/indian-express-tamil/media/media_files/jgT950IlfszoKw0T85nK.jpg)
Tamil news today live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆக.4) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.4, 5 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Aug 05, 2024 00:55 IST
பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் நோவக் ஜோகோவிச்
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தங்கம் வென்றார். ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸை 7-6, (7/3), 7-6 (7/2), என்ற செட்கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
-
Aug 05, 2024 00:51 IST
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம்; சீமான் மீது வழக்குப் பதிவு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அனுமதியே பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Aug 04, 2024 20:26 IST
வயநாடு நிலச்சரிவு: தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்: “வயநாடு நிலச்சரிவு பேரிடர் தொடர்பாக தவறான செய்தியை பரப்புபவர்களின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகிறது. குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக வரும் செய்தி தவறானது” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 04, 2024 19:50 IST
வயநாடு நிலச்சரிவு; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஆக உயர்வு
கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஆக உயர்ந்துள்ளது.
-
Aug 04, 2024 18:00 IST
வயநாடு நிலச்சரிவு; ரூ.25 லட்சம் நிதி அளித்த அல்லு அர்ஜூன்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் அளித்துள்ளார்.
-
Aug 04, 2024 17:59 IST
சென்னையில் பரவலாக மழை
சென்னையில் இன்று வடபழனி, கோயம்பேடு, மாம்பலம், தி.நகர், ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
-
Aug 04, 2024 17:56 IST
வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 365 ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் 205 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
Aug 04, 2024 16:50 IST
அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார். இதனையடுத்து லக்ஷயா சென் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்
-
Aug 04, 2024 16:40 IST
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்
-
Aug 04, 2024 16:14 IST
விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்
-
Aug 04, 2024 16:05 IST
காலிறுதியில் லவ்லினா தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி அடைந்துள்ளார்
-
Aug 04, 2024 15:47 IST
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Aug 04, 2024 15:21 IST
சதுரகிரியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், 12 மணிக்கு மேல் மலையேற தடை
ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், 12 மணிக்கு மேல் மலையேற தடை விதிப்பு தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் தொடங்கி, மலைப்பாதை முழுவதும் கடும் நெரிசல் வனத்துறை கேட் முன் சூடம் ஏற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் பக்தர்கள்
-
Aug 04, 2024 15:12 IST
வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோர் 366ஆக உயர்வு
கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 366-ஆக உயர்வு மாயமானவர்களின் எண்ணிக்கை 290ஆக உள்ளது - ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதம்.
-
Aug 04, 2024 14:50 IST
வயநாட்டு நிலச்சரிவு : மண்ணில் புதைந்துள்ள உடல்களை அதிநவீன ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம்
வயநாட்டில், மண்ணில் புதைந்துள்ள உடல்களை அதிநவீன ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் கரையின் ஓரமாகவும், தண்ணீர் ஓடும் பகுதிகளிலும் ட்ரோன்களை பறக்கவிட்டு தேடுதல் பணி முன்னாள் மேஜர் இந்திரபாலன் தலைமையில் சிறப்பு தேடுதல் பணி
-
Aug 04, 2024 14:42 IST
திடீரென தி.மு.க.வினருக்கு முருகன் கண்ணுக்கு வந்திருக்கிறார்
திடீரென தி.மு.கவினருக்கு முருகன் கண்ணுக்கு வந்திருக்கிறார். முருகன் முப்பாட்டன் என நான் கூறிய போது என்னை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதினர்" "நாங்கள் வேல் எடுத்தால் மட்டும் தமிழ்நாடு நாசமாகி விடுமா?" "திமுகவினரை யார் எதிர்த்தாலும், அவர்களை சங்கி என்று கூறுவதா?" "திமுகவினரை எதிர்த்து யாராவது பேசினால், மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று கூறுவதா?" "திடீரென முருகன் உங்கள் கண்ணுக்கு வருவதன் காரணம் என்ன?" "தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களே இருப்பதால், ராமனை தொடர்ந்து முருகனை பயன்படுத்துகின்றனர்" "முத்துராமலிங்க தேவருக்கு தரும் மரியாதையை வேலு நாச்சியார் போன்றோருக்கு தருவதில்லை- நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
-
Aug 04, 2024 13:50 IST
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
Aug 04, 2024 13:37 IST
வயநாடு நிலச்சரிவு : ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் அல்லு அர்ஜுன்
கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் அல்லு அர்ஜுன்
-
Aug 04, 2024 13:03 IST
17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் . ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம். மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம். சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம். ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம். மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்
-
Aug 04, 2024 12:59 IST
அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்
"திமுக அரசு பொறுப்பேற்ற பின் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது"
"முதல் 3 நீரேற்று நிலையம் இடையேயான நிலத்தை பயன்பாட்டுக்கு எடுப்பதில் தொய்வு"
"விவசாயிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று, நிலத்தை பயன்படுத்த அனுமதி கேட்டோம்"
"3வது நீரேற்று நிலையத்தின் கீழே உள்ள விவசாயிகளுக்கு பயன் இல்லாததால் தாமதம் ஏற்பட்டது"
அத்திக்கடவு அவிநாசி திட்டம் - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
-
Aug 04, 2024 12:58 IST
தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை: சுரேஷ் கோபி
"வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" வயநாட்டில் ஆய்வு செய்த பின், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி
நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே பிரதான பணி - சுரேஷ் கோபி
மாயமானவர்கள் தொடர்பான விபரங்கள் சரியாக இன்னும் கிடைக்கவில்லை - சுரேஷ் கோபி
தேடுதல், மீட்பு பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவை என கேரள அரசு கேட்டால், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது - சுரேஷ் கோபி
முண்டகை, சூரல் மலையில் பாதிப்புகளை ஆய்வு செய்த சுரேஷ் கோபி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ,
-
Aug 04, 2024 12:18 IST
ஆக.14-ல் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி ஆக.14-ல் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படாததைக் கண்டித்தும், சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி, நீட் தேர்வு ரத்து கோரியும் மாவட்ட தலைநகரங்கிளில் ஆர்ப்பாட்டம்
-
Aug 04, 2024 12:18 IST
ஆட்சியரை கடிந்து கொண்ட அமைச்சர்
பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
ஆய்வில் பங்கேற்காத ஆட்சியரை தொலைபேசியில் கடிந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு
"2 அமைச்சர்கள் வந்திருக்கிறோம், ஏன் வரவில்லை" என ஆட்சியருக்கு டோஸ் விட்ட அமைச்சர்
பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள்
பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு
-
Aug 04, 2024 10:58 IST
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர்
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயராக திமுக கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு
- அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு அறிவிப்பு
-
Aug 04, 2024 09:46 IST
பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது
கடந்த 1ஆம் தேதி, பெரவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசிய வழக்கில், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை, வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
-
Aug 04, 2024 09:43 IST
நிலச்சரிவு, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்
வயநாடு நிலச்சரிவு, வெள்ளத்தில் மொத்தம் 1,208 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
முண்டைக்கை பகுதியில் 540, சூரல்மலையில் 600, அட்டமலையில் 68 வீடுகள் அடித்து செல்லப்பட்டன
-
Aug 04, 2024 08:57 IST
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. 6வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Aug 04, 2024 08:27 IST
கடைமடைக்கு வந்தடைந்தது காவிரி நீர்
#WATCH | கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. மாவட்ட எல்லையான திருவாலங்காடு பகுதியில் சிறப்பு பூஜை செய்து காவிரி அன்னையை வரவேற்ற ஊர் மக்கள்..!#SunNews | #CauveryRiver | #Mayiladuthurai pic.twitter.com/z0Gd1B13JL
— Sun News (@sunnewstamil) August 4, 2024 -
Aug 04, 2024 08:10 IST
போக்குவரத்தில் மாற்றம்
மடிப்பாக்கம் பிரதான சாலை முதல் கீழ்க்கட்டளை சந்திப்பு வரை மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து சோதனை மேற்கொள்வதற்காக இன்று ஒருநாள் (ஆக.4) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
-
Aug 04, 2024 07:45 IST
6வது நாளாக மீட்பு பணி
வயநாடு நிலச்சரிவு, மீட்பு மற்றும் தேடுதல் பணி 6வது நாளாக நீடிக்கிறது.
#WATCH | Wayanad landslide | Rescue and search operation enters 6th day.
— ANI (@ANI) August 4, 2024
The death toll stands at 308#Kerala pic.twitter.com/XChEHFpNNx -
Aug 04, 2024 07:41 IST
திருச்செந்தூர் கோவிலில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி அமாவாசையை ஒட்டி துலாபாரத்தில் அரிசியை காணிக்கையாக செலுத்தி அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா உடன் வழிபாடு செய்தார்.
#WATCH | தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி அமாவாசையை ஒட்டி துலாபாரத்தில் அரிசியை காணிக்கையாக வழங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - சௌமியா அன்புமணி!#SunNews | #AnbumaniRamadoss pic.twitter.com/4yyziecH4O
— Sun News (@sunnewstamil) August 4, 2024 -
Aug 04, 2024 07:33 IST
இன்று ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், நீர்நிலைகளில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
தென்காசியில் குற்றால அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு செய்தனர்.
-
Aug 04, 2024 07:30 IST
சென்னையில் 5 ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு
சென்னையில் சட்ட விதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையாட் ரீஜென்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
-
Aug 04, 2024 07:27 IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆக.4) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.4, 5 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.