தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 8.22 லட்சம் மாணவர்கள், புதுச்சேரியில் 14.62 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
கத்தரி வெயில் தொடங்கியது!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கி, மே 28 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, காலை 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள்,நோயாளிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
IPL 2022: பஞ்சாப் அணி அபார வெற்றி!
ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி வெற்றது.
Tamil Nadu news live update
18 டன் தங்கம் விற்பனை
தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. ரூ.9,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டன. இது 2019ஆம் ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரிய டிஜிட்டல் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.. மோடி!
6 ஆண்டுகளுக்கு முன் இந்தியா தனி நபர் தரவு நுகர்வு அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. இன்று பல பெரிய நாடுகளை விட இந்தியா தற்போது அதிகளவில் டேட்டாவை உபயோகிக்கிறது. புதிதாக கிராமங்களிலிருந்து அதிகளவில் டேட்டாவை உபயோகிக்கின்றனர்; இதன்மூலம் ஒரு பெரிய டிஜிட்டல் சந்தை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது என டென்மார்க்கில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. இரு நாட்களில் மட்டும் 5,620 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதால் பாலிசிதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்த பங்கு விற்பனைக்குப் பிறகும் எல்ஐசி நிறுவனத்தின் 96.5 விழுக்காடு பங்குகள் மத்திய அரசிடமே இருக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்ட ரூ1500 கோடி நிதி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம். ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்படவுள்ள நிலையில், மொத்த திட்டமதிப்பான ரூ1977 கோடியில் அந்நிறுவனத்துக்கு ரூ1500 கோடி ஒதுக்கியுள்ளது.
மே 5ம் தேதி தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொது சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
மே 5ம் தேதி தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்
*தேர்வறையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆறடி இடைவெளி கட்டாயம்
*கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம்
*மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம்
*மாணவர்களுக்கு, 3 அடுக்கு முகக்கவசம் வழங்கப்பட வேண்டும்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார். தனது ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 178 பயணிகளுடன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 9.30 மணி நேரமாக நடந்த 3வது நாள் விசாரணை நிறைவு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தார். வெடிவிபத்தில் சோலை விக்னேஷ்(25) என்பவர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் மு.க. தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு: “முக்கிய நகரங்களில் 52 வாரங்களுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும். மயிலாப்பூர், நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் கோயில்களில் சிவராத்திரியன்று மாபெரும்விழா நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்வீட்: “மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது மனித நாகரீகத்திற்கு எதிரான செயல். தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தில் பல்லக்கு சுமத்தலை மாற்றும் அரசு உத்தரவை அமலாக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் சேலம் வீராணம் அருகே 12ம் வகுப்பு மாணவி பிரகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
தமிழ் திரையுலகில் இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமையை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில் பிரபல பாடலாசிரியர்கள் கவிஞர்கள் வைரமுத்து, விவேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம். அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60% பங்கு தொகையாக வழங்கப்படும் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாஹாவை மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜூம்தாருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திமுக இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை, திரிகள். இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த பல்வேறு மாவட்டங்களில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . இதன்படி தேர்வுகள் வரும் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த பல்வேறு மாவட்டங்களில் அட்டவணை வெளியீடு. வரும் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவல்
தகவல் தொழில்நுட்பவியல் துறை இனி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் பிரபு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தாக்கும் போது நேரில் பார்த்ததாக ஆட்டோ ஓட்டுனர் பிரபு தெரிவித்திருந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) மே 2-4 தேதிகளுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், பணவீக்கத்தை குறைக்கும் வகையில், ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி, 4.40 சதவீதமாக உயர்த்தியதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார் என நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
மறுவாழ்வு மையத்தில் நடந்த சித்திரவதையை வெளியே சொன்னதால் கொலை செய்ததாக, சென்னை போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனிடையே, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களையே பணியில் அமர்த்தியதும் சிகிச்சை பெற்றவர்களிடம் ரூ20 ஆயிரம் கட்டணம் வசூல் செய்தததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளாமுண்டி வனப்பகுதியில் மானை வேட்டையாடி 35 கிலோ இறைச்சியை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம். தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறையில் உள்ளார், அவரது நடத்தை நன்றாக உள்ளதால் ஜாமீன் வழங்கினோம், இதில் முடிவெடுக்க என்ன சிக்கல் உள்ளது. மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் .மே 10ஆம் தேதிக்குள் மத்திய முடிவெடுக்காவிட்டால், அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுமா? முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு ரத்னவேல் மாற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தருமபுரம் விவகாரம் குறித்து ஆதீனங்களுடன் பேசி அரசு சுமூக தீர்வு காணப்படும். தருமபுரம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
நாளை (மே 5) தொடங்கவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பல்லாவரம் மின் கோட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதியம் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
வட சென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
மன்னார் பேசாலைப் பகுதி வழியாக, தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது.
வட சென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
மன்னார் பேசாலைப் பகுதி வழியாக, தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை இன்று மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்காக ரூ. 2.38 கோடியில் வாங்கப்பட்ட 29 புதிய வாகனங்களை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில், 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையத்தில் 60 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது.
ஜோத்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 3,205 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 2,802 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு மே 5 தொடங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,91,343 மாணவர்களும், 4,31,341 மாணவிகளும் இத்தேர்வை எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி, டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிரான்ஸ் செல்கிறார்.
4 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடத்தப்பட உள்ளன.