Advertisment

Tamil News Highlights: 15- 18 வயதினருக்கு ஜன. 3 முதல் தடுப்பூசி; மோடி அறிவிப்பு

EXCERPT: Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 25 December 2021-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: 15- 18 வயதினருக்கு ஜன. 3 முதல் தடுப்பூசி; மோடி அறிவிப்பு

Tamil Nadu News Today LIVE:

Advertisment

இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல்(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம்.

Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 51-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Christmas Wishes: வாடிகனில் கிறிஸ்துமஸ் பண்டிகை: போப் பிரான்சிஸ் வாழ்த்து!

இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். திருப்பலியில் பேசிய போப், , மனிதர்கள் தன்னலம் பார்ப்பதை விட பிறர் நலம் பார்த்து சேவை புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tamil Nadu News LIVE Updates

Corona Update: உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 27.31 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;

அமெரிக்கா-1.93 லட்சம்,

இங்கிலாந்து- 1.21 லட்சம்,

பிரான்ஸ்- 94,124,

இத்தாலி- 50, 599 பேர்

உலகம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:33 (IST) 25 Dec 2021
    வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு - அமைச்சர் ம.சுப்பிரமணியன்

    சென்னை ராஜூகாந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், அபாய பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாது அபாய பட்டியலில் இல்லாத நாடுகளின் இருந்து வரும் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்திய முழுவதும கொரோனா தொற்று பாதிப்புடன் ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால இந்த நடவடிக்கை மேற்கொளளப்பட்டுள்ளது. தற்போதுவரை தமிழகத்தில், 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 21:27 (IST) 25 Dec 2021
    கட்சி தொடங்கிய 22 விவசாய சங்கங்கள் : பஞ்சாப் தேர்தலில் போட்டி

    பஞ்சாப்பில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாய சட்டங்களை எதிர்த்து பேராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் சம்யுக்த் கிசான் மொர்சா என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது இந்த கட்சியுடன் 22 விவசாய சங்கங்கள் இணைந்துள்ள நிலையில, பஞ்சாப்பின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.


  • 21:13 (IST) 25 Dec 2021
    தலைநகர் டெல்லியில் 2-வது அதிகபட்ச கொரோனா பாதிப்பு

    தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக 200-ஐ கடந்துள்ளது.. அதன்படி டெலிலியின் இன்று 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி 255 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யபட்டிருந்த நிலையில். தற்போது 2-வது அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது


  • 21:06 (IST) 25 Dec 2021
    தடுப்பூசி மட்டுமல்ல... முககவம், சமூக இடைவெளி அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்

    இந்தியாவில் கொரோனா தொற்றை விட வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் தொற்று தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருஙகி வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 50% கொரோனா தடுப்பூசி செலுததிக்கொண்டவர்கள் என்று தெரியவந்துளளது.

    இதனால கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒமைக்ரான் தொற்றை கட்டுப்டுத்தாது என்று கூறியுள்ளமருத்துவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகினறனர்.


  • 20:58 (IST) 25 Dec 2021
    நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் இயக்குநர் சுராஜ்க்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், சில வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை இயக்கி வரும் இயக்குநர் சுராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 19:48 (IST) 25 Dec 2021
    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் வெப் ஸ்பேஸ்

    நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கேலக்ஸி உருவான விதம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களுக்காக உருவாகியுள்ளது. விண்வெளி அறிவியலில் இது மிகப்பெரிய முயற்சியாக கருதப்படுகிறது.


  • 19:45 (IST) 25 Dec 2021
    கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கொரோனா விழிப்புணர்வு

    கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சியாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் வழங்களை உண்ண வேண்டும் என்று நடுக்கடலில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு ஆனந்த என்பவர் மக்களுக்கு பழங்களை வழங்கினார்.


  • 19:38 (IST) 25 Dec 2021
    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் வெப் ஸ்பேஸ்

    நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கேலக்ஸி உருவான விதம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களுக்காக உருவாகியுள்ளது. விண்வெளி அறிவியலில் இது மிகப்பெரிய முயற்சியாக கருதப்படுகிறது.


  • 18:39 (IST) 25 Dec 2021
    நடிகர் விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் டீசர் வெளியீடு

    நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில, வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


  • 17:48 (IST) 25 Dec 2021
    வாட்ஸ்அப் சர்ச்சை : உறுப்பினர் பதிவுக்கு அட்மின் பொறுப்பாக முடியாது - உயர்நீதிமன்றம் மதுரை கிளை

    சர்ச்சைக்குரிய கருத்தை வாட்ஸ்அப் குழுவில் பதிந்த புகாரில் அட்மின் மீது வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்களின் பதிவுக்கு அட்மின் பொறுப்பாக முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது


  • 17:01 (IST) 25 Dec 2021
    கோலாரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 33 மாணவர்களுக்கு கொரோனா

    கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


  • 16:48 (IST) 25 Dec 2021
    ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

    ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது


  • 16:02 (IST) 25 Dec 2021
    பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

    கரூர், குளித்தலை அருகே நாகனூர் அரசு தொடக்கப் பள்ளியில் கெட்டுப் போன முட்டைகளை வைத்திருந்த விவகாரத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், தலைமையாசிரியர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்


  • 15:52 (IST) 25 Dec 2021
    ஹரியானா: அம்பாலா மாவட்டத்தில் 100% தடுப்பூசி

    ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் 100% செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது


  • 15:36 (IST) 25 Dec 2021
    அஞ்சலி செலுத்த வந்த சீமான் – கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

    நாகை மாவட்டம் கீழ வெண்மணியில் தியாகிகள் நினைவிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


  • 15:29 (IST) 25 Dec 2021
    ஒமிக்ரான் தொற்று 10 லட்சத்தை தாண்டும்

    அடுத்த 2 மாதங்களில் ஒமிக்ரான் தொற்று 10 லட்சத்தை எட்டும் என்று கேரள மாநில கொரோனா சிறப்பு குழு உறுப்பினர் அனீஸ் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார். அடுத்த ஓரிரு வாரங்களில் ஒமிக்ரான் தொற்று ஆயிரங்களை தாண்டும் என்றும் கணிப்பு


  • 15:16 (IST) 25 Dec 2021
    மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு பரிந்துரை

    ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழியில் வகுப்பு மற்றும் தேர்வுகள்ளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. இவ்வகையில் தேர்வுகளை நடத்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.


  • 14:53 (IST) 25 Dec 2021
    தூய்மைப் பணியாளர்கள் ஊதியம் - சென்னை நீதிமன்றம் புது உத்தரவு

    கல்வித்துறை தூய்மை பணியாளர்களுக்கு இணையாக காவல்துறை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென்ற உத்தரவு ரத்து. காவல்துறை பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.


  • 14:37 (IST) 25 Dec 2021
    எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் நண்பர்

    அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.37 கோடி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் உதவியாளர் மணியின் நண்பர் செல்வகுமார் கைது.


  • 14:26 (IST) 25 Dec 2021
    ஐ.டி. சோதனையில் சிக்கிய பியூஷ் ஜெய்ன் - 177.45 கோடி பறிமுதல்

    உ.பி. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பான் மசாலா மற்றும் வாசனை திரவியம் விற்பனை செய்யும் பியூஷ் ஜெய்ன் என்பவர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இதுவரை அவர்கள் ரூ. 177.45 கோடி பணத்தை எண்ணி முடித்துள்ளனர்.


  • 14:24 (IST) 25 Dec 2021
    ஒரே நாளில் இரண்டு முறை நில அதிர்வு : அச்சத்தில் வேலூர் மக்கள்

    வேலூர் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு என்ற பகுதியில் இன்று இரண்டாவது முறையாக லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


  • 13:44 (IST) 25 Dec 2021
    வடிவேலு நலமுடன் இருக்கிறார் - அமைச்சர்

    கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


  • 13:42 (IST) 25 Dec 2021
    நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது - அமைச்சர் திட்டவட்டம்

    கொரோனா தொற்று காலம் என்பதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொங்கலை கொண்டாட வேண்டும் என்றும் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


  • 13:29 (IST) 25 Dec 2021
    ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கு நாளை டிசம்பர் 26 முதல் 7 நாள்கள் தனிமை கட்டாயம்

    இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


  • 13:12 (IST) 25 Dec 2021
    ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கு நாளை டிசம்பர் 26 முதல் 7 நாள்கள் தனிமை கட்டாயம்

    இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


  • 12:56 (IST) 25 Dec 2021
    பணமோசடி வழக்கு: பழனிச்சாமி தனி உதவியாளரான மணியின் நண்பர் கைது

    அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில், எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மணி கைது செய்யப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்


  • 12:56 (IST) 25 Dec 2021
    பணமோசடி வழக்கு: பழனிச்சாமி தனி உதவியாளரான மணியின் நண்பர் கைது

    அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில், எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மணி கைது செய்யப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்


  • 11:57 (IST) 25 Dec 2021
    பாலியல் தொல்லை - கணினி ஆசிரியர் விஜய் ஆனந்த் கைது

    கோவை : வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் விஜய் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.


  • 11:56 (IST) 25 Dec 2021
    வேலூரில் 3ஆவது முறையாக நிலஅதிர்வு

    வேலூர் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் தொடர்ந்து 3 வது நாளாக லேசான நில அதிர்வு . காலை 9.40 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 11:45 (IST) 25 Dec 2021
    ஒமிக்ரான் அச்சுறுத்தல் - தமிழகம் வருகிறது மத்திய குழு

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள 10 மாநிலங்களுக்கு மத்தியக்குழு வர முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், மிசோரம், உ.பி., ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைகிறது


  • 11:45 (IST) 25 Dec 2021
    ஒமிக்ரான் அச்சுறுத்தல் - தமிழகம் வருகிறது மத்திய குழு

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள 10 மாநிலங்களுக்கு மத்தியக்குழு வர முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், மிசோரம், உ.பி., ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைகிறது


  • 11:38 (IST) 25 Dec 2021
    இன்றைய தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,424க்கு விற்பனையாகிறது.


  • 11:29 (IST) 25 Dec 2021
    ஒமிக்ரான் பாதிப்பு: 91 சதவீதம் பேர் இரண்டு முறை டோஸ் செலுத்தியவர்கள்!

    ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியவர்கள் என்றும் மூன்று பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியவர்கள் எனவும், அதே நேரம் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 11:23 (IST) 25 Dec 2021
    மோசடி புகார்: ராஜேந்திர பாலாஜியின் வங்கிக்கணக்கு முடக்கம்!

    மோசடி புகாரில் சிக்கியுள்ள ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்து காவல்துறை உத்தரவிட்ட நிலையில், அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.


  • 11:21 (IST) 25 Dec 2021
    கொரோனா உயிரிழப்பு: உடனே நிதி வழங்க ஈபிஎஸ் கோரிக்கை!

    கொரோனா தொற்றால் பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியை உடனே வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • 11:17 (IST) 25 Dec 2021
    தள்ளு வண்டியில் கிடந்த சிறுவன் சடலம்: சிசிடிவி காட்சிகள் வெளியானது!

    விழுப்புரம் மாவட்டத்தில் தள்ளுவண்டியில் சிறுவன் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் அடையாளம் தெரியாத இருவர் சிறுவனை தூக்கிவந்து தள்ளுவண்டியில் போடும் காட்சிகள் உறுதியானது. இதையடுத்து சிறுவனை தூக்கி வந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமா விசாரித்து வருகின்றனர்.


  • 11:12 (IST) 25 Dec 2021
    வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு: மக்கள் பீதி!

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 10:53 (IST) 25 Dec 2021
    கீழ் வெண்மணி படுகொலை நினைவு நாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை!

    கீழ் வெண்மணி படுகொலை சம்பவத்தின் 53வது ஆண்டு நினைவு நாளான இன்று, வெண்மணி தியாகிகள் நினைவகத்தில் சிபிஎம் கட்சி தலைவர்கள் மற்றும் நாகை எம்.பி. செல்வராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


  • 10:39 (IST) 25 Dec 2021
    வட சென்னை அனல் மின் நிலையம்: மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்!

    வட சென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 19-ஆம் தேதி, 2வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறுகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 10:27 (IST) 25 Dec 2021
    வட சென்னை அனல் மின் நிலையம்: மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்!

    வட சென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 19-ஆம் தேதி, 2வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறுகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 10:23 (IST) 25 Dec 2021
    ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

    ஜம்மு - காஷ்மீர் : சோபியன் பகுதியில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


  • 10:05 (IST) 25 Dec 2021
    அறநிலையத் துறை சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை!

    அறநிலையத் துறை சொத்துக்களை, சட்டப்படியான உரிமை இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்ற நிகழ்வு குறித்து விவரம் அறிந்த எந்த நபரும் புகார் மனு அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 10:02 (IST) 25 Dec 2021
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி- பிரேமலதா விஜயகாந்த்!

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக திட்டமிட்டப்படி தனித்துப் போட்டியிட உள்ளது. மேலும் கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.


  • 09:56 (IST) 25 Dec 2021
    இந்தியாவில் 7,189 பேருக்கு புதிதாக கொரோனா: ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 7,286 குணமான நிலையில், 387 பேர் உயிரிழந்தனர். தற்போது 77,032 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒமிக்ரான் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 415 ஆக உள்ளது.


  • 09:51 (IST) 25 Dec 2021
    வாஜ்பாய் 97வது பிறந்தநாள்- நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை!

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் 97வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.


  • 09:45 (IST) 25 Dec 2021
    ஜெய்பீம் படம்: பார்வதி அம்மாள் குடும்பத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.8 லட்சம் நிதியுதவி!

    ஜெய்பீம் படத்தின் உண்மை நாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக முதல்வர் ஸ்டாலி உறுதி அளித்தார். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் பார்வதி அம்மாள் வீடு கட்டுவதற்காக ரூ. 8 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.


  • 09:29 (IST) 25 Dec 2021
    வேலூர் ரயில்வே மேம்பால விரிசல்- 2வது நாளாக ரயில்கள் ரத்து!

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 38 மற்றும் 39 தூண்களை சீரமைக்கும் பணியில் 2வது நாளாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


  • 09:25 (IST) 25 Dec 2021
    கோவில் பிரசாதம் தயாரிக்க ஆவின் நெய், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த உத்தரவு!

    வரும் ஜனவரி 1, 2022 முதல் கோவில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெய், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்துசமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 09:23 (IST) 25 Dec 2021
    நீலகிரியில் கடும்பனி: பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு!

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனி சீசன் தொடங்கிய நிலையில் கடும் குளிர் நிலவுகிறது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை8 டிகிரி செல்சியஸாக இருந்தது. பல இடங்களில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


  • 09:19 (IST) 25 Dec 2021
    சபரிமலையில் நாளை மண்டலப் பூஜை!

    சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.


  • 09:16 (IST) 25 Dec 2021
    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் மட்டும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் மட்டும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.


  • 09:11 (IST) 25 Dec 2021
    திருப்பதி கோயிலில் ஈபிஎஸ் குடும்பத்துடன் தரிசனம்!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.


  • 09:09 (IST) 25 Dec 2021
    சாதி பெயரை சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியை மீது வழக்கு!

    பள்ளியில் படிக்கும் மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாக அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


  • 09:06 (IST) 25 Dec 2021
    அரசு நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா செய்து மோசடி: அரசு அதிகாரிகள் மீது வழக்கு!

    அதிமுக ஆட்சியில் தேனி பெரியகுளத்தில் உள்ள அரசு நிலங்களை, தனிநபர்களுக்கு பட்டா செய்த வழக்கில், வருவாய் கோட்டாட்சியர், நில அளவையர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


  • 08:15 (IST) 25 Dec 2021
    இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 400 ஆக உயர்வு!

    உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 400 பேர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  • 08:12 (IST) 25 Dec 2021
    டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் வெளியீடு!

    தமிழகத்தில் நடைபெறும்அரசு வேலைக்கான அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்ட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து, தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவை www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


  • 08:11 (IST) 25 Dec 2021
    கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

    இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு தொடங்கி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


  • 08:11 (IST) 25 Dec 2021
    மீண்டும் விமான விபத்து: விங் கமாண்டர் மரணம்!

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் அருகே, மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விங் கமாண்டர் ஹர்ஷித் சின்கா உயிரிழந்தார்.


Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment