பெட்ரோல், டீசல் விலை
487-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
வேலூரில் தொடர் மழை- 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இன்று (செப்.21) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
"கலைஞர் 100' நூலை வெளியிட்டார் முதல்வர்
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 'கலைஞர் 100' நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் 'கலைஞர் 100' நூலை முதலமைச்சர் வெளியிட முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் கமல்ஹாசன் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றது முதல் 2019 வரை வெளியான கட்டுரை தொகுப்பு வெளியீடு
சென்னை மெட்ரோ திட்டம் - அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை மெட்ரோ திட்டம் - 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்திய கூறு அறிக்கை சமர்ப்பிப்பு கோயம்பேடு - ஆவடி, சிறுசேரி - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க சாத்திய கூறு சாத்திய கூறு அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நல்ல திட்டங்களை ஆதரித்து எழுதுங்கள், விமர்சனம் இருந்தால் சுட்டுக்காட்டுங்கள், அதுதான் நடுநிலை பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம்” - ’கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
விநாயகர் சிலை கரைப்பு - ஒருவர் பலி
திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே விநாயகர் சிலை கரைக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு புல்லூர் தடுப்பணையில் நீரில் மூழ்கி இளைஞர் பூவரசன்(23) உயிரிழப்பு - மற்றொருவர் மாயம்
மாநிலங்களவை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவையில் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 456 வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!
லோக்சபாவில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மக்களவையில் 454 வாக்குகள் கிடைத்தது. 2 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஓ.பி.சி பிரதமரை கொடுத்தது பா.ஜ.க: ராகுல் காந்திக்கு அமித் ஷா பதில்
“பாரதிய ஜனதா கட்சி ஓபிசி பிரதமரை வழங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் 85 ஓ.பி.சி எம்.பி.க்கள உள்ளனர். அதில் 29 பேர் அமைச்சர்களாக உள்ளனர்” என அமித் ஷா ராகுல் காந்திக்கு பதில் அளித்தார்.
3 சதவீத ஓபிசிக்குதான் நாட்டில் இடமளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறிய நிலையில் அமித் ஷா பதிலளித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் வாக்கெடுப்பு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மத்திய அரசில் இருக்கும் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி சமூகம் - ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு: “மத்திய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் உள்ளனர், அதில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் இந்த மசோதாவே முழுமையற்றதாக உள்ளது” என்று கூறினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கோல்டன் டிக்கெட்; ஜெய்ஷாவுக்கு ரஜினி நன்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண பி.சி.சி.ஐ சார்பாக கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டதற்கு, அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “ஜெய்ஷா ஜி உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்
ஊழல் வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்தது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார். தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்ற பிறகே, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் இருந்து விலகப் போவதில்லை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
பல்கலைக்கழ்க துணை வேந்தர் தேடுதல் குழு அமைத்த தமிழக அரசு; ஆளுநருக்கு பதிலடி
தமிழ்நாடு அரசு சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைத்து அறிவித்துள்ளது. முன்னதாக ஆளுநர் துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அறிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது குழு அமைத்துள்ளது.
தமிழ்நாட்டின் எந்த கோரிக்கையையும், இதுவரை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதில்லை - துரைமுருகன்
கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை காவிரி நீர் ஒழுங்காற்று குழுதான் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் எந்த கோரிக்கையையும், இதுவரை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதில்லை. காவிரி விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறினோம், அதை அவர்கள் மறுத்தார்கள். நாம் பெற்ற அனைத்து உரிமையும் உச்சநீதிமன்றம் மூலமே பெறப்பட்டது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்
சென்னை பல்கலை. துணைவேந்தர் பணியிடம்; தமிழக அரசு குழு அமைப்பு
சென்னை பல்கலை. துணைவேந்தர் பணியிடத்தை நிரப்ப தமிழக அரசு குழு அமைத்துள்ளது. ஏற்கனவே ஆளுநர் ஒரு குழு அமைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது
கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் எச்சரிக்கையாகவும், விழிப்புடணும் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – அ.தி.மு.க ஆதரவு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அ.தி.மு.க சார்பில் வரவேற்கிறேன். தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியது ஜெயலலிதா தான். மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அ.தி.மு.க தான் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
சிராஜ் மீண்டும் முதலிடம்
ODI போட்டிகளில் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் சிராஜ் மீண்டும் முதலிடம் பிடித்தார். இதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் முதலிடத்தை பிடித்திருந்தார்.
ரவீந்தர் ஜாமின் மனு மீதான உத்தரவு தள்ளி வைப்பு
மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட, ரவீந்தர் ஜாமின் மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்தது. ஜாமின் மனு உத்தரவு 25ம் தேதி பிறப்பிக்கப்படும்- நீதிபதி அல்லி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
அக்டோபர் 9ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் - அப்பாவு
33% இடஒதுக்கீடு என்பது பாஜகவின் அரசியல் நாடகம்: பிருந்தா காரத் பேட்டி
கடந்த 9 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு என்பது பாஜகவின் அரசியல் நாடகம்.
இந்த மசோதா நிறைவேறுவது கடினம்
வருகின்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெரும். I.N.D.I.A கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு- நாமக்கல்லில் சிபிஎம் முன்னாள் எம்பி பிருந்தா காரத் பேட்டி
கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
சென்னை மேடவாக்கத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தில் 16 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு சரமாரியாக கத்திக்குத்து. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி. மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வசந்த என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்
மகளிர் இட ஒதுக்கீடு காங்கிரஸ் ஆதரவு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு என சோனியா காந்தி பேச்சு. மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.
மீராவின் உடல் நல்லடக்கம்
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு
தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு அவசர மனு தாக்கல். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல். தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்ததற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை.
பொள்ளாச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு
கோவை பொள்ளாச்சி அருகே கிணத்துக் கிடவு பகுதியில் பெரியார் சிலை மீது மாட்டுச் சானம் வீசி அவமதிப்பு. பெரியார் சிலையை அவமதிப்பு செய்த நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை
நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு பாதிப்பு
நாமக்கல்- தனியார் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட 18 வயது இளைஞருக்கு உடல்நல பாதிப்பு. அதே கடையில் பர்கர் சாப்பிட்ட சிலர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றதாக தகவல். ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி சம்பவம். உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: கண்துடைப்பு செயல்; ஸ்டாலின்
"மகளிர் இட ஒதுக்கீடு மசோதா- தேர்தல் நேரத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது ஏமாற்று வேலை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
9 ஆண்டுகளாக பாராமுகமாக இருந்துவிட்டு தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்து கொள்வார்கள். நடைபெறாத மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதா?
பா.ஜ.கவை விமர்சனம் செய்யக் கூடாது- அ.தி.மு.க தலைமை
பாஜக தலைமைக்கு எதிராக அதிமுகவினர் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்- கட்சியினருக்கு அதிமுக தலைமை வலியுறுத்தல்
அண்ணா குறித்து அண்ணாமலை கருத்து கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் அறிவுறுத்தல்.
கூட்டணி குறித்தோ, பா.ஜ.க குறித்தோ பொது வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது. கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க தலைமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில் வேறு யாரும் பொது வெளியில் பேசக் கூடாது. போஸ்டர் ஒட்டுவது, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்க அதிமுக தலைமை வலியுறுத்தல்
காவிரி விவகாரம்: சித்தராமையா ஆலோசனை
டெல்லியில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்பு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திக்க உள்ள நிலையில் ஆலோசனை மேலும் பிரதமர் மோடியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்
யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்
ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இன்று நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்திருந்தது *இன்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற உள்ளனர் *டிடிஎஃப் வாசனின் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்
விஜய் ஆண்டனியின் மகள் உடல் 11 மணிக்கு அடக்கம்
விஜய் ஆண்டனியின் மகள் உடல் நுங்கம்பாக்கம் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் காலை 11 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலம் தொடங்கியது
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் காலை 9 மணிக்கு மீராவின் உடலுக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது
30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
திருப்பதி மலை பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது இதுவரை 5 சிறுத்தைகள் சிக்கியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.