/indian-express-tamil/media/media_files/VYmYXXDwGAcGwaUdDTcY.jpg)
Tamil News Updates
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7 மற்றும் 8 ஆம் தேதிகளில் மாநிலத்தில் பல பகுதிகளில்பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 03, 2024 21:56 IST
வயநாடு நிலச்சரிவு; 5வது நாளாக 1300 பேர் மீட்பு பணி
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் 5வது நாளாக 1300 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
-
Aug 03, 2024 21:55 IST
வயநாடு நிவாரணப் பணிகள்; ரூ.4 கோடி ஒதுக்கிய கேரளா
வயநாடு நிவாரணப் பணிகளுக்கு கேரள அரசு ரூ.4 கோடியை ஒதுக்கியுள்ளது.
-
Aug 03, 2024 20:25 IST
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள்; சித்த ராமையா
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார்.
-
Aug 03, 2024 19:51 IST
டிராபிக் போலீஸ் அபராதம்; பிரசாந்த் புது விளக்கம்
“ஹெல்மெட் போடவில்லை என எனக்கு அபராதம் விதித்தது பெரிய அளவில் மக்களை சென்றடைந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கு” என நடிகர் பிரசாந்த் கூறினார். -
Aug 03, 2024 18:57 IST
கிண்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ரூ30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் 2024ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையையும் வெளியிட்டார்.
2800 சதுர மீட்டர் பரப்பளவில் நீர்வாழ் பறவை கூடம், விலங்குகள், பறவைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் LED மின் திரைகள், நூலகம், நீரூற்று, செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டுள்ளது.
-
Aug 03, 2024 18:11 IST
மெட்ரோ பணிகள் தீவிரம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
மடிப்பாக்கம் பிரதான சாலை முதல் கீழ்க்கட்டளை சந்திப்பு வரை மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து சோதனை மேற்கொள்வதற்காக நாளை ஒருநாள் (ஆக.4) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
-
Aug 03, 2024 17:26 IST
கேரள நிலச்சரிவு; பலி 361-ஆக உயர்வு
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 361-ஆக உயர்வு மேலும் 206 பேர் மாயமான நிலையில், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அச்சம்
-
Aug 03, 2024 16:57 IST
'206 பேரை காணவில்லை; 215 உடல்கள் மீட்பு' - பினராயி விஜயன் தகவல்
நிலச்சரிவு பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இதுவே 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. இதுவரை, 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 206 பேர் காணாமல் போயுள்ளனர். 81 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பஞ்சாயத்துகள் இறுதிச் சடங்குகளைச் செய்யும். பாதுகாப்பான பகுதி கண்டறியப்பட்டு, நகரமைப்பு உருவாக்கப்படும். இப்பகுதியில் அழிக்கப்பட்ட பள்ளிகளை கல்வி அமைச்சர் பார்வையிடுவார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பை தொடர கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் அவர் கூறினார்.
-
Aug 03, 2024 16:14 IST
'அவர்களே தேசிய பேரிடர் தான்' - கனிமொழி
"எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஏனென்றால், அவர்களே தேசிய பேரிடராகத்தான் இருக்கின்றனர்" என்று தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
-
Aug 03, 2024 16:00 IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியேற்பு
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் வருகிற 7-ம் தேதி காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்
-
Aug 03, 2024 15:26 IST
வயநாடு நிலச்சரிவு - உயிருடன் இருக்கு 3 பேரை மீட்கும் பணி தீவிரம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வந்துள்ளனர். முண்டகையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ளது சூஜிப்பாறை நீர்வீழ்ச்சி. இங்குள்ள பாறைகளின் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரையும் மீட்பதற்கான முயற்சியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
-
Aug 03, 2024 15:11 IST
காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிச்செல் க்ரூப்பனை வென்று தீபிகா குமாரி அசத்தினார்.
-
Aug 03, 2024 14:26 IST
மேகதாது - துரைமுருகன் சந்தேகம்
மேகதாது- மத்திய அரசின் நிலைப்பாடு சந்தேகத்தை எழுப்புகிறது - துரைமுருகன்
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சந்தேகத்தை எழுப்புகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட விடவே மாட்டோம்- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
-
Aug 03, 2024 14:17 IST
வயநாடு நிலச்சரிவு: கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்
வயநாடு நிலச்சரிவு பேரிடர் - கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்கட்டித்தரப்படும் என அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக 100 வீடுகள் கர்நாடக அரசு சார்பில் கட்டித்தரப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
-
Aug 03, 2024 14:02 IST
3வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் மனு பாக்கர்
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார் மனு பாக்கர்
ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், கலப்பு பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர்.
25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதக்க வாய்ப்பை இழந்தார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 28 புள்ளிகளுடன் மனு பாக்கர் 4ஆம் இடம் பிடித்தார்
-
Aug 03, 2024 13:46 IST
தமிழர்கள் விவரம் அறிவிப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் அறிவிப்பு
வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் உயிரிழப்பு
வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 21 பேர் உயிரிழப்பு
வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் மாயம்
வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழர்கள் 22 பேரை காணவில்லை என அறிவிப்பு,
வேலைக்காக சென்றவர்களில் ஒருவரும், குடியேறியவர்களில் 129 பேரும் என மொத்தம் 130 தமிழர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு
-
Aug 03, 2024 13:45 IST
யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம்
யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்த சென்னை காவல்துறை.
தலைக்கவசம் அணியாமல், சேதமடைந்த நம்பர் ப்ளேட் கொண்ட வாகனத்தை ஓட்டியதாக யூடியூபர் இர்பான் மீது புகார் எழுந்தது
போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ரூ.1,500 அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை
தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1,000, நம்பர் ப்ளேட் சேதம் அடைந்திருந்ததால் ரூ.500 அபராதம் விதிப்பு
-
Aug 03, 2024 13:30 IST
வயநாடு நிலச்சரிவு - 24 தமிழர்கள் பலி
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 தமிழர்கள் பலி
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு தகவல். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு கேரளாவில் வசிக்கும் 21 தமிழர்கள், வயநாடு சென்ற 4 தமிழர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன 25 தமிழர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
Aug 03, 2024 13:16 IST
வயநாடு நிலச்சரிவு நமக்கான எச்சரிக்கை - சீமான்
வயநாடு நிலச்சரிவை கேரளா, உத்தரகாண்ட், இமாச்சலுக்கான எச்சரிக்கை என்று மட்டும் நாம் பார்க்க கூடாது. இது ஒரு எச்சரிக்கை. நமக்கு வராது என்ற நினைக்க கூடாது. கவனமாக இருக்க வேண்டும் - சீமான்
-
Aug 03, 2024 13:15 IST
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் காவல்துறை உதவியுடன் அகற்றம்
கடல் பகுதியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைப்பு
மொத்தம் 44 கடைகள் அகற்றம் - 3 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கிய போலீசார்
ஜே.சி.பி. மூலம் கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
-
Aug 03, 2024 12:48 IST
மோகன் லால் ரூ.3 கோடி நிதியுதவி
கேரளாவில் நிலச்சரிவு பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிக்கு நடிகர் மோகன் லால் ரூ.3 கோடி நிதியுதவி; தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் நிதி வழங்குகிறார்
-
Aug 03, 2024 12:44 IST
மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட மருத்துவ முகாம்கள்
முதல்கட்டமாக 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், முகாம்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு
-
Aug 03, 2024 12:43 IST
நாமக்கல்லில் வெள்ளப் பெருக்கு - இ.பி.எஸ்ஆறுதல்
நாமக்கல் குமாரபாளையத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈ.பி.எஸ். நேரில் ஆறுதல். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, நிவாரண உதவிகளை வழங்கினார் ஈ.பி.எஸ். வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீர்
-
Aug 03, 2024 12:21 IST
5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேர் கண்டுபிடிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கண்டுபிடித்த கடலோர காவல் படை
முண்டகையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ள சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் பாறைகளின் மேல் 3 பேர் அமர்ந்திருப்பது கண்டுபிடிப்பு
3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு
வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம்.
ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டு வர மீட்புப்படையினர் திட்டம். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வது நாளாக தொடரும் மீட்புப்பணி
-
Aug 03, 2024 11:57 IST
மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு
சேலம்: மேட்டூர் அணையில் இடதுகரை, 16 கண்மதகு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு
-
Aug 03, 2024 11:28 IST
பலி எண்ணிக்கை 360 ஆக உயர்வு
கேரளா: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
Aug 03, 2024 10:54 IST
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மோகன்லால்
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இன்று 5வது நாளாக நீடிக்கிறது.
பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் மோகன்லால்,நேரில் பார்வையிட்டார்
-
Aug 03, 2024 10:37 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை: சீசிங் ராஜா மீது புதிய வழக்குப்பதிவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது புதிய வழக்குப்பதிவு;
மிரட்டி பணம் கேட்டதாக பார் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில், வேளச்சேரி போலீசார் நடவடிக்கை -
Aug 03, 2024 10:16 IST
மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு
காலை 9.30 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 90,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
Aug 03, 2024 09:46 IST
நுங்கம்பாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட மின்சாரக் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
Aug 03, 2024 09:22 IST
வயநாட்டில் 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
கேரளா: வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. பலி எண்ணிக்கை 308 ஆக உள்ளது.
வயநாட்டின் சூரல்மாலா பகுதியில் உள்ள பெய்லி பாலத்தில் இருந்து ட்ரோன் காட்சிகள்.
#WATCH | Kerala: Search and rescue operations in landslide-affected areas in Wayanad entered 5th day today. The death toll stands at 308.
— ANI (@ANI) August 3, 2024
Drone visuals from Bailey Bridge, Chooralmala area of Wayanad. pic.twitter.com/OQ7GpKvwND -
Aug 03, 2024 09:16 IST
மேட்டூர் அணைக்கு 1,10,000 கன அடி நீர்வரத்து
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1,10,000 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
மொத்தமாக 1,10,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
-
Aug 03, 2024 09:02 IST
3 கல்லூரி மாணவர்கள் கைது
மின்சார ரயிலில் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கண்ணன், வேலவன், கத்தி வைத்திருந்த ஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மூவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே அவர்கள் விடுவித்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
-
Aug 03, 2024 08:56 IST
திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு.
ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தகவல். கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக நிலம் தானமாக வழங்கப்பட்ட விபரங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்
-
Aug 03, 2024 08:14 IST
முக்கொம்பு மேலணைக்கு விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி நீர்வரத்து
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரியில் 42,000 கன அடியும், கொள்ளிடத்தில் 1.26 லட்சம் கன அடியும் வெளியேற்றம்.
-
Aug 03, 2024 07:43 IST
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
Aug 03, 2024 07:38 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நீர் வரத்து விநாடிக்கு 1.35 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 1.05 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது
-
Aug 03, 2024 07:32 IST
களைகட்டிய ஆடிப்பெருக்கு பண்டிகை
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், காவேரி ஆற்று படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
புதுமணத் தம்பதிகள் பூஜைகள் செய்து தாலி மாற்றிக்கொண்டனர்.
-
Aug 03, 2024 07:31 IST
தமிழகம் திரும்பிய 21 மீனவர்கள்
தமிழகம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
#WATCH | Tamil Nadu: 21 fishermen released from Sri Lankan prison arrive at Chennai airport.
— ANI (@ANI) August 3, 2024
They were arrested for alleged cross-border fishing. pic.twitter.com/OKY0zATrTb -
Aug 03, 2024 07:31 IST
சித்தா, ஆயுர்வேதா மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்
2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் /பி.யு.எம்.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு வரும் ஆக. 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை
-
Aug 03, 2024 07:31 IST
ஆடிபெருக்கு: கோவையில் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக உள்ளதால் இன்று (ஆக.03) ஆடிபெருக்கு நாளில் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்
- கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தல்
-
Aug 03, 2024 07:30 IST
மீனவர் மலைச்சாமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.