Advertisment

Tamil News Highlights: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறா முதல்வர் ஸ்டாலின்

இன்று நடைபெறும் செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கில் கிளிக் செய்யவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaignar Magalir Urimai Thogai Scheme

News Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News updates

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

இ.பி.எஸ் - அமித்ஷா சந்திப்பு நிறைவு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு நிறைவு பெற்றது

தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி

முதலீடு செய்தால் கோடி கணக்கில் லாபம் கிடைக்கும் என கூறி ரூ.16 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்

ராமநாதபுரம், ராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் நடைபெறுகிறது

சிங்கப்பூரின் அதிபரானார் தமிழர்

சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்றார் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

சீமானோடு சமாதானம்: விஜயலட்சுமி புதிய வீடியோநடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இந்த வழக்கு என்னுடையது; வீரலட்சுமி- சீமான் இடையேயான பிரச்னை அல்ல. 

வீரலட்சுமி தனி ரூட்டில் செல்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வீரலட்சுமி நிறுத்தவில்லை என்றால் சீமானோடு சமாதானம் செய்து கொண்டு பெங்களூரு சென்றுவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 நிமிட இடைவெளியில் நாளை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிபா வைரஸ் பரவல்: மாஹேவில் பள்ளிகளுக்கு விடுமுறை

நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாஹே மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இன்றே பயனாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நாளை மு.க.ஸ்டாலின தொடங்கி வைக்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றே பயனாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்பட்டது.

அமித் ஷாவுக்கு, உதயநிதி ஸ்டாலின் பதிலடி

இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார்,

இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து- அமித் ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சனாதனத்திற்கு முடிவுகட்ட  I.N.D.I.A கூட்டணி முயற்சி: மோடி

நாட்டின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்துவதே, I.N.D.I.A கூட்டணியின்  மறைமுக கொள்கை; சனாதனத்திற்கு முடிவுகட்ட  I.N.D.I.A கூட்டணி முயற்சிக்கிறது- மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ஜெய்சங்கருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 17 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இருதரப்பு சார்பில், ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும்- மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

அன்புமணி ராமதாஸ் பேட்டி

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்

காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது; தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை;

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு யாரையும் மதிக்கவில்லை- கடலூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்நாட்டின் பெருமை- அன்புமணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பேராசை. இதற்கான முழு பொறுப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்,காவல்துறை ஏற்க வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்நாட்டின் பெருமை- அன்புமணி ராமதாஸ்

127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க உத்தரவு

தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க உத்தரவு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சம்மன் அளிக்க சென்ற வளசரவாக்கம் போலீசார் முதல் முறை சம்மன் அனுப்பிய போது, சீமான் ஆஜராகவில்லை நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல். 

 

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் - அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரையும் சந்திக்கிறார் 

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் விஷ்வ பரிஷத் இயக்க தலைவர் கைது

ஆன்மீக சொற்பொழிவாளரும், முன்னாள் விஷ்வ பரிஷத் இயக்க தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது. அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக தனிப்படை போலீசார் நடவடிக்கை. திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர் குறித்து மணியன் பேசிய வீடியோவுக்கு பலர் கண்டனம். சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டில், நள்ளிரவில் கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

 மணல் குவாரி அதிபர் வீட்டில் சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்

 புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், சோதனை அதிகாரியிடம் ஒப்படைப்பு. அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு. ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆடிட்டர் அலுவகலங்களில் மட்டும் சோதனை தொடர்கிறது

 

3வது நாளாக நீளும் சோதனை

 புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக நீளும் அமலாக்கத்துறை சோதனை. மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல். ராமச்சந்திரனின் வீடு, அலுவலகங்கள் உட்பட 4 இடங்களில் சோதனை தொடர்கிறது.

 ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கு: குருகுல பாதுகாவலர் ஸ்ரீனிவாச ராவுக்கு நிபந்தனை முன்ஜாமின்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள குருகுலத்தில் படித்த 3 மாணவர்கள் கடந்த மே மாதம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கு; குருகுல பாதுகாவலர் ஸ்ரீனிவாச ராவுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் குருகுலம் சார்பில் டெபாசிட் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிப்பு.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், எஸ்.எம்.எஸ் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ சேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம். வரும் 18ம் தேதி முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என அரசு தெரிவிப்பு.  

15 மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்

சென்னை, விமானநிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 15 மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல். எந்த விதமான சான்றிதழும் இல்லாததால் பறிமுதல் செய்த அதிகாரிகள். காடுகளில் வாழும் 15 மலைப்பாம்பு குட்டிகள், 1 அரிய வகை அணிலை மறைத்து வைத்து எடுத்து வந்த நபர் மீட்கப்பட்ட விலங்குகளை தாய்லாந்திற்கே மீண்டும் அனுப்பிவைக்க அதிகாரிகள் முடிவு

சீமானுக்கு போலீசார் மீண்டும் சம்மன் 

நடிகை விஜயலட்சுமியின் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் மீண்டும் சம்மன். சீமானின் பாலவாக்கம் இல்லத்திற்கே நேரில் சென்று வளசரவாக்கம் போலீசார் சம்மனை வழங்கினர். 

நாளை ஆஜராக முடியாது- சீமான்

 நடிகை விஜயலட்சுமியின் புகார் தொடர்பான வழக்கில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்று, சம்மன் அளித்த வளசரவாக்கம் போலீசார் நாளை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மனில் உத்தரவு. நாளை கலந்தாய்வு கூட்டம் இருப்பதால் ஆஜராக முடியாது - சீமான் தரப்பு                        வேறு தேதியில் ஆஜராவதாக சீமான் தரப்பு தெரிவித்ததாக தகவல் 

தமிழகத்தில் 230 பேருக்கு டெங்கு 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 230 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

ஆவின், வெண்ணெய் விலை உயர்வு

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் நெய், வெண்ணெய் விலை உயர்வு- இன்று முதல் அமல்

500 மி.லி நெய் ரூ.315-ல் இருந்து ரூ.365, 1 லி நெய்  ரூ.630-ல் இருந்து ரூ.700. வெண்ணெய் 500 கிராம் ரூ.260-ல் இருந்து ரூ.275 ஆக உயர்வு 

ஓட்டுநரை கத்தியால் குத்த முயன்ற உணவு டெலிவரி நபர் 

பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்த முயன்ற உணவு டெலிவரி செய்யும் நபர் பேருந்து ஓட்டுநருக்கும், உணவு டெலிவரி செய்பவருக்கும் இடையே வாக்குவாதம் - கைகலப்பு

உணவு டெலிவரி பாக்சில் இருந்த கத்தியை எடுத்து ஓட்டுநரை குத்த முயன்றதால் பரபரப்பு சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோ - போலீசார் விசாரணை 

ராமச்சந்திரன் அலுவலகத்தில் சோதனை நிறைவு

மணல் குவாரி அதிபர் அலுவலகத்தில் சோதனை நிறைவு. புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு. சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை பெட்டி, பெட்டியாக கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்ற அதிகாரிகள்.  ஏற்கனவே, ராமச்சந்திரனின் வீடு, உறவினர் வீடு, நண்பர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. 

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வாவுக்கு ரெட் கார்டு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்சினையை மேற்கோள் காட்டி சிம்புவுக்கு ரெட் கார்டு தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக விஷாலுக்கு ரெட் கார்டு தயாரிப்பாளர் மதியழகன் உடனான புகார் தொடர்பாக நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு வழங்க முடிவு

டெல்லி சென்றடைந்தார் ஈபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பயணம் இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் 

பல கோடி மோசடி; ஆட்களை வைத்து மிரட்டல் - அதர்வா மீது பகீர் புகார்

நடிகர் அதர்வா தனது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாகவும் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் அதர்வா அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் புகார் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் அதர்வா ரூ. 6.10 கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மதியழகன் புகார் கூறியுள்ளார்.

டெல்லியில் வழக்கறிஞர்களுடன் இ.பி.எஸ் ஆலோசனை 

டெல்லி சென்றுள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்களுடன் தனியார் விடுதியில் ஆலோசனை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய பா.ஜ.க கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். 

சென்னையில் வெள்ளிகிழமை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னையில் நாளை (செப்டம்பர் 15) ஒரு நாள் மட்டும் இரவு நெரிசல் மிகு நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, நாளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை 9 நிமிடத்திற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம் 

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் டி.கே. சிவக்குமார் சந்திப்பு 

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்தார்.காவிரி தன்ணீர் விவகாரம் தொடர்பான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கடிதத்தை ஜெய்ப்பூரில் ஷெகாவத்தை சந்தித்து டி.கே. சிவக்குமார் வழங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment