Advertisment

Tamil News Updates: சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு

Tamil News Updates: அனைத்து முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

Advertisment

சென்னையில் தொடர்ந்து 640 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2397 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 756 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 477 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 21, 2024 22:41 IST
    கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த முடிவு; அமைச்சரவை ஒப்புதல்

    கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து ரூ.340 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



  • Feb 21, 2024 21:18 IST
    ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு; விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவிப்பு

    டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதனால், 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 21, 2024 20:26 IST
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆணையத்தின் அறிக்கை அரசை கட்டுப்படுத்தாது; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மை கண்டறியும் அமைப்பு தான் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • Feb 21, 2024 19:50 IST
    வருமான வரித்துறை சட்டவிரோதமாக வங்கிக் கணக்கில் பணமெடுப்பு: காங்கிரஸ் புகார்

    வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இத்தகைய நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.



  • Feb 21, 2024 19:38 IST
    விவசாயிகள் போராட்டம்: கானௌரி எல்லையில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் 12 போலீசார் காயம் - ஹரியானா காவல்துறை

    கானௌரி எல்லையில் விவசாயிகள் போராட்டக்காரர்கள் மிளகாய்ப் பொடியை ஊற்றி போலீஸாரை நாலாபுறமும் சுற்றி வளைத்ததாக ஹரியானா காவல்துறை குற்றம் சாட்டியது. போராட்டக்காரர்கள் தாக்கியதில் சுமார் 12 போலீசார் படுகாயமடைந்தனர். அமைதி காக்க போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று ஹரியான காவல்துறை கூறியுள்ளது.



  • Feb 21, 2024 19:35 IST
    விவசாயிகள் போராட்டம்: ஹரியானா போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு; போராட்டக்காரர் தலையில் காயம் ஏற்பட்டு மரணம் 

    விவசாயிகள் போராட்டத்தில், ஹரியானா போலீஸ் கானௌரி எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டக்காரர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.



  • Feb 21, 2024 19:26 IST
    காங்கிரஸ் கட்சியிடம் ரூ. 65 கோடி வருமான வரி நிலுவை வசூல் 

    காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமான வரி நிலுவை ரூ. 65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. வருமான வரி நிலுவைக்காக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் ரூ. 115 கோடியை வருமான வரித்துறை முடக்கியிருந்த நிலையில், வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி வருமான வரி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது.



  • Feb 21, 2024 18:56 IST
    வண்டலூர் பூங்காவில் புலி உயிரிழப்பு

    சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 21 வயதான விஜயன் என்ற ஆண் புலி இன்று உயிரிழந்தது. வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இந்தப் புலி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 21, 2024 18:54 IST
    சம்பளம் ஒரு மாதம் நிலுவை தொகை வழங்க ஒப்புதல்

     

    “தற்போது பணியில் உள்ள போக்குவரத்து  தொழிலாளர்களுக்கு ஒரு மாத நிலுவைத் தொகை வழங்க பேச்சுவார்த்தையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என சி.ஐ.டி.யு மாநில தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.



  • Feb 21, 2024 18:36 IST
    விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி

    புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி செலுத்தினார். அப்போது, 1000 பேருக்கு அவர் அன்னதானம் வழங்கினார்.



  • Feb 21, 2024 18:35 IST
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தமிழ்நாடு அரசு பதில்


    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை சிபிஐ  விசாரித்து வருவதாக தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    இந்தப் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரிய நிலையில் விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Feb 21, 2024 18:00 IST
    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

    “பீகாரில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த  எடுக்க வேண்டும்;
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியம் வழங்க வேண்டும் வேண்டும்;
    ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்” என சட்டப்பேரவையில் கந்தவர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சின்னத்துரை வலியுறுத்தினார்.



  • Feb 21, 2024 17:55 IST
    ஜி.எஸ்.டி-யால் மாநிலங்களுக்கு நன்மையே: நிர்மலா சீதாராமன்

    சரக்கு மற்றும் சேவை வரியால் மாநிலங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • Feb 21, 2024 17:20 IST
    ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் போலீசில் புகார்


    அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ. வி. ராஜூ மீது நடிகர் கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
    அந்தப் புகாரில் கூவத்தூர் விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

     



  • Feb 21, 2024 16:47 IST
    முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம் மூலம் ரூ. 26.21 கோடி கடன் - கூட்டுறவுத்துறை

    மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15,471 சிறு வணிகர்களுக்கு, முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம் மூலம் ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.



  • Feb 21, 2024 16:31 IST
    தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024; ஸ்டாலின் வெளியீடு

    தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"-யை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்



  • Feb 21, 2024 16:10 IST
    தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை துவக்கம்

    சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் 27 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன



  • Feb 21, 2024 16:01 IST
    தீண்டாமை கொடுமை; ஓட்டுனர் - நடத்துனர் சஸ்பெண்ட் நடவடிக்கை

    அரூர் அருகே தீண்டாமை கொடுமையால் பட்டியல் இனத்தை சேர்ந்த மூதாட்டியை நடத்துநர் பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் பேருந்தின் நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Feb 21, 2024 15:44 IST
    காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி உறுதி

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.



  • Feb 21, 2024 15:25 IST
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    விருதுநகர், ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்துள்ளது



  • Feb 21, 2024 15:12 IST
    6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி சிங் என்பவர் அங்கு குற்ற வழக்குகளில் சிக்கி 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், சென்னையில் இருந்து பஹ்ரைன் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் பிடிபட்டார். ரவி சிங் தேடப்படும் குற்றவாளி என அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் பஞ்சாப் போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இன்று அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு குடியுரிமை அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை சரிபார்க்கும் போது தேடப்படும் குற்றவாளி என தெரியவந்ததால் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்



  • Feb 21, 2024 14:52 IST
    10ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு உத்தரவு 

    நாளை மறுநாள் முதல் 29ஆம் தேதிக்குள் 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Feb 21, 2024 14:51 IST
    முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது வரதட்சணை புகார்

    சோழிங்கநல்லூர் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.கந்தன் மீது மருமகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார். திருமணமான போதே 600 சவரன் நகை கொடுக்கப்பட்டதாகவும், மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவர்  புகார் கொடுத்துள்ளார். 

    கே.பி.கந்தன் மீதும், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். 

     



  • Feb 21, 2024 14:19 IST
    கானௌரி எல்லையில் திரண்ட விவசாயிகள் 

    ஹரியானா மாநிலம் ஜிண்ட் அருகே உள்ள கானௌரி எல்லையில் சுமார் 15,000 விவசாயிகள் போராட்டத்தில் எடுப்பட்டுள்ளனர். அங்கு சுற்றியுள்ள வயல்வெளிகள் விவசாயிகளால் நிரம்பியுள்ளன. அரியானா போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு தொடர்கிறது. கானௌரி எல்லையில் உள்ள விவசாயிகளிடம் ஜே.சி.பி இல்லை.



  • Feb 21, 2024 14:14 IST
     அவதூறு பேச்சு - ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ்

    அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு  சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

    கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாகவும், ஏ.வி.ராஜூவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் வக்கீல் நோட்டீசில் தெரிவித்துள்ளார். 

    மேலும், "24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜூ மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிப்பு" என்றும் வெங்கடாச்சலம் கூறியுள்ளார். 



  • Feb 21, 2024 13:33 IST
    'கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு நஷ்டம் தான் இல்லை': கமல்ஹாசன்

    'முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது; திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்று கொண்டேன். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்

    என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம். கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை..நஷ்டம் தான்.' என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 



  • Feb 21, 2024 13:04 IST
    பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு

     சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை பிப்ரவரி 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 



  • Feb 21, 2024 13:00 IST
    கோரமண்டல் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்

    அமோனியா வாயு கசிவு 20 நிமிடத்தில் முற்றிலும் நிறுத்தம். அமோனியா வாயு கசிவுக்கு காரணமாக கோரமண்டல் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்.

    அமோனியா எடுத்து செல்ல அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி கட்டுப்பாடு அமைக்க ஏற்பாடு. ஆய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • Feb 21, 2024 12:52 IST
    விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு

    டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

    அரியானா - பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம்

    இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயன்ற காவல்துறை

    கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விவசாயிகள்

    முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி விவசாயிகள் போராட்டம்

    சம்பு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ள விவசாயிகள்



  • Feb 21, 2024 12:35 IST
    முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது: கமல்

    முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது

    திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்று கொண்டேன்

    நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்

    என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம்

    கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை..நஷ்டம் தான்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

    கட்சியால் எனக்கு லாபம் இல்லை நஷ்டம் தான்- ம.நீ.ம தலைவர் கமல் பேட்டி 



  • Feb 21, 2024 12:10 IST
    தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி அறிவிப்பு

    அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்பட தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது. அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும். கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக் கூடாது என்பது தான் நோக்கம் - ஈபிஎஸ்

    உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்



  • Feb 21, 2024 11:40 IST
    சைக்கிள் சின்னம் கோரி ஜி.கே.வாசன் வழக்கு

    சைக்கிள் சின்னம் கோரி வழக்கு- விசாரணை தள்ளிவைப்பு

    மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு

    தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு

    "சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி மனு அளித்தும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை"- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் தரப்பு வாதம்

    2019 தேர்தலை போல் தற்போதும், சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்- ஜி.கே.வாசன் தரப்பு



  • Feb 21, 2024 11:29 IST
    பெண்மையை யாரும் இழிவுபடுத்தக் கூடாது: ஜெயக்குமார்

    பெண்மையை யாரும் இழிவுபடுத்தக் கூடாது - நடிகை பற்றிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் A.V.ராஜூவின் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம் 



  • Feb 21, 2024 11:25 IST
    பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை: மேயர் பிரியா 

    பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி  பள்ளி மாணவர்களுக்கு ஷூ சாக்ஸ், 2 செட் சீருடைகள் வழங்க நடவடிக்கை. மாநகராட்சி  பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ரூ.47 லட்சம் நிநி ஒதுக்கீடு- மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் பிரியா 
    அறிவிப்பு 



  • Feb 21, 2024 10:44 IST
    ஃபாலி நாரிமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்



  • Feb 21, 2024 10:42 IST
    விருப்ப மனு விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது

    மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வழங்கப்படுகிறது.  இன்று முதல் வரும் மார்ச் 1ஆம் தேதி வரை விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு பொது தொகுதிக்கு ரூ.20,000, தனித்தொகுதிக்கு ரூ.15,000 விருப்ப மனு கட்டணம்



  • Feb 21, 2024 10:36 IST
    சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா

    சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா



  • Feb 21, 2024 10:34 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு தங்கம் ஒரு கிராம் ரூ.5,810க்கும், ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை



  • Feb 21, 2024 09:59 IST
    மெட்ரோ ரயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு

    சென்னையில், மெட்ரோ ரயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது



  • Feb 21, 2024 09:05 IST
    பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் மரணம்

    பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன்(95) காலமானார் பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் ஃபாலி நாரிமன்



  • Feb 21, 2024 07:40 IST
    அ.தி.மு.க சார்பில் போட்டியிடுபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

    மக்களவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம். மார்ச் 1ம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு. 



  • Feb 21, 2024 07:36 IST
    மநீம தலைவர் கமல்ஹாசன் கூட்டணி குறித்து இன்று அறிவிக்கலாம்

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிடவுள்ளதாக தகவல்



  • Feb 21, 2024 07:36 IST
    ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது

    டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை மீண்டும் தொடங்க உள்ள நிலையில் ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment