டுதோறும் 'வீர விளையாட்டு விழா' -சுற்றுலாத் துறை
ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ரூ1 கோடி செலவில் 'வீர விளையாட்டு விழா' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படும் என சுற்றுலாத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- 14:39 (IST) 05 May 2022பட்ஜெட்க்கு முன் வணிகர்களின் கருத்துக்களை கேட்டது திமுக அரசுதான் - மு.க.ஸ்டாலின்
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களின் கருத்துக்களை கேட்டது திமுக அரசுதான். ஊரடங்கு நேரங்களில் கடைகளை திறக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது. சிறுகுறு வணிகர்களுக்கு கொரோனா காலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. வணிகர்களின் நலன் நிச்சயமாக பாதுகாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- 14:26 (IST) 05 May 2022தேனி: கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாக புகார்
தேனி, பெரியகுளம் அருகே நஞ்சபுரத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 9ம் வகுப்பு வரை படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது
- 14:11 (IST) 05 May 2022நெருக்கடியான நேரங்களிலும் நிவாரண நிதி வழங்கிய வணிகர்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்
திருச்சியில் நடைபெற்று வரும் வணிகர் விடியல் மாநாட்டில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், வணிகர்கள் நலனை காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசு திமுக. வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்து பல்வேறு உதவிகளை செய்தது திமுக அரசு. நெருக்கடியான நேரங்களிலும் நிவாரண நிதி வழங்கிய வணிகர்களுக்கு எனது நன்றி என முதல்வர் உரையாற்றினார்
- 13:50 (IST) 05 May 2022சென்னையில் விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு
சென்னை ஆவடி அருகே, அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
- 13:37 (IST) 05 May 2022வேலூரில் ஹால் டிக்கெட் வாங்க சென்ற மாணவனுக்கு அதிர்ச்சி
வேலூர் மாவட்டம் வளத்தூர் அரசு பள்ளியில் படித்த மாணவன் ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றது தெரியாமல் மீண்டும் படித்துள்ளார். மாணவன் ஹால் டிக்கெட் வாங்க சென்ற நிலையில் தேர்ச்சி என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேர் மீது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.
- 13:19 (IST) 05 May 2022மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக மதுரை கமிஷ்னரிடம் புகார்
தருமபுர ஆதீனத்திற்கு ஆதரவாக பேசிய, மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது
- 12:56 (IST) 05 May 2022106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம்
தமிழ்நாட்டில் 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
- 12:43 (IST) 05 May 202214 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 7 முதல் மே 9 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 12:17 (IST) 05 May 2022கட்டாய மதமாற்ற புகார் மீது கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு
கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் புகாரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
- 11:57 (IST) 05 May 2022தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் - ஆளுனர்
இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழ்நாடு தான். இந்தியா நம்பர் 1 நாடாக மாற பிரதமர் செயல்படுவதால் ஒரே பாரதம் உன்னத பாரதம் என கூறுகிறார் என சென்னையில் நடைபெற்ற மீன்வளம் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்ற ஆளுனர் ஆர். என். ரவி பேச்சு
- 11:34 (IST) 05 May 2022சேகர்ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். பண மதிப்பிழப்பு காலத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சேகர்ரெட்டி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- 11:34 (IST) 05 May 2022சேகர் ரெட்டியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த தடை
தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். பண மதிப்பிழப்பு காலத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சேகர்ரெட்டி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- 11:24 (IST) 05 May 2022இலங்கை மக்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக எம்.பி.க்கள்
இலங்கை மக்களுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு மாத ஊதியத்தை திமுக எம்.பி.க்கள் வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவிப்பு. ஏற்கனவே, திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது.
- 11:16 (IST) 05 May 2022சேகர்ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். பண மதிப்பிழப்பு காலத்தில் கணக்கில் வராத பணம் சிக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை கோரி சேகர்ரெட்டி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- 11:08 (IST) 05 May 2022பிளஸ் 2 தேர்வு மையத்தில் மின்வெட்டு
தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின்வெட்டு. தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், பள்ளியில் மின்வெட்டு
- 10:54 (IST) 05 May 2022சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக, நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிய செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 10:52 (IST) 05 May 202212 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அன்பில் மகேஷ் ஆய்வு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், சென்னை, சாந்தோமில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.
- 10:51 (IST) 05 May 2022கொடநாடு வழக்கு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, மோசஸ் என்பவரிடம் தனிப்படை போலிசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10:22 (IST) 05 May 2022தங்கம் விலை!
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 448 உயர்ந்து ரூ. 38,912க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,864க்கு விற்பனை செய்யபடுகிறது.
- 10:21 (IST) 05 May 2022மேலும் 3,275 பேருக்கு கொரோனா!
இந்தியாவில் மேலும் 3,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 55 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 19,719 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- 09:33 (IST) 05 May 2022மதுரை எய்ம்ஸ்..
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் திட்ட மதிப்பான ரூ. 1,977 கோடியில் முதற்கட்டமாக ரூ. 1,627 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 08:39 (IST) 05 May 2022பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு!
1 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
- 08:38 (IST) 05 May 2022சட்டப்பேரவையில் இன்று!
தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளன. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு பேரவையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- 08:38 (IST) 05 May 2022விடியல் மாநாடு!
திருச்சி சமயபுரத்தில் வணிகர் தினத்தையொட்டி இன்று நடைபெறும் விடியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- 08:38 (IST) 05 May 2022தேர்வறையில் முகக்கவசம் கட்டாயமில்லை!
தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. முகக்கவசம் கட்டாயமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண் விளக்கமளித்துள்ளார்.
- 08:27 (IST) 05 May 2022ஆர்.ஆர்.பி ரயில்வே தேர்வு.. சிறப்பு ரயில் இயக்கம்!
ஆர்.ஆர்.பி ரயில்வே தேர்வுக்காக கொச்சுவேலி - சென்னை தாம்பரம் இடையே வரும் 7ஆம் தேதி இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது மற்றும் கோடை விடுமுறை முன்னிட்டு 46 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- 08:27 (IST) 05 May 2022நூல் விலை உயர்வு!
நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16 முதல் 21 ஆம் தேதி வரை, 15 நாட்களுக்கு நூல் கொள்முதல் நிறுத்தப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
- 08:26 (IST) 05 May 2022இலவச காலை சிற்றுண்டி!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.