Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2862 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 106 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 355 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 13, 2024 22:58 ISTஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? : ராதிகா சரத்குமார் கடும் விமர்சனம்
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும் என கூறியுள்ளார் செல்வி.
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on #dmk @mkstalin… https://t.co/0iB47olxzX
— Radikaa Sarathkumar (@realradikaa) May 13, 2024 -
May 13, 2024 22:37 ISTவிளம்பரப் பலகை சரிந்து 8 பேர் உயிரிழப்பு
மும்பையில் புழுதிப்புயல் வீசியதில், ராட்சத இரும்பு விளம்பர பலகை கிழே விழுந்து 8 பேர் மரணமடைந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
-
May 13, 2024 21:06 ISTநாடாளுமன்ற தேர்தல்: 62.31 சதவீத வாக்குகள் பதிவு
நாடாளுமன்ற தேர்தலில் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவடைந்தது.
மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 4ம் கட்ட மக்களவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. -
May 13, 2024 20:13 ISTசி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளன.
-
May 13, 2024 20:13 ISTசி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளன.
-
May 13, 2024 20:13 ISTசி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளன.
-
May 13, 2024 20:13 ISTசி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளன.
-
May 13, 2024 20:08 ISTஇளங்கலை என்ஜினீயரிங் கலந்தாய்வு: 1.16 லட்சம் பேர் விண்ணப்பம்
இளங்கலை என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணிக்குள் 1.16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
-
May 13, 2024 19:17 ISTவிலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எச்சரிக்கை
உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்" என்று எச்சரித்துள்ளது.
-
May 13, 2024 18:44 ISTகோடை வெயில் - தலைமைச் செயலாளர் ஆலோசனை
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் குடிநீர் நிலவரம் மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
-
May 13, 2024 18:44 ISTமும்பையில் இடியுடன் கூடிய கனமழை: ரயில் சேவைகள் பாதிப்பு
டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், ரயில்வே சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மாவட்டத்திற்கு இப்போது எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
-
May 13, 2024 18:41 ISTஜெயக்குமார் மரணம் - ஐ.ஜி விளக்கம்
"காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது. அவரது வாயில் பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர் இருந்தது. பணம் தொடர்பான பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என பல உள்ளது. சபாநாயகர் பெயரும் இடம்பெற்றுள்ளது தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்" என்று தென்மண்டல ஐ.ஜி கண்ணன் விளக்கமளித்துள்ளார்.
-
May 13, 2024 18:37 ISTஉயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: நெகிழ வைத்த தாயின் செயல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 3 வருடங்களுக்கு முன் உயிரிழந்த தனது மகளுக்கு, அன்னையர் தினத்தையொட்டி பூப்புனித நீராட்டு விழா நடத்தியுள்ளார் தாய் ராக்கு. இந்த சம்பவம் உறவினர்கள், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8ம் வகுப்பு படிக்கும்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஒரே மகளான பாண்டிச்செல்விக்கு, ஆபரணங்கள் அணிவதில் அதிக ஆர்வம் என்பதால், அவரது உருவத்தில் கட் அவுட் வைத்து இந்நிகழ்வை நடத்தியுள்ளனர்.
-
May 13, 2024 18:11 IST11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
-
May 13, 2024 17:56 ISTசேலம் மாவட்டத்தில் 3வது நாளாக பெய்த பலத்த மழை!
சேலம் மாவட்டம் களரம்பட்டி, தாதுபாய் குட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால், சேலத்தில் வெப்பம் தணிந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 3வது நாளாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
May 13, 2024 16:40 ISTஇரட்டை இலை சின்னம் சட்ட நடைமுறைகளின் படியே ஒதுக்கப்பட்டது – தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணைய விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் படியே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டது என ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பிய ஜெயசிம்மன்க்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது
-
May 13, 2024 16:23 IST19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு
கோவை, ஈரோடு, நீலகிரி, நெல்லை, கரூர், சேலம், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
May 13, 2024 16:03 ISTஇரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி? - தேர்தல் ஆணையத்துக்கு ஜெயசிம்மன் கேள்வி
நாடாளுமன்றத் தேர்தலில், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டது எப்படி? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஜெயசிம்மன் கேள்வி எழுப்பியுள்ளார்
-
May 13, 2024 15:45 ISTகஸ்டடியின் போது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சவுக்கு சங்கரை சந்திக்க அனுமதி; வழக்கறிஞர் பேட்டி
சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பேட்டி அளித்தார். அப்போது, சவுக்கு சங்கர் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை விசாரணையின் போது ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பதை சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம். குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம் அதற்கு கால அவகாசம் உள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
May 13, 2024 15:24 ISTஜெயக்குமார் மரண வழக்கு; காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், தென்மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் நெல்லை சரக டி.ஐ.ஜி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. ஜெயக்குமாரின் எலும்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது
-
May 13, 2024 14:56 ISTசவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் போலிஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்து உள்ளார். இதைதொடர்ந்து சைபர்கிரைம் போலிசார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை - 15 நிமிடம் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
-
May 13, 2024 14:51 IST4வது கட்ட மக்களவை தேர்தல்- 1 மணி நிலவரப்படி 40.32% வாக்குப்பதிவு
ஆந்திரா - 40.26%
பீகார் - 34.44%
ஜம்மு காஷ்மீர் - 23.57%
ஜார்கண்ட் - 43.80%
மத்திய பிரதேசம் - 48.52%
மகாராஷ்டிரா - 30.85%
ஒடிசா - 39.30%
தெலங்கானா - 40.38%
உத்தரபிரதேசம் - 39.68%
மேற்குவங்கம் - 51.87%
-
May 13, 2024 14:28 IST1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
ஆந்திர பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 40.26% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் தகவல்
-
May 13, 2024 14:27 ISTமண்டலவாரியாக தேர்ச்சி சதவீதம்
சிபிஎஸ்இ 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் - மண்டலவாரியாக தேர்ச்சி சதவீதம்
திருவனந்தபுரம் - 99.75 %
விஜயவாடா 99.60 %
சென்னை 99.30 %
-
May 13, 2024 14:07 IST10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 13, 2024 14:07 ISTஆந்திராவில் மோதல்
ஆந்திர மாநிலம் தாடிபத்திரியில் வாக்குப்பதிவின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு நிலவியது.
மோதலில் போலீஸ் எஸ்.பி. மற்றும் காவலர்கள் சிலர் காயம் அடைந்த நிலையில், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கூட்டம் விரட்டியடிக்கப்பட்டது.
-
May 13, 2024 14:06 IST9 பேர் போக்சோ சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமி கர்ப்பமான வழக்கில், 3 சிறார்கள் உள்பட 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
May 13, 2024 13:35 IST7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 13, 2024 13:11 ISTசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
-
May 13, 2024 13:11 ISTகுமரியில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், குலசேகரம், திற்பரப்பு, மார்த்தாண்டம், ஆற்றூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
-
May 13, 2024 13:11 ISTபாஜக வேட்பாளரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை
ஐதராபாத்தில், பாஜக வேட்பாளர் மாதவி லதா வாக்குச்சாவடியில் காத்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் அடையாள அட்டையை வாங்கி பர்தாவை திறந்து முகத்தை காண்பிக்குமாறு கூறிய சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கியவர் மாதவி லதா
-
May 13, 2024 12:49 ISTகெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பதவி நீக்கம் செய்ய கோரிய மனுவை ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி.
மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு உத்தரவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் பெற்றுள்ளார் கெஜ்ரிவால்
-
May 13, 2024 12:45 ISTஜெயக்குமாரின் செல்போனை வைத்து விசாரணை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு
ஜெயக்குமாரின் செல்போன் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை
உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை
நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார்
ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து தீப்பெட்டி கண்டெடுப்பு - விசாரணை
-
May 13, 2024 12:29 ISTவேல்முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில், பாடகர் வேல்முருகன் கைது. வளசரவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மதுபோதையில் வாக்குவாதம்.
மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார்,மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேலு காயம்.
வேல்முருகனை கைது செய்து, காவல்நிலைய ஜாமினில் விடுவித்த விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
-
May 13, 2024 11:52 ISTசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பம்
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம். கடந்த 10 மாதத்தில் 272 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் உரிமம் பெற்ற நிலையில் 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள சென்னை மாநகராட்சி. விண்ணப்பித்த 2,300 பேரில், இதுவரை 930 பேருக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி
-
May 13, 2024 11:37 ISTசி.பி.எஸ்.இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்,
-
May 13, 2024 11:36 ISTபாடகர் வேல்முருகன் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ கட்டுமான பணியாளரை தாக்கிய புகாரில், பின்னணி பாடகர் வேல்முருகன் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் வேல்முருகன், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
-
May 13, 2024 11:24 ISTஇளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை
சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
எம்.பி.ஏ படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி வந்த உதயகுமார், கொடூரமாக வெட்டிக் கொலை
தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்து தாக்குதல்
கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சேலையூர் காவல் நிலையத்தில் சரண்
6 மாதங்களுக்கு முன், உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால், முன்விரோதம் ஏற்பட்டு கொலை என அதிர்ச்சி தகவல்
-
May 13, 2024 11:18 ISTஆந்திராவில் வாக்குப் பதிவு இயந்திரம் உடைப்பு
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு. ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு. தாலுவாய் பள்ளி கிராம வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை, ஒருவர் தூக்கி போட்டு உடைத்தததால் பரபரப்பு. வாக்குப்பதிவு நிறுத்தம்- இயந்திரத்தை உடைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை
-
May 13, 2024 11:04 ISTசென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு
கைதானவர்கள், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், அவருக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது கண்டுபிடிப்பு சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் வெளியான புதிய தகவல் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் ஏற்கனவே கைது வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை.
-
May 13, 2024 10:57 ISTஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது
ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ.6,725-க்கும், ஒரு சவரன் ரூ.53,800 விற்பனை.
-
May 13, 2024 10:37 ISTசென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது
சென்னை வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை. சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை!
-
May 13, 2024 10:36 ISTஜெய்ப்பூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திங்கள்கிழமை காலை ஜெய்ப்பூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியபோது, இந்த மிரட்டல்கள் வந்ததை உறுதிசெய்து கூறினார்: “பள்ளிகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு பதிலடியாக, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எங்கள் போலீஸ் படை மற்றும் வெடிகுண்டு தடுப்புக் குழுக்களை அனுப்பினோம்.குறித்த பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
May 13, 2024 10:28 ISTநடிகர் பவன் கல்யாண் வாக்கு செலுத்தினார்
ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகர் பவன் கல்யாண்.
-
May 13, 2024 10:16 IST4ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 9 மணி நேர நிலவரப்படி 10.35% வாக்குப்பதிவு
4ம் கட்ட மக்களவைத் தேர்தல் - 9 மணி நேர நிலவரப்படி 10.35% வாக்குப்பதிவு. ஆந்திரா - 9.05% , பீகார் - 10.18%, ஜம்மு காஷ்மீர் - 5.07% ஜார்கண்ட்-11.78%, மத்திய பிரதேசம்-14.97%, மகாராஷ்டிரா-6.45% ஒடிசா-9.23%, தெலங்கானா-9.51%, உத்தரபிரதேசம்-11.67%, மேற்குவங்கம்-15.24%.
-
May 13, 2024 09:56 IST+1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது.
-
May 13, 2024 09:53 ISTகோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
1. 1 கிலோ பீன்ஸ் ₹200 - ₹230க்கு விற்பனை
2. 1 கிலோ பச்சை மிளகாய் ₹ 70க்கு விற்பனை
3. 1 கிலோ அவரைக்காய் ₹90 - ₹110க்கு விற்பனை
4. 1 கிலோ கேரட் ₹50 - ₹70க்கு விற்பனை
5. 1 கிலோ பூண்டு ₹250க்கு விற்பனை
6. 1 கிலோ சேனைக்கிழங்கு ₹70க்கு விற்பனை
-
May 13, 2024 09:08 ISTஆந்திராவில் வாக்குச்சாவடி அருகே மோதல்
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல். ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு .தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைப்பு. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதி மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு.
-
May 13, 2024 08:59 ISTமுன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாக்கு செலுத்தினார்
தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
-
May 13, 2024 08:58 ISTஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்கு செலுத்தினார்
தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.