இஸ்ரேல்-காஸா மோதல்: மத்தியஸ்தத்துக்கு வாடிகன் தயார்
காஸாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் அமைதியை எளிதாக்குவதற்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய வாடிகன் முன்வந்துள்ளது.
இது குறித்து, வெளியுறவுத்துறை செயலர் கார்டினல் பியட்ரோ பரோலின், “பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க இரு நாடுகளும் முன்வர வேண்டும். அவர்கள் எங்கள் கவலைகள் அனைத்திற்கும் மையமாக உள்ளனர்.
எப்பொழுதும் போல் தேவையான எந்த மத்தியஸ்தத்திற்கும் தயாராக உள்ளோம்” என்றார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: 1799 பாலஸ்தீனர்கள் பலி
காசாவில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலின் வெளியேற்ற எச்சரிக்கைக்குப் பிறகு மக்கள் பாதுகாப்பான இடங்ளில் தஞ்சம் அடைந்துவருகின்றனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்.7ஆம் தேதி சனிக்கிழமை தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்ப்டடனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு உத்தரவு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து வரும் 15ம் தேதி முதல் 153 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு
இஸ்ரேல் போர் : அஜய் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பிய தமிழர்கள்
இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பிய தமிழர்கள். தாயகம் திரும்பிய 21 தமிழர்களில், 14 பேர் சென்னை விமான நிலையம் வருகை
லியோ சிறப்பு காட்சி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் உத்தரவு
நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு! சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!
ஜெயலலிதாவின் வாகனம் தாக்கப்பட்ட வழக்கு : ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்
2008ம் ஆண்டு ராமநாதபுரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம் தாக்கப்பட்ட வழக்கில், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வீடியோ கான்பரன்சிங் மூலம் சாட்சியம் அளிப்பு!
ரோஹிணி திரையரங்கு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
விதிகளை மீறி, அதிகாலை காட்சி திரையிட்டதால் ₹2,000 அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி திரையரங்கு தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ரோஹிணி திரையரங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 5ல் ₹1817.54 கோடி மதிப்பில் ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது!
இஸ்ரேலுக்கு ஜோர்டான் மன்னர் எச்சரிக்கை
பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக அகற்றும் எந்த ஒரு நடவடிக்கையிலும் இஸ்ரேல் ஈடுபடக் கூடாது காசாவிற்குள்ளே கூட அவர்களை இடம் மாற்ற கட்டாயப் படுத்தக் கூடாது - ஜோர்டான் மன்னர் அப்துல்லா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து கோவை வந்த இளைஞர் திவாகர் பேட்டி!
“போர் சூழலில் நாங்க இருந்தபோது, தொடர்ந்து 2 நாட்களாக எங்களை தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசிக்கொண்டே இருந்தாங்க.. நாங்க வீட்டுக்கு போய் சேர்கிற வரை, எல்லா ஏற்பாடையும் சிறப்பா செஞ்சிருக்காங்க”
இஸ்ரேலில் இருந்து தமிழர்கள் வருகை
இஸ்ரேலில் இருந்து தமிழர்கள் வருகை. இஸ்ரேல் போர் காரணமாக இந்தியா திரும்பிய 21 தமிழர்களும் தமிழகம் வந்தடைந்தனர்.
சற்றுமுன் 14 பேர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், தற்போது 7 பேர் கோவைக்கு வருகை.விமான நிலையம் வந்தடைந்த தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர்
தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு, காவிரி ஒருங்காற்றுக்குழு அளித்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது
காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம் டெல்லியில் தொடங்கியது
டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள், தமிழக அரசின் சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு. முதன்மை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட வனப்பணி அதிகாரி நாதன் ஏற்கனவே மேல்முறையீடு.
13 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம். குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
இஸ்ரேல் வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்
இஸ்ரேல் வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் வருகை. நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் இஸ்ரேல் வருகை. இஸ்ரேல் அதிபர், பிரதமரை சந்தித்த பிளிங்கென்
மாண்டவியாவிக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களை மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்.20ம் தேதிவரை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.
9 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேலும் 9 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்தது.
பணகுடியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் 1999ல் நெல்லை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
சென்னை ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்
சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 1500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சோனியா காந்தி இன்று தமிழகம் வருகை
திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சோனியா காந்தி தமிழ்நாடு வருகிறார்.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நாளை நடைபெறும் மாநாட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
TRB செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2012-16 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் வருமானத்திற்கு அதிகமாக 354% சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு, அவரது மனைவி அகிலேண்டேஸ்வரி, தந்தை, தாய் மாமனார் மற்றும் மாமியார் உள்பட 6 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீரில் மூழ்கி பாழான நெற்கதிர்கள்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.
200 ஏக்கர் பரப்பிலான வயல்வெளியில் நெற்கதிர்கள் பாழானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
RSS தொடர்ந்து மனு மீது விசாரணை
திருச்சி, மதுரை, தஞ்சை, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் விஜயதசமியை ஒட்டி பேரணி செல்ல அனுமதி கோரி, RSS தொடர்ந்து மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடங்கியது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், தொழிலதிபருமான எம்.பி.சுரேஷ், தனது வீட்டில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
10 லட்சம் மக்கள் துரிதமாக அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை
இன்று முதல் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள். திருப்பதி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு . சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்.
நாகப்பட்டினம் – இலங்கை: நாளை காலை பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது
லாட்டரி அதிபருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. சத்தீஸ்கர், மிசோராம் மாநிலங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். 3,000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில் கூட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.