Advertisment

Tamil news today : கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது

Tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது

பெட்ரோல்டீசல் விலை

Advertisment

சென்னையில் 136வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.  இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

சரஸ்வதி பூஜையை ஒட்டி, கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற ஒரே சரஸ்வதி அம்மன் ஆலயம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

6வது நபரை தேடும் பணி

தஞ்சாவூர்,  கொள்ளிடம் ஆற்றில் நீரில் 6 பேர் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு. 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு . 6வது நபரை தேடும் பணி தீவிரம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:53 (IST) 04 Oct 2022
    கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு

    ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் இதுவரை, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு கால்வதுறை டி.ஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


  • 21:49 (IST) 04 Oct 2022
    இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள் - இயக்குனர் பேரரசு பேட்டி

    சீமான், வெற்றிமாறன் பேச்சு குறித்து இயக்குநர் பேரரசு பேட்டி: இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள் - ராஜராஜ சோழன் இந்து சமயத்தை சேர்ந்தவர் தான். இந்து மதம் பாஜகவுக்கு சொந்தமா? சாமி பற்றி பேசிவிட்டால் சங்கி என்கிறார்கள் என்று கூறினார்.


  • 20:20 (IST) 04 Oct 2022
    எஃப்.பி.ஐ, இன்டர்போல், சி.பி.ஐ தகவலின் பேரில்... சைபர் குற்றங்களை எதிர்த்து 105 இடங்களில் போலீஸ் சோதனை

    ஆபரேஷன் சக்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் சிபிஐ மற்றும் போலீஸ் படை 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளன.

    அமெரிக்காவின் எஃப்.பி.ஐ மற்றும் சர்வதேச போலீஸ், சி.பி.ஐ தகவல்களின் அடிப்படையில், சிபிஐ மற்றும் மாநில போலீஸ் படைகள் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் 105 இடங்களில் சைபர் குற்றங்களுக்கு எதிராக எதிராக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


  • 18:57 (IST) 04 Oct 2022
    திருநெல்வேலி வந்த மத்திய அமைச்சர்

    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை என்ற பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது.


  • 18:50 (IST) 04 Oct 2022
    மூத்தத் தலைவர்கள் ஆதரவு இல்லை- சசி தரூர்

    கேரள மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர், “கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை. இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.

    யார், யாருக்கு வாக்களிப்பாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வாக்களிக்கலாம்” என்றார்.


  • 18:33 (IST) 04 Oct 2022
    புதிதாக 25 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் நிறுவ திட்டம்

    டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

    அப்போது புதிதாக 25 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


  • 18:26 (IST) 04 Oct 2022
    ஆதி புருஷ் படத்துக்கு சிக்கல்

    நடிகர பிரபாஷ் நடிப்பில் பிரமாண்டமா உருவாகியுள்ள ஆதி புருஷ் படத்தில் ஹனுமன் குறித்த காட்சிகள் தவறாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


  • 18:15 (IST) 04 Oct 2022
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த உத்தரவில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்டு அன்றைய தினமே பணி ஆணைகளை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  • 18:11 (IST) 04 Oct 2022
    அது உண்மை இல்லை... பதறிய போக்குவரத்துத் துறை அமைச்சர்

    கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் பெண்கள் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை வாய்மொழியாக உத்தரவு அளித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதில் உண்மை இல்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


  • 17:50 (IST) 04 Oct 2022
    மியான்மரில் சிக்கித் தவித்த தமிழர்கள் 13 பேர் மீட்பு

    மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக 13 பேர் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    முன்னதாக தமிழர்களை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.


  • 17:37 (IST) 04 Oct 2022
    கஞ்சா வியாபாரிகளின் ரூ.50 கோடி சொத்துக்கள் முடக்கம்

    தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள், சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:25 (IST) 04 Oct 2022
    இல. கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் மேற்கு வங்க கவர்னர் இல. கணேசனிடம் நலம் விசாரித்தார்.


  • 15:54 (IST) 04 Oct 2022
    இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

    2022ம் ஆண்டின், இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சின் அலெய்ன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஆன்டன் ஷிலிங்கர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிப்பதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.


  • 15:19 (IST) 04 Oct 2022
    இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

    நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 11 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். மாநில அளவில் அக்டோபர் 17 முதல் 28ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். நவம்பர் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேரவும் அறிவுறுத்தியுள்ளது.


  • 14:51 (IST) 04 Oct 2022
    உத்தரகாண்ட் நிலச்சரிவு

    உத்தரகாண்ட் திரெளபதியின் தண்டா 2 என்ற மலைச்சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 29 பேரில் 8 பேர் மீட்கப்பட்டனர்.


  • 14:18 (IST) 04 Oct 2022
    முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி துவக்கப்படும்

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி துவக்கப்படும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு


  • 14:18 (IST) 04 Oct 2022
    சுங்கச்சாவடிகளுக்கான பாதுகாப்பை தொடர வேண்டும்

    பணி நீக்கத்துக்கு எதிராக சுங்க சாவடி ஊழியர்கள் போராட்டம். செங்குறிச்சி, திருமாந்துறை சுங்கச்சாவடிகளுக்கான பாதுகாப்பை தொடர வேண்டும்


  • 13:48 (IST) 04 Oct 2022
    தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்

    ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம் 2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன


  • 11:48 (IST) 04 Oct 2022
    அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது

    மதுரவாயல் - துறைமுகம் சாலை பணிகளில் தற்போதைய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. மேல்மட்ட சாலை பணிகளுக்கு ரூ. 5,600 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது - அமைச்சர் எ.வ.வேலு


  • 11:47 (IST) 04 Oct 2022
    வார்டு பாயாக பணியாற்றும் பைக் சாகச இளைஞர்

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு பாயாக பணியாற்றும் பைக் சாகச இளைஞர் கடந்த செப்.8ம் தேதி அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட அலெக்ஸ் பினோய்-க்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தது


  • 10:09 (IST) 04 Oct 2022
    ஆபரண தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ₨560 உயர்ந்து ரூ. 38,200க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,775க்கு விற்பனை


  • 10:08 (IST) 04 Oct 2022
    ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கம்

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கம் டி20 உலக கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தை தவறவிட்டதால் அணியில் இருந்து நீக்கம்


  • 10:08 (IST) 04 Oct 2022
    ஆயுத பூஜை விழா கோலாகல கொண்டாட்டம்

    ஆயுத பூஜை விழா கோலாகல கொண்டாட்டம், வாகனங்களை அலங்கரித்து பூஜை செய்து வரும் பொதுமக்கள் சென்னை, பாரிமுனை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு


  • 10:08 (IST) 04 Oct 2022
    6வது நபரை தேடும் பணி தீவிரம்

    தஞ்சாவூர், கொள்ளிடம் ஆற்றில் நீரில் 6 பேர் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு - 6வது நபரை தேடும் பணி தீவிரம்


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment