Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu news update
சென்னை போலீஸ் எச்சரிக்கை
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரைகளில் இன்று இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இன்று மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கும்பலாக சேர்ந்து பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேங்கைவயல் தீண்டாமை சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி டிஐஜி சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சர்வர் பிரச்சனையால் சென்னையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகளில் பணப் பரிமாற்றம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் அவதியுற்று வருகின்றனர்
முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சபைக்காகவும் ஏசு கிறிஸ்துவின் போதனைகளுக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் முன்னாள் போப் 16ம் பெனடிக்ட். சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என மோடி தெரிவித்துள்ளார்
மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. சென்னையில் 300 பைக்குகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்!
'துணிவு' படத்தின் டிரைலர் உலக சாதனை படைக்க உள்ளது. ஹோலோகிராமில் வெளியாகும் முதல் இந்திய திரைப்பட டிரெய்லர் 'துணிவு' ஆகும். மலேசியா, கோலாலம்பூர் சிட்டி சென்டரில் இன்று இரவு 11 மணிக்கு ஹோலோகிராம் முறையில் 'துணிவு' டிரைலர் வெளியிடப்படுகிறது
தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை பாதுகாவலராக (வனப்படை தலைமை) சுப்ரத் மொகபத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் சையத் முசாமில் அப்பாஸ் ஓய்வுபெற்ற நிலையில் சுப்ரத் மொகபத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
நாமக்கல், மோகனூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
காவல்துறையினருக்கு டி.ஜி.பி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தில் பணியாற்றுவது அவசியம், காவலர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சுழற்சி முறையில் விடுப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்-தின் 'துணிவு' பட டிரைலர் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் துணிவு படம் தயாராகியுள்ளது
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் எதிரொலியாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் 56 பாகிஸ்தானியர்கள் உள்பட 186 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என டிஜிபி கூறியுள்ளார்.
புதுச்சேரி யூனியனில் இருந்து தமிழ்நாட்டுக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக போலீசார் கடலூர்-புதுச்சேரி எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அப்போது மது பாட்டில்கள் கொண்டு செல்லும் நபர்களை எச்சரிப்பதும், மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேசிய தலைநகர் டெல்லியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அங்கு கொரோனா பரவல் 0.22 சதவீதம் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை நடத்தியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டு, 2023 சட்டப்பேரவை தேர்தலை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்துவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பீகார் நிதிஷ் குமார் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 2811 பிரிவு அலுவலகங்களின் சிறப்பு முகாம்களோடு, சிறப்பு முயற்சியாக, கூடுதலாக 2811 Mobile campகளின் மூலமாக, அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வழி ஏற்படுத்தப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
புத்தாண்டை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!” எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2023 புத்தாண்டு. புத்தாண்டை ஒட்டி பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் உற்சாகம்.
நாமக்கல், மோகனூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ, 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை வெளியிட்டுள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தவும், செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே புதிய விமான நிலையத்தை அமைக்க 2017ல் கேரள அரசு அறிவித்திருந்தது. 2018ம் ஆண்டு சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 307 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு 2023. உலகின் முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு.
புத்தாண்டு விடுமுறை எதிரொலியின் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செலகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணிநியமன ஆணை வழங்க வேண்டும். ஆணை வழங்கப்படாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.” என்று தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
“ஒவ்வொரு ஆட்சியிலும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஆசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
'கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணிநியமன ஆணை வழங்க வேண்டும். ஆணை வழங்கப்படாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.' என்று தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இன்று காலை 9:34 மணிக்கு காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் உடல் நலக்குறைவால் ரோம் நகரில் இன்று காலமானார்.
சீனாவும், பாகிஸ்தானம் எல்லை விவகாரத்தில் பெரிதளவு திட்டமிடுகின்றன என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியின் தொடக்க விழா வரும் 13 தேதி தீவுத்திடலில் நடைபெறுகிறது நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் கணக்கெடுப்பு பணிகள் 85% நிறைவு பெற்றுள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் 3 பேர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என அதிமுக தலைமை நிர்வாகிகள் கடிதத்தை திருப்பி அனுப்பினர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், ஜன.3, 4 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. திறன்மிக்கவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023ல் வீறுநடை போடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரிக்கிறது. நாடு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திப்பதாகவும் அதிருப்தி
வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை சேர்ந்த உணவகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிப்பு – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
ஜனவரி 31ம் தேதிக்குள் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கவும்
நாளை மறுநாள் முதல் ஜன.31ம் தேதி வரை நடமாடும் சிறப்பு முகாம்
தமிழகத்தில் இதுவரை 1.60 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர் – அமைச்சர் செந்தில்பாலாஜி
குஜராத், நவ்சாரி நகரில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம்
விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – பிரதமர் மோடி
உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்
காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் – பிரதமர்
குஜராத், நவ்சாரி நகரில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு – 15 பேர் காயம்
தமிழகத்தின் மூன்று முக்கிய கோவில்களில் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவிலில் நாள்முழுவதும் அன்னதான திட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடக்கம்
போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களை ஆய்வு செய்ய, பராமரிக்க 7 நடமாடும் பணிமனை
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரூ. 1.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் பணிமனைகள்
மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபும், வேலூர், சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது நடமாடும் பணிமனை
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 41,040 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் புத்தாண்டு வாழ்த்து
கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து
2023பூச்செண்டு கொண்டுவாபுத்தாண்டே!ுத்தாண்டு | #2023newyear | #newyear | #newyear2023 | #2023 pic.twitter.com/QzQBNIvu4H
— வைரமுத்து (@Vairamuthu) December 31, 2022
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு ஜில்லும், நானும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
திமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கு துணைப் பொதுச் செயலாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்து துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு நேற்றுடன் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 14 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது; கொரோனா பாதிப்புக்கு 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு வெடித்த விபத்தில், வீட்டில் இருந்த மூதாட்டி பெரியக்காள் (73) மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார், அவரது மனைவி பிரியா ஆகிய 3 பேர் உயிழந்தனர். படுகாயங்களுடன் 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.