Advertisment

Tamil News Today: தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

இன்று நடைபெறும் முக்கிய செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
There is a demand for 35 Navodaya schools in Tamil Nadu

News updates

 Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

இஸ்ரேல்- காஸா மோதல் 2ம் நாள்: 600 ஹமாஸ் பயங்கரவாதிகள் உயிரிழப்பு
இஸ்ரேல் நாட்டின் மீது சனிக்கிழமை (அக்.7) ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல்களில் 100க்கு கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், காசாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்தத் தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் 800க்கும் மேற்பட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதல் 2வது நாளாக தொடர்கிறது. 

ஹமாஸ் மீது தாக்குதலை நிறுத்தாத இஸ்ரேல்: இதுவரை 600 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் தொடங்கியது. இந்தத் தாக்குதல் நிறுத்தாமல் தொடர்கிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் 600 பேர் பலி! 
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் காசாவில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது போர் தொடுத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் சச்சரவு: எகிப்தில் 2 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
 இஸ்ரேல் மீது தமாஷ் பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் நான் ஒரு கமாஸ் பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் எகிப்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெத்தலகேமில் குடும்பத்துடன் சிக்கிய இந்திய எம்பி! 
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
 இந்த நிலையில் மேகாலயா ராஜ்யசபா எம்பி ஹர் லோகி அவரது குடும்பத்தினர் உட்பட 27 பேர் இஸ்ரேல் பெத்தலகேமில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அவசர அரபு லீக் கூட்டத்திற்கு அழைப்பு 

பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான WAFA இன் படி, பாலஸ்தீனிய நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் ஒரு அவசர அரபு லீக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இஸ்ரேலுக்கு அக்.14 வரை விமான சேவை ரத்து

அக்டோபர் 14ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவிப்பு. இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே மோதல் நிலவும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு 

போரை நிறுத்துக - சீனா வலியுறுத்தல்

பொதுமக்களைக் காக்க இஸ்ரேல், பாலஸ்தீனம் போர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா கேட்டுக்கொள்கிறது. சீனா ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலை உடனடியாக  போரை நிறுத்த வலியுறுத்தியது.  கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க பொதுமக்களைப் பாதுகாக்க அமைதியாக இருக்கவும் அழைப்பு விடுத்தது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்- 2,053 பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர  நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,053 ஆக உயர்வு.  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. 

காசாவில் 313 பேர் பலி

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 313ஆக அதிகரிப்பு. ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி  எண்ணிக்கை 313ஆக உயர்வு 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடரும். மாநில  அந்தஸ்து தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எழுதிய கடித்திற்கு மத்திய அரசு பதில் கடிதம். மாநில அந்தஸ்து குறித்து கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க வேண்டுகோள்  

இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள். ஜெருசலம் சென்றுள்ள பாதிரியார்கள் நலமுடன் இருந்தாலும், ஜெருசலம்  புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்ததல்

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெற்றிபெற்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டுகளின் திறமைகள் பிரகாசித்துள்ளன" ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கும்: 1000 பேர் உயிரிழப்பு

 ஆப்கானிஸ்தான் வரலாற்றில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நில நடுக்கம். 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு என அரசு அறிவிப்பு

 ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்றது இந்திய அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தங்கப் பதக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர். ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்றது இந்திய அணி

ரசுப்பேருந்து - லாரி மோதி விபத்து

அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் அருகே அரசுப்பேருந்து - லாரி மோதிய விபத்தில், பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் காயம். காயமடைந்தோர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

2 தனிப்படைகள் அமைப்பு

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு. விபத்தில் படுகாயமடைந்த 7 பேரிடம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை. முதற்கட்ட விசாரணையில் தருமபுரியில் இருந்து பட்டாசுகள் கொண்டுவரப்பட்ட தகவல். 

 முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு கூடுதலாக 14,000 டிக்கெட்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு கூடுதலாக 14,000 டிக்கெட்கள். அகமதாபாத்தில் அக்.14ம் தேதி நடைபெறும் போட்டிக்கு இன்று பகல் 12 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை – பிசிசிஐ

 ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் இருந்து கேஸ் கசிவு

திருவாரூர் அருகே காரியமங்கலத்தில் மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் இருந்து கேஸ் கசிவு. காரியமங்கலம் பகுதியில் 2 கிணறுகளை அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கிணற்றில் இருந்து கேஸ் வெளியேறுவதால் பொதுமக்கள்.

 பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் இயங்க தொடங்கியது

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கியது. பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இயக்கம்

தமிழகத்தில் அடுத்த 3 மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு பாதிப்பை கண்டறிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர்

 உலகக்கோப்பை: இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை

 சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை நீட்டிப்பு. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு . போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாம்

 வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து

கொடைக்கானலில் இன்று ஒருநாள் மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து. வன உயிரின வார விழாவினை முன்னிட்டு ஒருநாள் மட்டும் நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவிப்பு. மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து

பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு

 காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தல்

 போரை தீவிர்ப்படுத்த போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தல். ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அறிவிப்பு

44 மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து. தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்னக ரயில்வே அறிவிப்பு

 ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2409 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 325 கனஅடியாக சரிவு; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.  சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 494 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 117 கனஅடியாக சரிவு .  கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 484 மில்லியன் கனஅடியாக உள்ளது

 பட்டாசுக் கடை விபத்து - முதல்வர் நிதியுதவி

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு..ஸ்டாலின் நிவாரணம். விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளிக்க உத்தரவு. படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு த்லா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிப்பு. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

TAMILNEWS
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment