பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடக தேர்தல்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல்
சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கடந்த 2021ம் ஆண்டு திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த பாரதி கணேஷ் (21) என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்க்க நடிகர் சதீஸ், நடிகை த்ரிஷா வந்துள்ளனர். அவர்கள் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சள் உடையில் வந்தனர்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஒவ்வொரு மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும என பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுமார் 2000 பைக்குகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 பைக்குகளை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ரூ10,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ நேரில் பார்த்து வருகின்றனர். நேற்று சட்டசபையில் ஐபிஎல் போட்டிகளை காண முன்னாள் அமைச்சர் வேலுமணி இலவச பாஸ் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
இன்று நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியை 200வது முறையாக தோனி தலைமை தாங்குகிறார். கேப்டன் தோனிக்கு நினைவுப் பரிசை வழங்கி சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கவுரவித்தார்
டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலின் சக்கரத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் பிடிக்கும் போது தீ பிடித்ததால் அத்திப்பட்டு பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது. தீ அணைக்கப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் பேரில் நடவடிக்கை கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க முடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி விசாரிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ஜிப்மருக்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், 3வது மாடியில் இருந்து ஏசி கழன்று விழுந்ததில் காயமடைந்த ஒப்பந்த ஊழியர் திருநாவுக்கரசர் உயிரிழந்தார்.
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், கைதான ஷாருக் சைஃபியை கண்ணூர் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ வைக்கப்பட்ட ரயில் பெட்டிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு உற்பத்தியை சீர்ம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
பீகார் முதல்வருடனான ஆலோசனைக்குப் பின், ராகுல் காந்தி பேட்டி: “நாட்டிற்காக அனைவரும் ஒன்றாக நிற்போம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை இது” என்று கூறினார்.
“பேரிடர் காலத்தில், தடையற்ற தொலைத்தொடர்புக்கு ரூ.7.31 கோடியில், 31 மாவட்டங்களில் டிஜிட்டல் ரிப்பீட்டர்கள் அமைக்கப்படும்.
கடலூர், கொள்ளிடம் ஆற்றில் ரூ.14.50 கோடியில் இடது கரை மேம்படுத்தப்படும். தமிழகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும்”, என்று தெரிவித்தார்.
நெல்லை, அம்பாசமுத்திரம் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வருபவர்களின் பல் பிடுங்கப்பட்டதாக குற்றசாட்டு.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி., பலவீர் சிங்ஹால் மேலும் ஒரு இளைஞர் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பற்களை பிடுங்கி தாக்கியதாகவும், ரத்தம் வந்த நிலையில் மிளகாய் பொடியை காட்டியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
“2019 டிசம்பர் 1ம் தேதி அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும்”, என்று மின்வாரியத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வை கண்டித்து, முன்னாள் மாவட்ட தலைவரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ராகுல் காந்தி மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் ராகுல்காந்தி தகுதி நீக்கம், எதிர்கட்சிகளின் ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
விபத்து தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தால் வழக்கு மட்டுமே பதிய வேண்டும். பஞ்சாயத்து செய்து பேரம் பேசி சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என வேலூர் சரகத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப டி.ஐ.ஜி முத்துசாமி வேலூர் எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளார்
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால் அதிமுக வெளிநடப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செந்தில்பாலாஜி குறித்த கருத்துகளை நீக்கவும் நிர்மல் குமாருக்கு உத்தரவு
டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பான அவதூறு குற்றச்சாட்டுகளை பதிவிடுவதாக நிர்மல் குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு
புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது; சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கான காலக்கெடு நீட்டித்ததற்கு எதிர்ப்பு
சட்டப்பேரவையில் விவாதத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் வெளிநடப்பு
தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வ குமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவீட்
ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என திமுக அரசு நினைக்கிறது
பாஜகவினர் இதற்கு அஞ்சமாட்டோம் – அண்ணாமலை
ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு: திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் இறுதி விசாரணை
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு
ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் இறுதி விசாரணை
தேவைப்பட்டால் 24ம் தேதியும் விசாரிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த ரிட் மனு
இ.பி.எஸ் விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அவகாசம்
பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு. ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது . பயங்கரவாத தாக்குதலாக இல்லை என பஞ்சாப் போலீசார் தரப்பில் தகவல். 2 நாட்களுக்கு முன் 28 தோட்டாக்கள் கொண்ட இன்சாஸ் துப்பாக்கி காணாமல் போனதாகவும் தகவல். சம்பவத்தின் பின்னணியில் ராணுவ வீரர்கள் இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இன்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,830 பேருக்கு கொரோனா தொற்று. 16 பேர் உயிரிழப்பு . இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,215 ஆக உயர்வு.
சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு . சாலையில் மீன்கள் மற்றும் நண்டுகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 45,440க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,680-க்கு விற்பனை
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த பேரணி மீது வான்வழி தாக்குதல். ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார். மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை.
பிகாரில் உள்ள, அராரியா பகுதியில் அதிகாலை 5.30 நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பி.எஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை வரும் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளதால், முன்கூட்டியே விசாரணை நடைபெறுகிறது.