Live

Tamil News Today : தமிழகத்தில் புதியதாக 1,896 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி

Latest Tamil News : 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News Live : 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தலைநகர் டெல்லியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாயிரம் காவல் துறையினர், ராணுவத்தினர் தவிர தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவினர், ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்  குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு மருந்து – 3, 4ஆம் கட்ட சோதனை நடத்த அனுமதி

மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு சொட்டு மருந்தின் மீது 3 மற்றும் 4-ஆவது கட்ட சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறைவாக உள்ளது என ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில், கொரோனா தடுப்பூசியை பெண்களுக்கு செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு தேசிய பெண்கள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்கள், நீலகிரி, கோவை மற்றும் புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
1:36 (IST) 15 Aug 2021
தமிழகத்தில் இன்று புதியதாக 1,896 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 1,842 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

12:37 (IST) 15 Aug 2021
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீ விருந்தளித்தார். இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

12:26 (IST) 15 Aug 2021
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு

தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலைக்கு எதிராக அயராது உழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள், முன்களப் ப்ணியாளர்களுக்கு வாழ்த்துகள் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

11:25 (IST) 15 Aug 2021
ஆப்கானில் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான் அமைப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த நிலையில் அதிகாரத்தை தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அதனையடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:34 (IST) 15 Aug 2021
நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு

ஜார்க்கண்ட், தான்பாத் தலைமை நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.

10:32 (IST) 15 Aug 2021
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

10:23 (IST) 15 Aug 2021
நடிகை மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8:47 (IST) 15 Aug 2021
காபூலை கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலையும் தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

8:39 (IST) 15 Aug 2021
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் இயற்ற வேண்டும் – கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும். போராட்டத்தில் இன்னுயிரை நீத்தவர்களுக்கு நினைவகம் அமைக்க முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

8:04 (IST) 15 Aug 2021
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6:22 (IST) 15 Aug 2021
பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது – பொன்.ராதாகிருஷ்ணன்

100 நாட்களில் திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும், பல திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன். பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் . வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

6:09 (IST) 15 Aug 2021
விவாதமின்றி சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது

போதுமான விவாதமின்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

5:54 (IST) 15 Aug 2021
பெட்ரோல் இலவசம்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் 75 என்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

5:52 (IST) 15 Aug 2021
கொடியேற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி

75-வது சுதந்திர தின நினைவுத்தூணை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

5:10 (IST) 15 Aug 2021
3 தவணைகளாக ரூ.50 கோடி வழங்கிய அரசு – ஸ்டாலின்

கார்கில் போரின் போது பிரதமரிடம் 3 தவணைகளாக ரூ.50 கோடி வழங்கிய அரசு அன்றைய திமுக அரசு. பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழக மக்களால் முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4:44 (IST) 15 Aug 2021
உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்

மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4:28 (IST) 15 Aug 2021
நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் உலக தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

“இந்தியா ஒரு காலத்தில் 8 பில்லியன் செல்போன்களை இறக்குமதி செய்தது. தற்போது 3 பில்லியன் செல்போன்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் உலக தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்” – பிரதமர் மோடி

4:03 (IST) 15 Aug 2021
முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்

கொரோனா தொற்று ஏராளமான படிப்பினையை நமக்கு தந்துள்ளது. கொரோனா எதிர்ப்பு போரில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்த்து வருகிறது அரசு என்றும் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

3:41 (IST) 15 Aug 2021
கொரோனா தடுப்பூசி உருவாக்கியது பெருமைக்குரியது

கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக மாறியது எனினும் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

3:38 (IST) 15 Aug 2021
கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றினார் ஸ்டாலின்

கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றி, இந்திய நாட்டின் தியாகிகள் அனைவருக்கும் என் வீர வணக்கம் என்று கூறி உரையாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

3:26 (IST) 15 Aug 2021
ஒரு வினாடியை கூட வீணடிக்காமல் உழைக்க தொடங்க வேண்டும் – பிரதமர் மோடி

75-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட திட்டங்கள் மக்களை வேகமாக சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு வினாடியை கூட வீணடிக்காமல் உழைக்க தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Web Title: Tamil news today live 75th independence day modi stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express