Tamil News Today : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
+2 பொதுத் தேர்வு; இன்று முக்கிய முடிவு :
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என, 60% சதவீதம் கருத்து தெரிவித்த நிலையில், இன்று சட்டமன்றக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகாக, முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி விட்டு தேர்வுகள் தொடர்பான முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 55 நாள்களுக்கு பிறகு சரிந்த தொற்று எண்ணிக்கை :
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தை உலுக்கி வந்த நிலையில், தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா உச்சத்தில் இருந்த சென்னையில், 55 நாள்கள் கழித்து 2000-க்கும் குறைவாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை :
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மூன்றாம் அலையில் மருத்துவ கட்டமைப்புகள் திணறாமலும், அதிக அளவிலான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஜீலை, ஆகஸ்ட் மாநிலங்களிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிறுத்தியுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு; இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு :
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த இரு வாரங்களாக அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் சில முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மருத்துவ வல்லுநர் குழு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த முயன்றால் அதை எதிர்த்து போராடுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்துள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,410 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 443 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 27 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் +2 தேர்வு குறித்த அறிக்கையை சமர்பித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கின் புலன் விசாரணை முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் திமுக, காங்கிரஸ், விசிக, மமக, மதிமுக, கொ.ம.தே.க, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் ஆதரவும், பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் விருநகர், தேனி, மதுரை சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருச்சி சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் பங்கேற்ற எஸ்.எஸ். பாலாஜி ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
தமிழகத்தில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியஒ விரைவுப்படுத்த கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் மருத்துவமனை கட்டும் பணி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களிடம் ஏற்படுத்திய பாதிப்புகளை குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிமுகவினரிடம் பி.எஸ்.பி.பி. விவகாரம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றனர் அதிமுகவினர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, இதெல்லாம் ஒரு கேள்வியா என்று கேட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
12ம் வகுப்பு பொது தேர்வு குறித்து, 13 சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. பாலமுருகன் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழநாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி இல்லை.
தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அறிவிக்கப்பட்டுள்ளது
ஜூன் 7 முதல் 14 வரையிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாகவும், மற்ற மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு விரைவில் குறையும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 68% குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
+2 பொதுத் தேர்வு குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைப்பேசியில் உரையாடினார்.