Advertisment

News Highlights : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்கியது

Tamilnadu News Update: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : முக கவசம் அணியாவிட்டால் அபராதம்... ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள்

Tamilnadu Latest News: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படத் தன்மை இல்லை என தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

இந்தியாவில் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 77,567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 794 பேர் உயிரிழந்தனர்.இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,68,436 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, தமிழகத்தில் உச்ச நிலையில் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னையில், மக்கள் கூட்டமின்றி பேருந்துகளில் பயணிக்க, சுமார் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும், மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து பரீசிலனை

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி தருவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், பொதுத் தேர்வு குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இன்று காலை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திட்டமிட்டப்படி, வரும் 3-ம் தேதி தேர்வு நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்குவங்கத்தில் 4ஆம் கட்ட தேர்தல்

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 21:14 (IST) 10 Apr 2021
    10 மணி வரை வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதி

    இ்நதியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இரவு 10 மணி வரை வழிபாட்டு தளங்களை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார்.


  • 19:34 (IST) 10 Apr 2021
    தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 6000-ஐ நெருங்கியது

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 18:28 (IST) 10 Apr 2021
    விடை பெறுகிறார் சூரப்பா

    சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் நீடிப்பு இல்லை என்பதால் , அவர் நாளையுடன் விடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 17:32 (IST) 10 Apr 2021
    ஸ்டாலின் கண்டனம்

    உரம் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தங்களது உரிமைக்காக போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச கூட அரசுக்கு மனமில்லை" என குற்றம்சாட்டியுள்ளார்.


  • 17:27 (IST) 10 Apr 2021
    அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும் - கடம்பூர் ராஜூ

    அதிமுகவில் இரட்டை தலைமை தங்களுக்கு பழகிவிட்டதாகவும், தேர்தலுக்கு பிறகும் இரட்டை தலைமை முறை தொடரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து்ளளார்.


  • 16:55 (IST) 10 Apr 2021
    9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு

    9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி பதில்களை வாட்ஸ் அப் மூலமாக பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 16:49 (IST) 10 Apr 2021
    தனிக்கட்சி தொடங்க உள்ள ஆந்திர முதல்வர் ஜெகனின் தங்கை

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தெலங்கானாவில் தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா, "நான் 100% தெலுங்கானாவின் மகள்" என்றார். மேலும் ஜூலை 8ஆம் தேதி கட்சிப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.


  • 16:37 (IST) 10 Apr 2021
    அனுமதி இல்லாமல் தண்ணீர் லாரிகள் இயங்க கூடாது - உயர்நீதிமன்றம்

    ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுப்பதாக தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் , உரிய ஒப்புதல் இல்லாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளது


  • 15:50 (IST) 10 Apr 2021
    உர விலை உயர்வுக்கு ஸ்டாலின், வைகோ கண்டனம்

    டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச மனமில்லாத மத்திய அரசு உர விலையை 58% உயர்த்திருப்பது, கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். உர விலை உயர்வு தொடர்பாக மதிமுக தலைவர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  • 15:05 (IST) 10 Apr 2021
    தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது - தமிழக அரசு

    தமிழகத்தில் நீட் தேர்வினால் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடனான கூட்டத்தில், தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரியும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டு முறையை தொடரவும் வலியுறுத்தியுள்ளனர்.


  • 14:41 (IST) 10 Apr 2021
    மேற்கு வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு; வாக்குப்பதிவு நிறுத்தம்

    மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4ஆவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி சட்டர்ஜியின் கார் மீது உள்ளூர் பொதுமக்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது.அதனைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிதால் குர்ச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி 125 ல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.


  • 14:22 (IST) 10 Apr 2021
    11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை

    தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்று கட்டுமான பணிகள் நடந்து வந்தன. கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதால் இந்த ஆண்டே மருத்துவ மாணவர் சேர்க்கை அந்த புதிய கல்லூரிகளில் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


  • 14:08 (IST) 10 Apr 2021
    ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்க்கு கொரோனா

    இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. முன்பாக கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்ஐ செலுத்திக்கொண்டார்.


  • 13:32 (IST) 10 Apr 2021
    தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:28 (IST) 10 Apr 2021
    கொரோனா: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

    கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


  • 12:49 (IST) 10 Apr 2021
    கொரோனா வார்டாக மாறும் மாநிலக் கல்லூரி விடுதி

    சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.


  • 12:48 (IST) 10 Apr 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 77,567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 794 பேர் உயிரிழந்தனர்.இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,68,436 ஆக அதிகரித்துள்ளது.


Tamilnadu News Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment