Advertisment

Tamil news Highlights: நேபாளம், உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 27-12- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news Highlights: நேபாளம், உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்

பெட்ரோல் டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சசிகலாவிக்கு ஜெயகுமார் பதில்

அதிமுகவில் இணைக்கும் நடப்பதாக சசிகலா சொன்னது வடிகட்டிய பொய். சசிகலாவிற்கும் அதிமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. எடப்பாடி தலைமையில் அதிமுக ஒற்றுமையாக செயல்படுகிறது என்று ஜெயகுமார் கூறியுள்ளார். .

குறைந்த நீர் வரத்து

புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து சரிவு . புழல் ஏரிக்கு நேற்று 453 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 441 கனஅடியாக சரிவு சோழவரம் ஏரிக்கு நேற்று 49 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 38 கனஅடியாக சரிவு .  



  • 22:01 (IST) 27 Dec 2022
    சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி

    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது



  • 21:30 (IST) 27 Dec 2022
    சென்னை தீவுத்திடலில் டிச.30ல் பொருட்காட்சி தொடக்கம்

    சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30ல் பொருட்காட்சி தொடங்குகிறது. இது 70 நாட்கள் நடைபெற உள்ளது



  • 20:37 (IST) 27 Dec 2022
    புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

    கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • 20:12 (IST) 27 Dec 2022
    சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 19:46 (IST) 27 Dec 2022
    இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் உலகம் வியந்து பாராட்டிய ஒன்று- கோவையில் ஜே.பி.நட்டா பேச்சு

    விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் உலகம் வியந்து பாராட்டிய ஒன்று என கோவை பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்



  • 19:36 (IST) 27 Dec 2022
    புதுக்கோட்டையில் இரட்டை குவளை முறையை பயன்படுத்தியதாக புகார் - டீக்கடை உரிமையாளர் கைது

    புதுக்கோட்டை, இறையூர் கிராமத்தில் இரட்டை குவளை முறையை பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், இரட்டை குவளை முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர் மூக்கையா கைது செய்யப்பட்டுள்ளார். அய்யனார் கோயிலில் அனுமதிக்க மறுப்பு எனவும் புகார் எழுந்தது. அய்யனார் கோயிலில் சாமி ஆடிய சிங்கம்மாள் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 19:12 (IST) 27 Dec 2022
    திருப்பதி கோயிலில் முகக்கவசம் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு

    கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்



  • 18:59 (IST) 27 Dec 2022
    அஸ்ஸாமில் எல்லை நிர்ணயம்.. தேர்தல் ஆணையம் தகவல்

    அஸ்ஸாமில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்காக 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:52 (IST) 27 Dec 2022
    டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    மதுபான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்களை தாக்கல் செய்யாத டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.



  • 18:47 (IST) 27 Dec 2022
    பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

    பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • 18:31 (IST) 27 Dec 2022
    கார் மோதி உணவு டெலிவரி பாய் உயிரிழப்பு.. சட்ட கல்லூரி மாணவர் கைது

    டெல்லி அருகே நொய்டாவில் கார் மோதி உணவு டெலிவரி பாய் உயிரிழந்த விவகாரத்தில் சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    சட்ட கல்லூரி மாணவர் பயணித்த வாகனத்தில் நீதிபதி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



  • 18:04 (IST) 27 Dec 2022
    20 காசுகள் சரிந்த இந்திய ரூபாய்

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 காசுகள் வரை சரிந்தது.



  • 17:44 (IST) 27 Dec 2022
    ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிப்பு

    டிச.29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.



  • 17:42 (IST) 27 Dec 2022
    நாசிவழி தடுப்பூசி இன்கோவேக் அறிமுகம்

    நாசிவழி கோரோனா தடுப்பூசியான இன்கோவேக் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசி தனியாருக்கு ரூ.800 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



  • 17:22 (IST) 27 Dec 2022
    சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி உயிரிழப்பு

    தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்து திரும்பவந்த நிலையில், இலங்கை பயணி ராகவேந்திரா என்பவர் சென்னை விமான நிலையத்தில் உயிரிழந்தார்.

    யாழ்பாணத்தை சேர்ந்த 64 வயதான ராகவேந்திரா தனது மனைவியுடன் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்தார்.



  • 17:10 (IST) 27 Dec 2022
    தமிழ்நாட்டில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார்

    கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 16:52 (IST) 27 Dec 2022
    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவு

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 1,546 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்து வைக்க வசதி உள்ள நிலையில், இதில் 80%-ஐ நிரப்பி வைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 16:13 (IST) 27 Dec 2022
    அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பணம் திருட்டு

    மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு வந்த ஒன்றிய செயலாளரிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போனது குறித்து கடையநல்லூர் தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உச்சிமாகாளி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



  • 16:09 (IST) 27 Dec 2022
    மூக்குவழி கொரோனா மருந்துக்கு விலை நிர்ணயம்

    பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ. 800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸ் ரூ.325 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • 16:08 (IST) 27 Dec 2022
    மத்திய அரசின் ஆதார் போல, மாநிலத்தில் மக்கள் ஐடி எண் வழங்க திட்டம்

    மத்திய அரசின் ஆதார் எண் போல, தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் ஐடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் மக்கள் ஐடியை (Makkal ID) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கவுள்ளது.



  • 16:03 (IST) 27 Dec 2022
    உயர்கல்வி படிக்க எம்.பி.பி.எஸ் சான்றுகளை வழங்க மருத்துவக் கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு

    இளநிலை மருத்துவ சான்றை வழங்க கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், உயர்கல்வி படிக்க இளநிலை MBBS சான்றுகளை வழங்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனருக்கு

    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.



  • 15:40 (IST) 27 Dec 2022
    எந்த நிறுவனங்களிடம் எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல்? டாஸ்மாக்கிற்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    மூன்றாம் நபர் வர்த்தகம் தொடர்புடையது என கூறி விவரங்களை வழங்க மறுத்த டாஸ்மாக்குக்கு எதிராக கோவை வழக்கறிஞர் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார். இதில், டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? ஜனவரி 6ம் தேதி சீல் வைத்த கவரில் விவரங்களை சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பிறப்பித்த உத்தரவுப்படி விவரங்களை சமர்ப்பிக்காத டாஸ்மாக்குக்கு ரூ.10,000 அபராதம் விதித்த உயர் நீதிமன்றம் அபராத தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டது.



  • 15:24 (IST) 27 Dec 2022
    கூட்டுறவு சங்க தேர்தல் பதவி காலத்தை குறைக்கும் மசோதா காலக்கெடு முடிவு; திரும்பப் பெற கடிதம் - அமைச்சர் பெரிய கருப்பன்

    கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன்: “கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பதவியை 3 ஆண்டாக குறைப்பது குறித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், காலகெடு முடிந்த அந்த மசோதாவை திரும்ப பெற சட்டத்துறை மூலம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது எந்த வகையில் சரியானது? பதவி காலம் முடிந்த உடன் உரிய நேரத்தில் கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும்” என்று கூறினார்.



  • 14:55 (IST) 27 Dec 2022
    பிரதமர் மோடி - பினராயி விஜயன் சந்திப்பு

    டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு.



  • 14:11 (IST) 27 Dec 2022
    மாநில அளவில் மாநாடு நடத்த அ.தி.மு.க திட்டம் - இ.பி.எஸ் கூட்டத்தில் முடிவு

    தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்தவும் அ.தி.மு.க முடிவு - எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு



  • 14:07 (IST) 27 Dec 2022
    நாசி கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்

    பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 800, அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 325ஆக விலை நிர்ணயம்



  • 13:52 (IST) 27 Dec 2022
    ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து பூஜை

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை

    ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷத்துடன் தரிசனம்



  • 13:49 (IST) 27 Dec 2022
    அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல

    அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்



  • 13:48 (IST) 27 Dec 2022
    சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • 13:48 (IST) 27 Dec 2022
    லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • 13:23 (IST) 27 Dec 2022
    அ.தி.மு.கவை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுபடுத்தவில்லை - இ.பி.எஸ்

    பாஜக குறித்து அவதூறாக பேச வேண்டாம்

    அ.தி.மு.கவை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுபடுத்தவில்லை - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு



  • 12:57 (IST) 27 Dec 2022
    கட்டுப்பாடுகள் இல்லை

    தமிழ்நாட்டில் புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை, பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் விதிகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 12:22 (IST) 27 Dec 2022
    சொத்து வரி உயர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    தமிழ்நாடு அரசு மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிக்கையின்படி மே மாதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    இந்த சொத்து வரி உயர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் தள்ளுபடி செய்தார்.



  • 12:04 (IST) 27 Dec 2022
    எச்சரிக்கை

    பைக் ரேஸில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்; நெல்லையில் புத்தாண்டையொட்டி 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர் என்று நெல்லை காவல் துணை ஆணையர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 11:52 (IST) 27 Dec 2022
    ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது

    இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.



  • 11:17 (IST) 27 Dec 2022
    தினசரி கொரோனா பாதிப்பு

    கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் தான் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியின் போது கூறினார்.



  • 11:15 (IST) 27 Dec 2022
    அடுத்த 3 மணி நேரத்தில் மழை

    திருவாரூர், தஞ்சை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, குமரி, நெல்லை, பெரம்பலூர், தென்காசி, விழுப்புரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 11:11 (IST) 27 Dec 2022
    வெள்ள அபாய எச்சரிக்கை

    முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டிய நிலையில் கேரள பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • 10:45 (IST) 27 Dec 2022
    பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தல்

    இந்திய மாணவர்களின் மருத்துவக் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யுங்கள்" . உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தல்



  • 10:35 (IST) 27 Dec 2022
    சென்னையில் பொருட்காட்சி

    சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது . 70 நாட்கள் பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ளன



  • 10:23 (IST) 27 Dec 2022
    தொடரும் தடை

    சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 10:02 (IST) 27 Dec 2022
    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பாவிற்கு சம்மன். சென்னையில் உள்ள சிபிசிஐடி எஸ்ஐடி அலுவலகத்தில் ஐனவரி முதல் வாரத்தில் ஆஜராக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் சம்மன்



  • 08:49 (IST) 27 Dec 2022
    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு

    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு . ’சி’ மற்றும் ’டி’ பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ. 3,000 மிகை ஊதியம். முழு நேர பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ. 1,000 மிகை ஊதியம் - தமிழ்நாடு அரச



  • 08:46 (IST) 27 Dec 2022
    நன்றி கடிதம்

    முதலமைச்சருக்கு நன்றி கடிதம் அனுப்பிய மூன்றாம் வகுப்பு மாணவி.



  • 08:46 (IST) 27 Dec 2022
    தீவிர சிகிச்சை

    புற்று நோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடம் . இதயம் மற்றும் சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை



  • 08:45 (IST) 27 Dec 2022
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    இ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment