ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கில், இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து வெள்ளிக்கிழமை காலை உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு இ.பி.எஸ் தரப்புக்கு சாதகமாகவும் ஓ.பி.எஸ் தரப்புக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
இலங்கை வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தனிந்தது காடு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, கௌதம் மேனன், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரூ.1,000 கடனுக்கு ரூ.10,000 வரை வட்டி போட்டு வசூலித்த செயலி, உ.பி., ஹரியானா மாநிலத்திற்கு சென்று மோசடி கும்பலை சென்னை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளில் ரூ. 1 கோடி வரை இக்கும்பல் வசூலித்துள்ளது. கேட்கும் பணத்தை கொடுக்காதவர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் திராவிடம் என்று பதிவிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விடர் பக்கத்தில் தமிழ்நாடு என்று பதிவிட்டுள்ளார்.
“இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலரான ஜனாதிபதியிடம் நேரம் கேட்டுள்ளேன். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் குழு அவரைச் சந்தித்து ‘ஆபரேஷன் தாமரை’ – நாடு முழுவதும் மாநில அரசுகளை சீர்குலைக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் பற்றி விவாதிக்க விரும்புகிறோம்” என்று கல்காஜியின் எம்எல்ஏ அதிஷி கூறினார்.
வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு செப்.5ம் தேதி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரளா சென்றுள்ள தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனை கோவளத்தில் சந்தித்த போது, அவருக்கு The Dravidian Model என்ற புத்தகத்தை வழங்கினார்.
சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.வி.கோவிந்தன் அமைச்சரவையில் இருந்து விலகியதால், சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேஷ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். தலசேரி எம்.எல்.ஏ. சம்ஷீர் புதிய சபாநாயகராகிறார்.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. அப்போது மழை பெய்தது.
மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய தொடர் கொலை வழக்கில் 19 வயதான ஷிவ் பிரசாத் என்பவர் கைதானார்.
இவர் காவலாளிகள் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கல்லால் தாக்கியும் அடித்து கொன்றும் வந்துள்ளார்.
மறைந்த பாடகர் பம்பா பாகியா உடலுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அஞ்சலி செலுத்தினார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் நிர்மலா சீதாராமன் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அஜித் குமாருடன் பைக் பயணத்தில் மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார்.
இருவரும் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்துவருகின்றர்.
நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஸ்ரீமதியின் தாயார் சந்தித்துப் பேசினார்.
கள்ளக் குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற ஸ்ரீமதி மரணத்தில் இன்று வரை மர்மம் இருந்துவருகிறது.
கடன் செயலிகள் மோசடியில் ஈடுபடுகின்றன. அவற்றிடம் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார்.
ஆசியக் கோப்பை தொடரின் போது வலது முட்டியில் காயமுற்ற ரவீந்திர ஜடேஜா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் தீஸ்தா செதல்வாத்-க்கு நிபந்தனை பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் விதிக்க கூடாது எனவும் வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் என்பவரின் மனு செப்.16க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரசாந்த் ₨10 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுவிச்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியரான இவர், பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்குஉடந்தையாக இருந்ததாக மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம்செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது
மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 1.5 கோடி தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறேன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம்;
இன்றைய தினம் தர்மம் நீதி வென்றுள்ளது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அறிவிப்புகள், முடிவுகளும் செல்லும் என்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்
இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி, தொடரப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் அதையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துட்டன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி
அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
கலை, அறிவியல் படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அரசு முடிவு
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழும் வகையில் தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ என ஜெயக்குமார் விமர்சனம்
'அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்' என மீண்டும் ட்விட்டர் முகப்பு பக்கத்தில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து என தீர்ப்பு வெளியாகி நிலையில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் 'அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்' மாற்றி பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்.
ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய பிறகு மேல்முறையீடு குறித்து முடிவு.
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தகவல்
சட்ட விதிகளின்படியே பொதுக்குழு கூட்டப்பட்டதாக வாதிட்டோம்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது இனி சட்டப்படி செல்லும் – ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
அஇஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வழக்கு இன்று தீர்ப்புக்காக நீதி அரசர்கள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் முன்பாக தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
“எதுக்கு உன்ன பாத்தேன்னு நினைக்க வைக்குறியே” என்ற பாடல் மூலம் பிரபலமான பிண்ணனி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார். இவர் சமீபத்தில் “பொன்னி நதி” பாடலின் ஆரம்ப வரிகளை பாடியிருந்தார்
சட்ட ஆலோசனைக்கு பிறகு கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம் இது . உள்நாட்டு உற்பத்தியான விமானந்தாங்கி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நகரும் நகரம் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என பிரதமர் மோடி பெருமிதம் வளர்ச்சி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது – பிரதமர் மோடி
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவு – ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க இன்று கேரளா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாளை நடைபெறும் கூட்டத்தில் தென் மாநிலங்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம்.
கொச்சியில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி . இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் அறிமுகம் செய்கிறார்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி உணவு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்.