Advertisment

Tamil News Today: வானிலை நிலவரத்தை கணிக்கும்: இஸ்ரோவின் இன்சாட்-3 டி.எஸ் செயற்கைக் கோள் இன்று விண்ணில் பாய்கிறது

இன்று நடைபெறும் செய்திகளை, இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
INSAT-3DS.jpg

IE Tamil Updates

Tamil News Live updates : பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்குட்பட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; மாஞ்சோலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி  மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் நேரில் அனுமதி பெற்று செல்லலாம்; மணிமுத்தாறு  வனச்சாவடியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் அனுமதி பெற வேண்டும்- புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா தகவல். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

  • Feb 16, 2024 22:41 IST
    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் : அஷ்வினை பாராட்டிய பிரதமர் மோடி

    "500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் சாதனை படைத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரின் பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்



  • Feb 16, 2024 20:54 IST
    புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் : கனிமொழி எம்பி விமர்சனம்

    நெல்லையில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி " மத்திய அரசின் திட்டங்கள் புரியாத மொழிகளில் உள்ளன. மத்திய அரசு, மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. "பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது" என கூறியுள்ளார்.



  • Feb 16, 2024 20:49 IST
    காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு : டி.என்.பி.எஸ்.சி தகவல்

    டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில், உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிக்கு 752 பேர், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டி.என்.பி.எஸ்.சி தகவல் தெரிவித்துள்ளது.



  • Feb 16, 2024 20:17 IST
    வணங்கான் பிப்.19ஆம் தேதி டீஸர்

    பாலா டைரக்ஷனில், அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்’ படத்தின் டீஸ்ர் பிப்.19ம் தேதி வெளியாகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 16, 2024 20:05 IST
    ஏன் 3 ஆண்டுகளை வீணடித்தீர்கள்: மத்திய அரசுக்கு விவசாய சங்கத் தலைவர் கேள்வி

    விவசாயிகள் போராட்டம் குறித்து அகில இந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா, “இந்தப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றால், ஏன் அவர்கள் இதற்கு முன்னதாக விவசாயிகளை அழைத்துப் பேசவில்லை. ஏன் மூன்று வருடங்களை வீணடித்தார்கள்? எனக் கேள்வியெழுப்பினார்.



  • Feb 16, 2024 20:03 IST
    பேடிஎம் பேமெண்ட் வங்கி காலக்கெடு நீட்டிப்பு


    பேடிஎம் (Paytm) பேமென்ட்ஸ் வங்கிப் பணப்பரிவர்த்தனைகளை மார்ச் 15 வரை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.



  • Feb 16, 2024 20:02 IST
    பாஜக தலைவரை சந்தித்த சௌரவ் கங்குலி


    மேற்கு வங்கத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரை, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.



  • Feb 16, 2024 19:01 IST
    ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்?

    ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, “ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாகப் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    இந்த நிலையில் இவர் சிறையில் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.



  • Feb 16, 2024 18:29 IST
    டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

    “பொய் வழக்குகளைப் போட்டு மற்ற மாநிலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்துவதையும், அரசுகளைக் கவிழ்வதையும் பார்க்க முடிகிறது.
    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை; அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குக் காட்டவே, நான் ஒரு நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்கிறேன்" என அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவையில் பேசினார்.



  • Feb 16, 2024 17:39 IST
    சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பெயர் அமரன்

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘அமரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை, படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.



  • Feb 16, 2024 17:19 IST
    கட்சியை பதிவு செய்தார் மன்சூர் அலிகான்


    இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பதிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 16, 2024 16:34 IST
    செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21வது முறை நீட்டிப்பு

    செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 20 வரை நீட்டித்து செனை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • Feb 16, 2024 16:30 IST
    மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணைக்கான பணிகளை செய்யக்கூடாது என்று கர்நாடகாவை மத்திய அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும். மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகாவை கண்டித்து தமிழ்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.



  • Feb 16, 2024 16:27 IST
    வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையீடு: முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்குகள் விடுவிப்பு

    வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.



  • Feb 16, 2024 16:26 IST
    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; ஜம்மு காஷ்மீரில் 50 பேர் கைது 

    பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி லால் சவுக்கில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த சுமார் 50 தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் ‘பாரத் பந்த்’ அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.



  • Feb 16, 2024 15:31 IST
    விவசாயிகள் போராட்டம்: ஷாம்பு எல்லையில் 15 நிமிடங்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு 

    பஞ்சாப்-ஹரியானா ஷாம்பு எல்லையில் 15 நிமிடம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களின் மேடைக்கு அருகில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அங்கிருந்து அவர்கள் போராட்டக்காரர்களிடம் பேசி வருகின்றனர். மைதானத்தில் இருந்த எமது செய்தியாளர் கூறுகையில், பல இளைஞர்கள் சணல் சாக்கு பைகளை கொளுத்தி பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி வீசினர். இதுவே கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.



  • Feb 16, 2024 15:18 IST
    பஞ்சாப் - ஹரியானா ஷாம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு படை கண்ணீர் புகை குண்டுவிச்சு

    பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில், போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களின் மேடைக்கு அருகில் குண்டுகள் வீசப்பட்டன். அங்கிருந்து அவர்கள் போராட்டக்காரர்களிடம் உரையாற்றி வருகின்றனர். மைதானத்தில் இருந்த எமது செய்தியாளர் கூறுகையில், பல இளைஞர்கள் சணல் சாக்கு பைகளை கொளுத்திவிட்டு பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி வீசினர். இதுவே கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.



  • Feb 16, 2024 14:52 IST
    பந்தை எதிர்கொள்வதற்கு முன்னரே 6 ரன்களை சேர்த்த இங்கி. அணி

    இந்திய அணி பிட்ச்-ஐ சேதப்படுத்தியதால் அம்பயர் 5 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு கொடுத்தார். முதல் பந்தை இந்திய பந்து வீச்சாளர்கள் `நோ’ பால் வீசியதால் மேலும் ஒரு ரன் இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்டது



  • Feb 16, 2024 14:07 IST
    டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் 

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 16, 2024 13:58 IST
    'கூட்டணி குறித்து பேசவில்லை' - அண்ணாமலை பேச்சு 

    "இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை. பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம். ஓரிரு நாட்களில் தேதி அறிவிப்பு வெளியாகும். முறையான நேரத்தில் கூட்டணி குறித்து பேசப்படும்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 



  • Feb 16, 2024 13:46 IST
    காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் இயங்க தீர்ப்பாயம் அனுமதி

    வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்த நிலையில், வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. 

    தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கின. இடைக்கால உத்தரவு மீதான விசாரணை வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. 

    2018ல் வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வெளியானது. 



  • Feb 16, 2024 12:58 IST
    மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

    விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய கூட்டமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம். மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் முழக்கம். விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் 



  • Feb 16, 2024 12:57 IST
    அங்கித் திவாரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

    லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விவேக் குமார் முன் விசாரணை.

    அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - வழக்கு விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு



  • Feb 16, 2024 12:37 IST
    வேளாண் பட்ஜெட்: ஸ்டாலின் ஆலோசனை

    தமிழக வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் ஆலோசனை

    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்பு



  • Feb 16, 2024 12:16 IST
    சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

    அமலாக்கதுறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    விடுவிக்க கோரும் மனு மீதான விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் - மனுவில் கோரிக்கை

    மனு குறித்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளனர். செந்தில் பாலாஜி மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது 



  • Feb 16, 2024 12:16 IST
    சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

    அமலாக்கதுறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    விடுவிக்க கோரும் மனு மீதான விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் - மனுவில் கோரிக்கை

    மனு குறித்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளனர். செந்தில் பாலாஜி மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது 



  • Feb 16, 2024 12:14 IST
    கொடைக்கானல்: தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து

    கொடைக்கானல் மலைப் பாதையில் தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய தனியார் பேருந்து

    பேருந்தில் இருந்து பள்ளத்தில் விழுந்து 40 வயது பெண் மாயம் - தேடும் பணி தீவிரம்

    பேருந்து தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

    எதிரே வந்த லாரி பாறையில் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு



  • Feb 16, 2024 12:05 IST
    தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை

    2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு

    மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பு



  • Feb 16, 2024 11:51 IST
    காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்

    காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் திடீர் முடக்கம் - காங்., பொருளாளர் அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

    "தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே காங்., வங்கி கணக்குகள் முடக்கம் - இதன் மூலம் ஜனநாயகமும் முடக்கப்பட்டுள்ளது"



  • Feb 16, 2024 11:51 IST
    அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்: சித்தராமையா

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் முக்கிய குறிப்பு. சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல் - பட்ஜெட்டில் தகவல்

    2024-25 ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார், முதலமைச்சர் சித்தராமையா.

    தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் - கர்நாடக மாநில பட்ஜெட்டில் உறுதி 

    கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம் - அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும்.

    அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு. 



  • Feb 16, 2024 11:49 IST
    மக்களை தேடி அரசு இயந்திரம் செல்கிறது- ஸ்டாலின்

    திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் 'மக்களுடன் முதல்வர்'. "ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம், வாதாடுவோம்".

     "ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான நல திட்டங்களை தீட்டுவோம்". மக்களுடன் முதல்வர் திட்டம் எனது நேரடி கண்காணிப்பில் உள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் அரசு சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற நிலை உருவாக்கம்.

    3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களை தேடி அரசு இயந்திரம் செல்கிறது. 30 நாட்களில் 3.50 லட்சம் மனுக்கள் தீர்வு காணப்பட்டது.

    மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், 'மக்களுடன் முதல்வர்' . திமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு. 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. 50 ஆயிரம் பணியிடங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி முதல்வர் ஸ்டாலின்



  • Feb 16, 2024 11:25 IST
    செந்தில் பாலாஜி மனு: உயர் நீதிமன்றம் மறுப்பு

    அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்ற மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த விவகாரம்

    முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு

    அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு



  • Feb 16, 2024 11:10 IST
    'மக்களுடன் முதல்வர்'- 3.5 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

    'மக்களுடன் முதல்வர்' - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்

    மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மனுக்கள் மீது இதுவரை தீர்வு

    1,598 பேருக்கு அரசுப் பணி நியமனஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்



  • Feb 16, 2024 11:04 IST
    மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

    சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்



  • Feb 16, 2024 10:42 IST
    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்

    சைரன் திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்தார்! அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்!



  • Feb 16, 2024 10:42 IST
    பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

    பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான 1% உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் உள்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்



  • Feb 16, 2024 10:25 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு தங்கம் ஒரு கிராம் ரூ.5,760க்கும், ஒரு சவரன் ரூ.46,080க்கும் விற்பனை



  • Feb 16, 2024 10:15 IST
    நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்குகிறது திமுக

    நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்குகிறது திமுக .உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் பரப்புரை கூட்டங்கள் நடைபெற உள்ளது.



  • Feb 16, 2024 10:12 IST
    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை

    விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காணாமல் தடுப்புச் சுவர்கள் எடுப்பதும், முட்பாதங்கள் அமைப்பதும் ஜனநாயகத்தின் தோல்வியை பிரதிபலிக்கும் - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை



  • Feb 16, 2024 09:57 IST
    கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா

    கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா .சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பு



  • Feb 16, 2024 09:55 IST
    காவலர் கணேஷ் குமார் உடன் பாஜகவை சேர்ந்த ரவிச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    சென்னை: பெரம்பூரில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கணேஷ் குமார் உடன் பாஜகவை சேர்ந்த ரவிச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்; இதனையடுத்து காவலர் கொடுத்த புகாரின் பெயரில் ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Feb 16, 2024 09:10 IST
    மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் வனத்துறை அனுமதி

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் வனத்துறை அனுமதி

    Image



  • Feb 16, 2024 09:09 IST
    குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது

    மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 54 கன அடியாக நீடிக்கிறது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 29.044 டி.எம்.சி. ஆக உள்ளது



  • Feb 16, 2024 09:00 IST
    தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் - சமுத்திரகனி

    நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி பேட்டி



  • Feb 16, 2024 08:15 IST
    இன்று முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கம்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கம்.  வார விடுமுறையையொட்டி 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு.



  • Feb 16, 2024 08:14 IST
    தேர்தல் நடத்தை விதிமுறைகள் எந்த வகையிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பாதிக்காது

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் எந்த வகையிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பாதிக்காது தன்னாட்சி அங்கீகாரம் பெறாத அமைப்புகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் தகவல்



  • Feb 16, 2024 08:13 IST
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் - விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் = 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல் வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம் நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment