பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 495-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News updates
சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது... மன்னிப்பு கேட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்: “நீண்ட காலமாக இருக்கும் பிரச்னையைத் தீர்க்காமல் வைத்திருக்கும் அணைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறினார் முல்லைத்தீவு நீதிபதி
அச்சுறுத்தல், தொடர் அழுத்தத்தால் முல்லைத் தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகி நாட்டைவிட்டும் வெளியேறினார். குருவத்தூர் மலை வழக்கில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாக நீதிபதி சரவணராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
TMB வங்கி நிர்வாகி அதிகாரி ராஜினாமா?
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவர் சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டிஎம்பி வங்கியில் இருந்து வரவு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது நினைவு கூரத்தக்கது.
உலகக்கோப்பை அணியில் மீண்டும் அஸ்வின்
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக அக்சர் படேல் நீக்கப்பட்டு 15 பேர் கொண்ட இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது? ஓ.பி.எஸ் கேள்வி
தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையை மாற்றுமாறு கோரிக்கை வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது? எனக் கேள்வியெழுப்பிய ஓ.பன்னீர் செல்வம், “கடந்த ஒரு மாதமாகமே என்னிடம் பாஜகவினர் பேசிவருகின்றனர்” என்றார்.
சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் லஞ்ச புகார்
மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டேன். பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்
எம்.எஸ். சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் இன்று காலமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
ஓ.பி.ஸ் தலைமையில் திடீர் ஆலோசனை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடக்கிறது
அக்டோபர் 3-ம் தேதி தமிழக பா.ஜ.க ஆலோசனை கூட்டம்
சென்னை, கமலாலயத்தில் அக்டோபர் 3ம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிந்த நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.
நாளை முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்க மாட்டோம் - உரிமையாளர்கள் சங்கம்
செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டிகள் குதிரையேற்றம் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா
மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டில் கொள்ளை
பென்னாகரம் அருகேவுள்ள பாப்பாரப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்கு காரில் வந்த மர்ம பெண் ஒருவர் ஆப்பிளில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்து வீட்டிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை கொள்ளைடித்து சென்றுள்ள நிலையில், அந்த மர்ம பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்
பெங்களூருவில் 144 தடை உத்தரவு
கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ள நிலையில், பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, நாளை கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
M.S. சுவாமிநாதன் மறைவு- இபிஎஸ் இரங்கல்
உலக அளவில் பெருமை பெற்றவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவருமான, இந்திய வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன் அவர்கள் வயது முதிர்வால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்;
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் துறையினருக்கும், வேளாண் மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்- எடப்பாடி பழனிசாமி
எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு- ஸ்டாலின் இரங்கல்
வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி pic.twitter.com/dckTKUSled
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 28, 2023
பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்;
அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்;
மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல்- மு.க.ஸ்டாலின்
கூட்டணி கிடையாது- சீமான்
திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது
நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்து தான் போட்டியிடும்;
நதி நீரை தராத, காங்கிரஸ் கட்சியுடன் எதுக்கு திமுக கூட்டணி வைத்துள்ளது- சீமான் கேள்வி
12 மாவாட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசுப் பணி சாதனையல்ல;
ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்குங்கள்;
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்;
அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். சென்னையில் காலை 11.20 மணியளவில் காலமானார் 1925ல் கும்பகோணத்தில் பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதனின் அகவை 98 விவசாயம், உணவுப் பாதுகாப்பில் சுவாமிநாதனின் பங்களிப்பு முக்கியம்.
புனிதமான திருவள்ளுவர் மண்ணில், தாமரை பெரும் வெற்றி பெறும்
புனிதமான திருவள்ளுவர் மண்ணில், தாமரை பெரும் வெற்றி பெறும் கே.பி.முனுசாமிக்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பதில்
மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை
"மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை" "புதிய கூட்டணி அமைத்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும்.பாஜக ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை கண்டிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டுவோம்.தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும் - அதிமுக துணை பொதுச்செயளாலர் கே.பி.முனுசாமி
ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி
சென்னை எண்ணூரில் சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் கடந்த 24.08.2023 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார் இந்தத் தகவலை கேள்விப்பட்டு நடிகர் சூர்யா ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்
அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை - முனுசாமி
2024-ல் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. பா.ஜ.க உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு அதனை இபிஎஸ் ஏற்றார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. தேர்தல் வந்தால் அதிமுக- பாஜக கூட்டணி இணைந்துவிடும் என அமைச்சர் உதயநிதி கூறுவது நடக்காது. அண்ணாமலையை மாற்றக் கோருவது சிறுபிள்ளைத்தனமானது.
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம். மகளிர் வுஷூ போட்டியில் இந்திய வீராங்னை ரோஷிபினா வெள்ளி வென்று அசத்தல். இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை வூ, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதுவரை 24 பதக்கங்களை கைப்பற்றி, பதக்கப் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது,
ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணிகள்
திருப்பூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் அபாய சங்கிலியை பயணிகள் இழுத்ததால் பரபரப்பு. ஹூப்ளி - கொச்சுவேலி விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு. ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில் - போத்தனூர் ரயில் நிலையத்தில் ஏசி சரி செய்யப்பட்டது.
தங்கம் விலை அதிரடி குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,410க்கு விற்பனை. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.7650க்கு விற்பனை
டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி
திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியில் டெங்கு டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி அபிநீதி உயிரிழப்பு. டெங்குவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில உயிரிழப்பு.
மதுரை எய்ம்ஸ்- டெண்டர் அவகாசம் நீட்டிப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டரில் பங்கேற்க அவகாசம் முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் 6வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா. ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம். 1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி சாதனை
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டில் மழை
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்தியா வானிலை மையம்
போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்- லியோ படக் குழு
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக கேட்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வேண்டாம். லியோ இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், பெரியமேடு காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்
கடலூர் பேருந்து பணிமனையில் தீ விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து. காலாவதி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து - 4 பேருந்துகள் எரிந்தன. 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது
பகல் நேரங்களில் இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை ஒரு பேருந்தில் திடீரென தீப்பற்றியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.